தூக்கமின்மை பிரச்னை... ஆழ்ந்த தூக்கத்துக்கு !

கட்டாந் தரையில் துண்டை விரித்தேன்... கண்ணில் தூக்கம் சொக்குமே... அது அந்த காலமே! மெத்தை விரித்தும், பன்னீர் தெளித்தும்... கண்ணில் தூக்கம் இல்லையே... இது இந்த காலமே!’
தூக்கமின்மை பிரச்னை... ஆழ்ந்த தூக்கத்துக்கு !
தூக்கத்தின் ரகசியத்தைப் பளிச்சென போட்டு சொல்லும் பாடல் வரிகள் தான் இது!
கடின உடல் உழைப்பும், உயிரியல் கடிகாரத்தை மீறாத வாழ்க்கை முறையையும் கொண்டவர் களுக்கு தூக்கம் என்பது வரம்!

ஆனால், கடின உடல் உழைப்பு இல்லாத அலுவலகப் பணியாளர்கள் மற்றும் தொழில் அதிபர்கள் பலருக்கும் நிம்மதியானத் தூக்கம் என்பது கனவே.

இதே பிரச்னை இவர்களுக்கு தொடர்ந்து நீடித்தால், உடலும் மனமும் சோர்ந்து விடுவதோடு புதுப்புது நோய்களையும் வரவழைத்து விடும்.

'நம் வாழ்க்கையில் மூன்றில் ஒரு பகுதியைத் தூங்கியே கழிக்கிறோம். உடம்புக்குத் தேவையான ஓய்வும், புத்துணர்ச்சியும் தூக்கத்தில் மட்டும் தான் கிடைக்கிறது.

ஏ.சி. அறை, சொகுசு மெத்தையில் தூக்கத்தைத் தேடினாலும், இயல்பான வாழ்க்கை முறையை பின்பற்றும் போது தான் தூக்கமும் கண்களைத் தழுவும் என்பதே மருத்துவ உண்மை!

இரவில், ஏழு முதல் எட்டு மணி நேரத் தூக்கம் அவசியம். நல்ல ஆழ்ந்த தூக்கம் தூங்குபவர்கள் ஆறு மணி நேரம் தூங்கினாலே போதும். 

நன்றாகத் தூங்கி எழுபவர்களுக்கு இதயம் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் இருக்காது என்கிறார்கள் ஆராய்ச்சி யாளர்கள்.
படுக்கை அறையிலும் லேப்டாப், செல்போன் சகிதம் அலுவலகம் நடத்து பவர்களும் பகலில் தூக்கம் இரவில் வேலை என்று வாழ்க்கை முறையையே தலைகீழாக மாற்றிக் கொண்டவர்களும் இன்றைய நாளில் பெருகி விட்டார்கள்.

இதனால், சுறுசுறுப்பின்மை, கவனமின்மை போன்ற தொல்லைகளுக்கு ஆளாகி, நல்லத் தூக்கமின்றி தவிப்பவர்களும் ஏராளம். 

பாலில் உள்ள டிரிப்டோபன் அமினோ ஆசிட்டுக்கு (Trypto-phan amino ac) தூக்கத்தை வரவழைக்கும் சக்தி இருப்பதால், படுக்க செல்லும் முன் மிதமான சூட்டில் ஒரு கிளாஸ் பால் அருந்தலாம். 

வாழைப்பழம், ஓட்ஸ், தேனிலும் இந்த அமிலம் அதிக அளவில் இருக்கிறது. டீ, காபி போன்ற பானங்கள் தூக்கத்தை விரட்டி யடிக்கும். 

எனவே, தூங்குவதற்கு ஐந்து மணி நேரம் முன்பாகவே பானங்கள் அருந்துவதை நிறுத்திக் கொள்வது நல்லது. 

புகை, மது போன்ற தீயப் பழக்கங்களும் தூக்கத்துக்கு எதிரான செயல்கள் தான். வயிறு முட்ட, சாப்பிட்டு விட்டு தூங்குவதும் நல்லதல்ல. 

குறைந்த பட்சம் தூங்குவதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்பாகவே சாப்பாட்டை முடித்துக் கொள்ள வேண்டும். இரவில் தூங்குவதற்கு ஐந்து மணி நேரத்துக்கு முன்பே உடற் பயிற்சியும் செய்து முடித்து விடுவது நல்லது!
படுக்கை அறை என்பது உறங்குவதற்கு மட்டுமே. வீடு, அலுவலகப் பிரச்னைகள் பற்றிப் பேசுவது, கணக்கு வழக்கு பார்ப்பது, பட்ஜெட் போடுவது 

இவற்றை யெல்லாம் படுக்கை யறையில் வைத்துக் கொண்டால், நித்திரை கெடுவதோடு மன நிம்மதியும் போய் விடும்.

எனவே படுக்கையில் சாய்வதற்கு முன்னரே, அன்றையப் பொழுதில் நடந்த நிகழ்வுகளையும் அடுத்த நாள் செய்யவேண்டிய வேலை களையும் மனதுக் குள்ளேயே ஓட்டிப் பார்த்துக் கொள்ளுங்கள்.

இந்த எண்ண ஓட்டங்களை முழுவதுமாக ஓட்டிப் பார்த்து விட்டு நிம்மதியாகப் படுக்கையில் சாய்வதே ஆழ்ந்த தூக்கத்துக்கு அழைத்துப் போகும்! டாக்டர் மதனமோகன். டாக்டர் விகடன்
Tags:
Privacy and cookie settings