அசைவ உணவுகளை அதிகம் உண்பவர்களுக்கு ஆபத்து !

சைவ உணவை விட, அசைவ உணவு உண்பவர்கள் புற்று நோயால் இறக்கும் ஆபத்து அதிகம் என, அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டு பிடித்து ள்ளனர்.
அசைவ உணவுகளை அதிகம் உண்பவர்களுக்கு ஆபத்து !
அமெரிக்கா வின் தெற்கு கலிபோர்னியா பல்கலைக் கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள், 50 வயதிற்கு மேற்பட்ட, 6,318 பேர்களிடம், இதுகுறித்து ஆய்வு நடத்தினர்.

ஆய்வறி க்கையில் கூறப்பட்டு உள்ள தாவது, அசைவ உணவுகள் மற்றும் சீஸ் உணவு வகைக ளால், புற்று நோயால் பாதிக்கப் பட்டு, பலர் மரணத்தின் விளிம்பில் உள்ளனர்.

நடுத்தர வயதில் உள்ளவ ர்கள் அதிகளவு புரதம் உள்ள உணவு களான, இறைச்சி, பால் மற்றும் சீஸ் போன்ற உணவுகளை உட்கொள்ப வர்களின் உடல் நலம், விரைவில் பாதிக்கப் படுகிறது.

புற்று நோய் குறைவான புரதச் சத்துள்ள உணவு களை எடுத்துக் கொண்டால், புற்று நோய் தாக்கும் அபாயம் குறைவு.
தாவர உணவுக ளில் இருந்து கிடைக்கும் புரதச் சத்துக்கள், மாமிச புரதத்தைப் போன்று அபாயகர மானவை அல்ல. 

கார்போ ஹைடிரேட் அல்லது கொழுப்பு குறைவான உணவுகள், புற்றுநோய் விகிதத்தை குறைக் கின்றன.

நடுத்தர மற்றும் குறைவான புரதத்தை எடுத்துக் கொள்வதன் மூலம், இறப்பு விகிதத்தை, 21 சதவீதத் திற்கு குறைக் கலாம், என அமெரிக்க விஞ்ஞானிகள், ஆய்வறி க்கையில் கூறி யுள்ளனர்.
Tags:
Privacy and cookie settings