‘‘டூத் பேஸ்ட் எந்த முறையில் தயாரானது என்பதை குறிக்க சிறிய கட்டம் ஒன்று டூத் பேஸ்ட்டின் கீழ் குறிப்பிடப் பட்டிருக்கும் என்று இணைய தளங்களில் ஒரு தகவல் பரவி வருகிறது.
பச்சை நிற கட்டமாக இருந்தால் 98 சதவிகிதம் இயற்கையானது, ஊதா நிறம் இயற்கையானது மற்றும் மருத்துவ குணங்கள் கொண்டது, சிவப்பு நிறம் இயற்கையான முறை மற்றும் வேதிப் பொருட்கள் கலந்தது,
கருப்பு நிற கட்டம் கொண்ட டூத் பேஸ்ட் முழுக்க வேதிப்பொருட்களால் ஆனது என்று குறிப்பிடுகிறார்கள்.
அதனால் பச்சை நிறமும், ஊதா நிற கட்டம் கொண்ட டூத் பேஸ்ட்டை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று சமூக வலைத் தளங்களில் தகவல்கள் நிறைய பகிரப்படு கின்றன.
ஆனால், இந்த Toothpaste color code பற்றி எந்த ஆதாரப்பூர்வமான தகவலும் மருத்துவ உலகில் இல்லை. இது முழுக்க வதந்தி தான்.
டூத் பேஸ்ட் வாங்கும் போது முடிந்த வரை நம்பகமான பிராண்டுகளை வாங்கலாம்.
அசிடிட்டிக்கு மாத்திரை சாப்பிடுபவரா நீங்கள்?முடிந்தால் பல் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று டூத் பேஸ்ட் வாங்குவது இன்னும் பாதுகாப்பானது.