முகத்தை மட்டுமா உங்கள் முதுகையும் பராமரியுங்கள் !

நம்மில் நிறைய நண்பர்களுக்கு முதுகில் பரு மற்றும் கொப்பளங்கள் இருப்பது உண்டு அதை நாம் கவனிப்பதே இல்லை . நாம் அதை அப்படியே விட்டு  விடகூடாது .
முகத்தை மட்டுமா உங்கள் முதுகையும் பராமரியுங்கள் !
முகம் கை கால் என ஒவ்வொன் றிற்கும் தரும் முக்கியத் துவத்தை முதுகு பகுதிக்கு தருவதில்லை. நம்மில் பெரும் பாலோனோர் அதிகம் கவனிக்காமல் விடும் பகுதியும் முதுகு தான்.

இதனால் முதுகு பகுதியில் அழுக்கு மற்றும் எண்ணெய் சேர்ந்து பருக்கள் தோன்று விடுகின்றன. எனவே முதுகை அழகுகாக்க கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள்.

முதுகை மென்மையாகவும், அழகாகவும் வைத்துக் கொள்ள அவர்கள் கூறும் ஆலோசனையை பின்பற்றுங்கள்.
முதுகுக்கு ஸ்க்ரப் செய்யலாம்

குளிக்கும் போது முகம், கை, கால்களுக்கு கொடுக்கும் முக்கியத் துவப்போல முதுகையும் கவனிக்க வேண்டும். தலைக்கு குளிக்கும் போது வழியும் எண்ணெய்கள் முதுகில் தான் தேங்குகின்றன.

எனவே நீளமான பிரஷ் உபயோகித்து முதுகை நன்கு தேய்த்து சுத்தம் செய்ய வேண்டும். முதுகுப் பகுதியை முழுவதாக சுத்தம் செய்ய இப்பொழுது நீண்ட கைப்பிடி உள்ள பிரஷ் கடைகளில் கிடைக்கிறது.

அவற்றை வாங்கி உபயோகிக்கலாம். முதுகை `ஸ்க்ரப்’ செய்வதால் உயிரிழந்த சருமம் அகன்று முதுகு புத்துயிர் பெறும். அவ்வாறு தொடர்ந்து செய்யும் போது புது சருமம் கிடைக்கும்.

முகத்தை மட்டுமா உங்கள் முதுகையும் பராமரியுங்கள் !
கடையில் கிடைக்கும் ஸ்க்ரப் உபயோகிக்க விருப்ப மில்லை என்றால், வீட்டிலேயே தயாரித்துக் கொள்ளலாம். உப்பு சிறந்த ஸ்க்ரப் ஆக பயன் படுகிறது.

உப்பை நன்றாக பொடித்து அதை நன்றாக முதுகு, கழுத்துப் பகுதிகளில் தேய்த்து ஸ்க்ரப் செய்வதன் மூல இறந்த செல்கள் உதிர்ந்து விடும். ரத்த ஓட்டம் சீராகும்.

ஆலிவ் ஆயில் மற்றும் மசாஜ்
ஒரு சிலருக்கு முதுகு வறண்டு போய் விடும். இவர்கள் ஒரு ஸ்பூன் பேபி ஆயில் விட்டு நன்றாக முதுகுப் பகுதியை மசாஜ் செய்யவும். இதனால் முதுகு மென்மை யாகும்.

இரண்டு டேபிள் ஸ்பூன் சர்க்கரை யுடன் நான்கு டேபிள் ஸ்பூன் ஆலிவ் எண்ணெய்யை சேர்க்கவும். இதனை நன்றாக கலந்து.

முதுகை நன்றாக தேய்க்கவும். பிறகு கழுவவும். உலர்ந்த சருமத்திற்கு ஈரத்தன்மை கிடைக்கும்.

எண்ணெய் பசை சருமம் கொண்டவர்கள் முதுகை கவனிக்காமல் விடுவதால் முதுகு மங்கலாகும். இதனால் முதுகில் கரும்புள்ளிகள், பரு தோன்றும்.
முதுகை அழகாக்கி பருவை போக்க இரண்டு தேக்கரண்டி சர்க்கரை யுடன் ஆறு தேக்கரண்டி எலுமிச்சை சாற்றை கலந்து முதுகை நன்றாக தேய்த்து கழுவவும். எண்ணெய் பசை நீங்கி சருமம் பளிச் என்று ஆகும்.
முகத்தை மட்டுமா உங்கள் முதுகையும் பராமரியுங்கள் !
வாரத்தில் ஒரு முறை சந்தனம் மற்றும் பன்னீர் கலந்த கலவையை முதுகில் தடவவும். உலர்ந்த பிறகு கழுவி விடவும்.
கீலாய்டு [Keloid] தழும்பு இது வேற !
இது முதுகிற்கு பொலிவு கிடைக்கும். இவை தவிர கூன் போடாமல் நிமிர்ந்து நடப்பதும் முதுகு சுருக்கமின்றி அழகாக தெரியும்.
Tags:
Privacy and cookie settings