நமக்கு ஷாக் அடித்தால் முதலில் என்ன செய்ய வேண்டும்?

5 minute read
இன்றைய வாழ்வில் மின்சாரம் என்பது மிகவும் இன்றியமையாத ஒன்று. மின்சாரம் நமக்குத் தருகிற நன்மைகளும் வசதிகளும் ஏராளம்.
நமக்கு ஷாக் அடித்தால் முதலில் என்ன செய்ய வேண்டும்?
என்றாலும், மின்சாரத்தையும் மின் கருவிகளையும் அலட்சியமாகவோ, தவறாகவோ பயன்படுத்தினால், அவை தரும் ஆபத்துகளும் அதிகம்.
மின் விபத்து ஏற்படுவது ஏன்?
நமக்கு ஷாக் அடித்தால் முதலில் என்ன செய்ய வேண்டும்?
வீட்டிலும் சரி, அலுவலகங்களிலும் சரி, மின் விபத்து ஏற்படுவதற்குப் பல காரணங்கள் இருந்தாலும், முக்கிய காரணங்கள் இவையே: தரமான மின் கருவிகளைப் பொருத்தாதது.

மின்கருவிகள் தரமாக இருந்தாலும், அவற்றை மிகச் சரியாகப் பொருத்தாதது, பாதுகாப்பின்றி பயன்படுத்துவது, ஈர உடலோடு மின் கருவிகளைத் தொடுவது.

ஆபத்துகள் எவை?
நமக்கு ஷாக் அடித்தால் முதலில் என்ன செய்ய வேண்டும்?
மனித உடல், மின்சாரத்தைக் கடத்தும் என்பதால், நாம் மின்சாரத்தைத் தொடும் போது, மின்னோட்டம் உடல் முழுவதும் பரவி, இதயம், மூளை, நுரையீரல் போன்ற முக்கிய உறுப்புகளின் இயக்கத்தை நிறுத்தி, ஆபத்தை வரவழைக்கிறது.

இந்த உணவை சாப்பிட்டு வந்தால் புற்று நோய், ரத்த அழுத்தம் குறைபாடு வராது !

உடலில் பாயும் மின்சாரத்தின் அளவு, மின்சாரத்துடன் உடல் தொடர்பு கொண்டிருக்கும் நேரம் இவற்றைப் பொறுத்து, மூன்று வகை பாதிப்புகள் நமக்கு ஏற்படுகின்றன.

(கடுமையான மின்னல் தாக்கும் போதும் இதே ஆபத்து நிகழ்வதுண்டு). மின்சாரம் தொட்ட இடத்தில் தீப்புண்கள் உண்டாவது. தோல், தசை, நரம்பு போன்ற உடல் பகுதிகள் அழிந்து போவது. மயக்கம் அடைவது; அதைத் தொடர்ந்து மரணம் நிகழ்வது.
Tags:
Today | 7, April 2025
Privacy and cookie settings