காலையில் கண்டிப்பாக சாப்பிட வேண்டிய பழங்கள் !

1 minute read
காலை உணவை எடுத்துக் கொண்டால் தான் நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். ஆரோக்கியமான காலை உணவை எடுத்துக் கொள்வதுடன், கூடவே பழங்களையும் சாப்பிட்டால் உடலுக்கு நல்லது. 

காலையில் கண்டிப்பாக சாப்பிட வேண்டிய பழங்கள் !
வாழைப்பழம் :

குடலியக்க பிரச்சனையோ அல்லது மலச்சிக்கல் பிரச்சனையோ இருப்பவர்கள், காலையில் வாழைப் பழத்தை சாப்பிட்டால், வயிற்றில் உள்ள நச்சுக்களானது சீரான முறையில் தள்ளப்பட்டு,

செரிமான மண்டலமானது முறையாக இயங்கி, மலச்சிக்கல் பிரச்சனையானது நீங்கும். மேலும் வாழைப்பழத்தை சாப்பிட்டால், உடலின் எனர்ஜியானது நாள் முழுவதும் இருக்கும்.
தர்பூசணி:

கோடையில் தர்பூசணி அதிகம் கிடைப்பதால், இதனை எடுத்துக் கொள்வதும் மிகவும் சிறந்தது. ஏனெனில் இவற்றில் நீர்ச்சத்து அதிம் இருப்பதால், இதனை காலை வேளையில் உட்கொண்டால், அது உடலின் ஆற்றலை நாள் முழுவதும் தக்க வைக்கும்.

உலர் பழங்கள்:

உலர் பழங்களான முந்திரி, பாதாம் மற்றும் உலர் திராட்சை போன்றவைகளில் கார்போ ஹைட்ரேட் இருப்பதால், இதனை காலையில் எடுத்துக் கொண்டால், நாள் முழுவதும் எனர்ஜி இருக்கும். 

குறிப்பாக இது உடல் எடையை அதிகரிக்க நினைப்போருக்கு மிகவும் சிறப்பான உணவுப் பொருள்.

பப்பாளி:
உடலில் தங்கியுள்ள நச்சுக்களை வெளியேற்றும் பழங்களில் முக்கியமான ஒன்று. அது மட்டுமின்றி, சருமம் பொலிவோடு இருக்க வேண்டுமானால், காலையில் பப்பாளியை சாப்பிடுவது நல்லது.
ஆனால் இதை உடல் வெப்பம் அதிகம் இருப்போர் உட்கொள்ளக் கூடாது. இல்லா விட்டால், இது சூட்டைக் கிளப்பி விடும். மேலும் கர்ப்பிணிகள் இந்த பழத்தை சாப்பிடக்கூடாது.
Tags:
Today | 27, March 2025
Privacy and cookie settings