யானைகளின் பிளிறலில் இருந்து, அவற்றின் வயதை எளிதாக கணக்கிடலாம், என்று விலங்கு மொழி வல்லுனர்கள் கூறியுள்ளனர். கனடாவில் உள்ள, டல்ஹவுசி பல்கலைக் கழகத்தின், விலங்குகள் மொழி வல்லுனர்,
ஆன்ட்ரூ ஹார்ன் இது குறித்து கூறியிருப்பதாவது,
வேட்டையாடல், மனிதர்களின் குறுக்கீடுகள், உணவு கிடைக்காமை காரணமாக, மனிதர்களுக்கும், யானைகளுக்கும் இடையில் ஏற்படும் பெரும் மோதல்,
உலகம் முழுவதும் உள்ள யானைகளின் எண்ணிக்கை குறைவதற்கான முக்கிய காரணமாகும். பல கிலோ மீட்டர் களுக்கு அப்பால் இருந்தாலும், யானைகளின் பிளிறலை மனிதர்களால் கேட்க முடியும்.
அடர்ந்த காடுகளில் உள்ள யானைகளை, அவற்றின் பிளிறல்களில் இருந்து அவற்றின் இருப்பிடத்தை மட்டும் அறிய முடியும். இந்த சூழலில், அவற்றின் வயதையும், எண்ணிக்கையையும் அறிய முடியாது.
யானைகளின் பிளிறல்களில் இருந்து, அவை தங்கள் இனத்தை அழைப்பது, எதற்காக அழைக்கிறது என்பதை தீவிரமாக கண்காணிப்பதன் மூலம் அறியலாம்.
பதிவு செய்யப்பட்ட பிளிறலை விட, நேரடியான பிளிறல்களின் எண்ணிக்கையை
கணக்கிடுவதன் மூலம் அதன் வயதை துல்லியமாக கணக்கிட முடியும். இவ்வாறு, ஆன்ட்ரூ கூறியுள்ளார்.
கணக்கிடுவதன் மூலம் அதன் வயதை துல்லியமாக கணக்கிட முடியும். இவ்வாறு, ஆன்ட்ரூ கூறியுள்ளார்.