ஆளை அமைதியாக கொல்லும் அலுமினிய பாத்திரங்கள் !

பெரும்பாலான இந்திய வீடுகளில் பயன் படுத்தப்படும் ஒரு பொருள் தான் அலுமினிய பாத்திரங்கள். இந்த பாத்திரங்களைத் தான் பலரும் தங்களின் வீடுகளில் பயன்படுத்தி வருகிறார்கள். 



ஆனால் அலுமினிய பாத்திரத்தில் உணவை சமைத்து சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்பது தெரியுமா?

ஆம், அலுமினிய பாத்திரத்தில் சமைத்து சாப்பிடுவதால், சமைக்கும் உணவில் அலுமினியம் கலந்து விடுகிறது. பின் அவற்றை உட்கொள்ளும் போது, அவை இரத்த நாளங்கள் வழியே சில உறுப்புக்களில் தங்கி, ஆரோக்கி யத்தை பாதிக்கிறது. 

அலுமினிய பாத்திரத்தில் சமைத்து சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்சனைக்கு காரணம், அதில் உள்ள அயனிகள் அல்லது மின்துகள்கள் தான். இந்த அயனிகள் மூளைக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கும்.
வேலைக்கு செல்பவர்களுக்கு டிப்ஸ் !
தொடர்ச்சியாக அலுமினிய பாத்திரத்தில் சமைத்து சாப்பிட்டு வந்தால், நாளடைவில் அல்சைமர் என்னும் ஞாபக மறதி நோய் ஏற்படுவதற் கான வாய்ப்பு அதிகம் உள்ளது.

அதுமட்டுமின்றி, அலுமினியம் சிறுநீரகங் களுக்கும் கேடு விளைவிக்கும். சரி, இப்போது அலுமினிய பாத்திரத்தில் சமைத்து சாப்பிடுவதால் சந்திக்கும் பிரச்சனைகள் என்ன வென்று பார்ப்போமா!

அலுமினிய பாத்திரங் களால் நரம்பு மண்டலம் பாதிக்கப்படும். இதற்கு அதில் உள்ள மின்துகள்கள் தான் காரணம். இதனால் தான் அல்சைமர் நோய் ஏற்படுகிறது.

அலுமினிய பாத்திரங்கள் மனித மூளையைத் தான் தாக்கும். அதிலும் தொடர்ந்து அலுமினிய பாத்திரங் களைக் கொண்டு சமைத்து சாப்பிட்டு வந்தால், அதனால் மூளை நோய்கள் மற்றும் ஞாபக மறதி போன்றவை ஏற்படும்.



தொடர்ச்சியான அலுமினிய பாத்திரங்களில் சமைத்து சாப்பிட்டு வந்தால், ஒரு கட்டத்தில் திடீரென்று அதிகப் படியான சோர்வை சந்திக்கக் கூடும்.

சோர்விற்கான காரணத்தைக் கண்டறிய மருத்துவ பரிசோதனை சோதனையை மேற்கொண்டால், அதற்கு காரணமாக இருப்பது அலுமினிய பாத்திரங் களாகத் தான் இருக்கும். 

அலுமினியம் எலும்பின் வளர்ச்சியைத் தடுத்து, அதில் அதிகப்படியான தேய்வை ஏற்படுத்தி, அதிகமாக எலும்பு முறிவு ஏற்படும் அபாயத்தை ஏற்படுத்தும்.

அலுமினியம் பாத்திரத்தை அளவுக்கு அதிகமாக தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், பெருங்குடல் பாதிக்கப் படுவதோடு, அதனைத் தொடர்ந்து சிறுநீரகங் களும், இரத்தமும் பாதிக்கப்படும்.
பற்கள் உடைந்து போவது ஏன்?
அலுமினியம் புற்று நோயை ஏற்படுத்தும் என்று எவ்வித ஆராய்ச்சி யிலும் நிரூபிக்கப் படாவிட்டா லும், இதனை தொடர்ந்து உட்கொள்வதன் மூலம் எப்படி பெருங்குடல் பாதிக்கப்படுமோ,

அதேப்போல் அதிகப் படியான பாதிப்பின் காரணமாக பெருங்குடல் புற்றுநோய் வரும் அபாயம் உள்ளது என்ற நம்பிக்கையும் மக்கள் மத்தியில் உள்ளது.

எதற்கு இந்த வீண் வம்பு, எது ஆரோக்கியமான சமையல் பாத்திரம் என்று தெரிந்து அவற்றைப் பயன்படுத்தி வாருங்களேன். 



வேண்டு மெனில் அலுமினிய பாத்திரங் களுக்கு சிறந்த மாற்றாக ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பயன் படுத்தலாம். அலுமினிய பாத்திரங் களுடன் ஒப்பிடுகையில் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாத்திரங் களால் ஏற்படும் பாதிப்பு குறைவே. 
இருப்பதிலேயே எவ்வித பக்க விளையும் இல்லாத ஒரு வகையான பாத்திரம் தான் மண் பாத்திரங்கள். இதனால் உடல் ஆரோக்கியம் பாதுகாக்கப் படுவதோடு, சமைக்கும் போது உணவின் சுவையும் அதிகரிக்கும்.
Tags:
Privacy and cookie settings