முதுகுவலி முதியவர் களுக்கு மட்டும் தான் வரும் என்றில்லை. இளைஞர் களையும் இப்போது பாடாய் படுத்திக் கொண்டிருக்கிறது. பெண்களும் முதுகுவலி, கழுத்து வலியால் அவதிப் பட்டுக் கொண்டிருக் கிறார்கள்.
5 எலும்புகள் ஒன்றோடு ஒன்று இணைந்த நிலையில் அடி முதுகு பகுதியிலும் (சேக்ரல்), கடைசி 4 எலும்புகள் சேர்ந்து ஒரே எலும்பாய் முதுகின் அடிப்பகுதியிலும் (காக்சிஸ்) அமைந்து உள்ளது.
முதுகின் கட்டமைப்பு எப்படி இருக்கிறது? முதுகில் வலி உருவாக என்ன காரணம்? வலி வராமல் தடுப்பது எப்படி, வந்தால் அதை குணப் படுத்துவது எப்படி? என்பதை விளக்கும் கேள்வி- பதில் பகுதி இது!
ஆன்டிபயாடிக் மருந்துகள் மனிதர்களின் குடலை பாதிக்குமா?
* தாய் வயிற்றில் கருவான எத்தனை யாவது நாளில் சிசுவுக்கு முதுகெலும்பு உருவாகும்? முதலில் எப்படி தோன்றி, படிப் படியாக வளரும்? முதுகெலும்பின் டிஸ்குகள் மற்றும் அதன் கட்டமைப்பு என்ன?
முதுகெலும்பும், முதுகுத் தண்டும் கரு உருவான 18-ம் நாளிலிருந்தே உருவாக ஆரம்பிக்கும். முதலில் முதுகெலும்பு உருவாகி திறந்த படி இருக்கும். கரு உருவான 29-வது நாள் மூடிக் கொள்ளும்.
அதன் நடு மையத்தில் மூளையின் தொடர்ச்சி யான தண்டு வடம், இடுப்பு பகுதி வரையில் நீண்டு இருக்கும். முதுகெலும்பு, ஒன்றுடன் ஒன்றாக இணைக்கப் பட்ட 33 சிறு துண்டு எலும்புகளைக் கொண்டது.
இதில் முதல் 7 எலும்புகள் கழுத்துப் பகுதியிலும் (செர்வைக்கல்), 12 எலும்புகள் மார்பு பகுதி யிலும் (தெராசிக்), 5 எலும்புகள் இடுப்பு பகுதியிலும் (லம்பார்),
5 எலும்புகள் ஒன்றோடு ஒன்று இணைந்த நிலையில் அடி முதுகு பகுதியிலும் (சேக்ரல்), கடைசி 4 எலும்புகள் சேர்ந்து ஒரே எலும்பாய் முதுகின் அடிப்பகுதியிலும் (காக்சிஸ்) அமைந்து உள்ளது.
இவற்றில் கடைசி 9 எலும்புகள் அசைவற்ற தாகவும், இதர 24 எலும்புகள் அசையக் கூடியதாகவும் இருக்கும். எலும்புகளுக் கிடையில் மெல்லிய ஜவ்வு போன்ற டிஸ்க் பகுதி அமைந்துள்ளது.
இந்த டிஸ்க்குகள் உடலில் ஏற்படும் அதிர்வை தாங்கிக் கொள்ள பயன் படுகிறது. முதுகெலும்பு நேராக இல்லாமல் சில வளைவு களுடன் இருக்கும்.
முதுகெலும் பின் நடுவில் இருக்கும் தண்டு வடத்தில் இருந்து 31 ஜோடி நரம்புகள் முதுகெலும்பு களுக்கிடையில் உள்ள துவாரத்தின் வழியாக வெளியேறி உடலின் பல முக்கிய உறுப்பு களுக்கு சென்று செயல்பட வைக்கிறது.
முதுகெலும் பின் நடுவில் இருக்கும் தண்டு வடத்தில் இருந்து 31 ஜோடி நரம்புகள் முதுகெலும்பு களுக்கிடையில் உள்ள துவாரத்தின் வழியாக வெளியேறி உடலின் பல முக்கிய உறுப்பு களுக்கு சென்று செயல்பட வைக்கிறது.
* எத்தனை வயது வரை முதுகெலும்பு வளரும்? வேகமாக வளரும் கால கட்டம் எது?
குழந்தை பிறந்ததில் இருந்தே எலும்பு களின் வளர்ச்சி வேகமாகவும், சீராகவும் இருக்கும். எலும்பின் வளர்ச்சி 18 வயது வரையில் வேகமாகவும், அதன்பின் 25 வயது வரை மிதமாகவும் இருக்கும்.