பருந்து மனிதனுக்கு தரும் பாடம் என்ன?

ஒரு பருந்துக்கு ஆயுட் காலம் எழுபது வருடங்கள். ஆனால் நற்பது வருடத்தில் அதன் அலகுகளும் கால் நகங்களும் இறக்கைகளும் பலமிழந்து விடுகின்றன.
பருந்து மனிதனுக்கு தரும் பாடம் என்ன?
அதற்காக அந்தப் பருந்துக் கூட்டம் சோர் வடைந்து போவ தில்லை. அவை தனது அலகுகள் பலமிழந்தவுடன் நேராக மலைக்குப் பறந்து செல்லுமாம்.

அங்கே மலையிலே தனது அலகை மோதி மோதி உடைத்து விடுமாம். சிறிது நாளில் புது அலகுகள் வளர்ந்து விடும். 

பின்பு அந்த அலகால் தனது கால் நகங் களையும் இறக்கை களையும் கொத்தி கொத்திப் பிடுங்கி விடுமாம்.

அவையும் சிறிது நாளில் புதிதாக வளர்ந்து விடும். அதன் பின்பு அந்த பருந்து முப்பது வருடங்கள் வாழுமாம். வலிகள் இல்லாத வாழ்க்கை இல்லை. வலிகள் பல நிறைந்தது தான் வாழ்க்கை.
Tags:
Privacy and cookie settings