கால் வெடிப்பால் அவஸ்தையா? கவலைய விடுங்க ! #FootCracks

பெரும்பாலான பெண்களுக்கு ஏற்படும் பாத பிரச்னைகளில் ஒன்று பித்த வெடிப்பு, அழகான காலுக்கு எதிரி என்றே சொல்லலாம். இந்த டிப்ஸ்களை பின்பற்றி பாருங்கள், நிச்சயம் மென்மையான பாதத்தினை பெறலாம். 
கால் வெடிப்பால் அவஸ்தையா? கவலைய விடுங்க ! #FootCracks
• வேப்பிலையில் மஞ்சள் சேர்த்து அரைத்து பூசினால் குணமாகும். நீங்கள் தினமும் சொரசொரப்பான கல்லில் காலை வைத்து தேய்த்தாலும் கால் வெடிப்பு மறையும். 

• கால் வெடிப்பிற்கு எலுமிச்சைச் சாறு, பயிற்றம் பருப்பு மாவு, வேப்பிலை, கஸ்தூரி மஞ்சள் ஆகியவற்றை கலந்து, கால் வெடிப்புகளில் பூசி வர, கால் வெடிப்பு மறைந்து, பளபளப்பாகும்.
கால் வெடிப்பால் அவஸ்தையா? கவலைய விடுங்க ! #FootCracks
• இரவில் கை பொறுக்கும் சூட்டில் வெந்நீரில் எலுமிச்சை சாறு பிழிந்து அதில் கால்களை ஊற வைத்து, பிரஷினால் தேய்க்கவும். கால் வெடிப்பு மறையும் வரைக்கும் செய்யவும். குளிக்கும் போது தேங்காய் எண்ணை தேய்த்து குளிக்கவும்.

• ஒரு நாள் விட்டு ஒரு நாள் எலுமிச்சை பழ தோலால் பாதங்களை நன்றாக தேய்த்து கழுவ வேண்டும். இது கால் வெடிப்பில் உள்ள அழுக்குகளை நீக்கி, பாதத்தை சுத்தமாக்கும். மேலும் கிருமிகளை ஒழிக்கும்.

வெயிலால் வரும் சன் ஸ்ட்ரோக்கை தடுப்பதற்கான இயற்கை வைத்தியம் !

• கடுகு எண்ணெயை தினமும் கால் பாதம் மற்றும் கைகளில் தேய்த்து கழுவி வந்தால், சொரசொரப்பு தன்மை நீங்கி, மிருதுவாகும்.
கால் வெடிப்பால் அவஸ்தையா? கவலைய விடுங்க ! #FootCracks
• மருதாணி இலையுடன் எலுமிச்சை சாறு விட்டு விழுதாக அரைத்து கால் வெடிப்பில் பூசி வர கால் வெடிப்பு குணமாகும்.

• பப்பாளிப் பழத்தை நன்றாக அரைத்து, கால் வெடிப்பு உள்ள இடங்களில் தேய்க்க வேண்டும். அது உலர்ந்ததும் தண்ணீர் கொண்டு நன்கு கழுவ வேண்டும். தொடர்ந்து இப்படி செய்து வந்தால் வெடிப்பு படிப்படியாக மறைய ஆரம்பித்து விடும்.

• கற்றாழையில் இருக்கும் ஜெல்லி போன்ற திரவத்தை தினமும் இரண்டு முறை பூசி வந்தால் இரண்டு மாதங்களில் வெடிப்பு சரியாகிவிடும்.

• வெள்ளை ரவை... அரை டீஸ்பூன், உளுத்தம் பருப்பு - அரை டீஸ்பூன். இந்த இரண்டையும் ரவை மாதிரி பொடித்து அதில் எலுமிச்சை சாறை கலந்து பேஸ்ட்டாக்குங்கள்.
இரவு படுப்பதற்கு முன் இந்த பேஸ்ட்டை வெடிப்பின் மேல் தேய்த்து, உலர்ந்ததும் கழுவுங்கள். பிறகு, பாதத்தைத் துடைத்து விட்டு, சிறிது கிளிசரின் தடவுங்கள்.
கால் வெடிப்பால் அவஸ்தையா? கவலைய விடுங்க ! #FootCracks
நாலைந்து நாட்கள் இதைத் தொடர்ந்து செய்துவந்தால், பித்த வெடிப்பு, சேற்றுப் புண் போன்றவை இருந்த இடம் தெரியாமல் போகும்.

• விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை சம அளவில் எடுத்துக் கொண்டு, அதில் சிறிது மஞ்சள் தூளை கலந்து பேஸ்ட் போல் குழைத்துக் கொள்ளவும்.

குண்டான உடம்பை குறைக்கும் மருந்து பூண்டு !

இதை கால் வெடிப்பு உள்ள இடங்களில் தடவி, சிறிதுநேரம் கழித்து கழுவி விடுங்கள். தொடர்ந்து இப்படி செய்து வந்தாலும் வெடிப்புகள் மறையும்
Tags:
Privacy and cookie settings