கொசு விரட்டிகள்: எது பெஸ்ட்?

ரு சின்ன கொசு... நம்மை படுத்தும்பாடு சொல்லி மாளாது. அது கடித்தால் லேசாக வலிக்கும் போனால் போகிறது என்று விட்டுவிட முடியாது.

காரணம், உயிர்க் கொல்லி நோய்களான மலேரியா,  டெங்கு மற்றும் யானைக்கால்  போன்றவை பரவ முக்கிய காரணம் இந்த கொசுக்கள் தான்.

தவிர, நிம்மதியான தூக்கத்துக்கு முதல் எதிரியாக இருப்பதுவும் இந்த கொசுக்கள் தான்.கொசுக்களில் சுமார் 2,700 வகைகள் இருக்கின்றன. 

மூன்று விதங்களில் இவை உற்பத்தி ஆகிறது. நிரந்தரமாக தேங்கி நிற்கும் தண்ணீரில் இவைகள் முட்டையிட்டு பெருகுகின்றன.

இதை தடுக்க நம் வீட்டை சுற்றி தண்ணீர்த் தேங்காமல் பார்த்துக் கொள்வது மிகவும் அவசியம். 

அது முடியாதபோது, கொசுக்களிட மிருந்து தப்பிக்க நமக்கு உதவியாக இருப்பவை கொசு விரட்டிகள்.

இந்த கொசு விரட்டிகள் இரண்டு வகைகளில் விற்பனை ஆகின்றன. 

ஒன்று மின்சாரம் இல்லாமல் இயங்கும் கொசுவத்தி சுருள் (காயில்), இரண்டாவது,


மின்சாரத்தில் இயங்கும் மேட்கள் மற்றும் லிக்விட்கள்.மின்சார கொசு விரட்டிகளை விட காயில்களாக இருக்கும் கொசு விரட்டிகள் விலை குறைவு. 

பயன்படுத்து வதும் எளிது. ஆனால், இதிலிருந்து வெளிப்படும் புகை பல்வேறு பக்க விளைவுகளை ஏற்படுத்த லாம்.

அலர்ஜி, காய்ச்சல் போன்றவற்றை ஏற்படுத்தலாம். உடலில் பூசிக் கொள்ளும் கொசு விரட்டி கிரீம்களை பயன்படுத்தும் போது

அவை கண், மூக்கு, வாய் பகுதிகள், காயம்பட்ட பகுதிகளில் படாதபடி பார்த்துக் கொள்வது நல்லது. 


வெளியில் தெரியும் உடல் பகுதியில் மட்டுமே இவற்றைப் பூசவேண்டும். இப்படி பூசும் போது மிகவும் இறுக்கமான ஆடை அணிவதைத் தவிர்க்க வேண்டும்.

இந்த ஆய்வுகள் தென்னிந் தியாவில் மத்திய நுகர்வோர் விவகாரத் துறையின் அனுமதியுடன் நடத்தப் பட்டது.

கொசுவத்தி சுருளில் பைரெத்ரம் என்கிற செடியிலிருந்து எடுக்கப்படும் ரசாயனம் பயன்படுத்தப் படுகிறது.


1980-ம் ஆண்டுக்குப் பிறகு ஆவியாகும் எலெக்ட்ரானிக் கொசு மேட்கள் பிரபலமாகி இருக்கிறது. 

இவற்றிலிருந்து வாடை எதுவும் வராது என்பது சிறப்பான அம்சம். அதே நேரத்தில், இது செயல்பட மின்சாரம் தேவை.

ஆனால், கொசுவத்தி சுருளோடு ஒப்பிடும்போது விலை மிகவும் அதிகம்..... விகடன்
Tags:
Privacy and cookie settings