உங்களுக்கு தெரியுமா? கேட்டு அசத்தும் இணையதளம் !

சில தகவல்களை படித்ததும் நம்ப முடியாத ஆச்சர்யம் உண்டாகும் அல்லவா? அத்தகைய தகவல் களை அடுக்கிறடு இந்த தளம். 
உங்களுக்கு தெரியுமா? கேட்டு அசத்தும் இணையதளம் !
உதாரணத் திற்கு உலகிலேயே எரிமலை கள் இல்லாத ஒரே கண்டம் ஆஸ்திரேலியா என்பது உங்களுக்கு தெரியுமா?

அதே போல பாடும் பறவை என வர்ணிக்கப்படும் ஹம்மிங்பேர்டு தான் பின்னோக்கி பறக்கும் திறன் படைத்த ஒரே பறவை என்பது உங்களுக்கு தெரியுமா?

இரண்டு ஐ எழுத்துக்களை கொண்ட ஒரே ஆங்கில வார்த்தை பனிசறுக்கை குறிக்கும் ஸ்கையிங் என்பது தெரியுமா?

குதிக்க முடியாத ஒரே பாலூட்டி யானை தான்,வெளியே விதை கொண்ட ஒரே பழம் ஸ்டிராபெரி, ஹவாய் மொழியில் 12 எழுத்துக்களே உள்ளன,
85 சதவீத தாவிர உயிர்கள் கடலில் வாழ்கின்றன, ஆஸ்திரேலியா முதலில் நியூ ஹாலன்ட் என்று அழைக்கப் பட்டது

 என வரிசையாக வியப்பூட்டும் தகவல்கள் இந்த தளத்தில் இடம் பெற்றுள்ளன.

எல்லாமே இது வரை பெரும் பாலானோர் அறிந்திறதவை.இப்போது அறியும் போது அப்படியா என கேட்க வைப்பவை.

முக்காலமும் உணர்ந்த என்று சொல்வதை போல எல்லா தகவல்கலுமே உலக நடைமுறை அல்லது இயல்பு சார்ந்தவை.

உங்களுக்கு தெரியுமா என்னு கேள்விக்கு கீழே ,இந்த தகவல்கள் வரிசையாக இடம் பெறுகின்றன.

இவற்றுக்கு அருகிலேயே வரலாறு, நாடுகள், விலங்குகள், என பல்வேறு தலைப்புகளின் கீழ் ஆச்சர்ய தகவல்கள் தொகுக்கப் பட்டுள்ளன.

படிப்பதற்கு எளிதானது.அதே நேரத்தில் மிகவும் சுவாரஸ்ய மானவை.நேரம் போவதே தெரியாமல் படித்து வியக்கலாம்.

ஆச்சர்யமுட்டும் தகவல்களோடு பல அரிய விவரங் களையும் தெரிந்து கொள்ளலாம்.

பெற்றோர்கள் தாராளமாக இந்த தளத்தை தங்கள் பிள்ளகளுக்கு பரிந்துரைக்க லாம்.

வியப்பதற்கு மேலும் சில விவரங்கள்.;

ஆகஸ்டில் தான் அதிக குழந்தைகள் பிறக்கின்றன, நெருபுகோழியின் கண்கள் அதன் மூளையை விட பெரிதானவை,

எச்சிலோடு கலக்காவிடில் உணவின் சுவையை உணர் முடியாது, ஸ்டிராபெரியை விட எலுமிச்சையில் அதிக சர்க்கரை உள்ளது,

பறவைகள் உணவை விழுங்க புவியீர்ப்பு விசை தேவை….

இந்த தளம் எளிமையான முறையில் ஆச்சர்யம் தரும் தகவல்களை பட்டியலிடுகிறது என்றால்
அம்யூசிங்க் ஃபேக்ட்ஸ் இணையதளம் வியப்பூட்டும் விநோத தகவல்களுக் கான வலை வாசலாக விளங்குகிறது என்று சொல்லலாம்.

முகப்பு பக்கத்தில் இன்றைய வியப்பூட்டும் தகவல் எனனும் தலைப்பின் கீழ் விந்தையான தகவலை முன் வைக்கும் இந்த தளம்

விந்தையான செய்திகள், விந்தை விநாடி வினா, விந்தை காட்சிகள் என பல்வேறு தலைப்புகளின் கீழ் விதவிதமான விவரங்களை அளிக்கிறது.

செய்திகள் பகுதியில் நாளிதழ்களில் வெளியாகும் விந்தையான செய்திகளை படித்து ரசிக்கலாம்.

இவற்றை தவிர தனி தனி தலைப்புகளின் கீழ் விவரங்களை படித்தும் வியப்படை யலாம்.

உறுப்பினராகி சக உறுப்பினர்களின் நட்பையும் வளர்த்து கொள்ளலாம்.

என்றாலும் விவரங்களுக் கான உண்மையான வலைவாசல் என்றால் ஃபேக்ட்மான்ஸ்டர் இணைய தளத்தை தான் சொல்ல வேண்டும்.
தகவல் மற்றும் விவரங்களுக் கான கையேடாக அமைந்துள்ள இந்த தளத்தில் தகவல்கள் பல்வேறு தலைப்புகளாக தொகுக்கப் பட்டுள்ளன.

ஒவ்வொரு தலைப்பிலும் துணை தலைப்புகளோடு விவரங்கள் விரிகின்றன.

இணையதள முகவரி:



Privacy and cookie settings