இதயத்தை பாதுகாக்கவும், ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும் டஜன் கணக்கில் பல உடற் பயிற்சிகள் உள்ளன. இத்தகைய உடற் பயிற்சிகளின் நோக்கம், உடல் உழைப்பை அதிகரிக்கச் செய்வதே ஆகும்.
இதன் மூலம் இதயத்தை நல்ல உறுதியுடனும், ஆரோக்கி யத்துடனும் வைத்துக் கொள்ள முடியும். எப்படி யெனில் இவ்வகை பயிற்சிகள் இதயத் துடிப்பின் வேகத்தை அதிகரிக்கச் செய்வதால், இதயம் ஆரோக்கியமாக இருக்கிறது.
பொதுவாக இதயத்தை நல்ல நிலையில் வைத்திருப்பதன் மூலம், உடல் ஆக்ஸிஜனைப் பயன்படுத்தும் முறையில் மிகச்சிறந்த முன்னேற்றம் காணப்படும்.
அதிலும் இதயம் ஆரோக்கியமாக இருக்கும் பொழுது, படிகளில் ஏறும் போது களைப்படைய மாட்டோம்.
அதிக நேரம் உடற்பயிற்சிகள் செய்வதால், இதயமானது உடல் முழுவதும் இரத்தத்தை நன்கு பம்ப் செய்து, இதயத்துடிப்பை சீராக்கி உடலுக்கு நன்மை பயக்கிறது.
குறிப்பாக இதயத் துடிப்பை அதிகரிக்க, ஒரு நாளைக்கு முப்பது நிமிடங்கள் ஏரோபிக் பயிற்சிகள் செய்வது மிகவும் நல்லது. வாரத்திற்கு மூன்று நாட்கள், இருபது நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வது நலம்.
மேலும் இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கு பல்வேறு உடற் பயிற்சிகள் உள்ளன. இப்போது அந்த உடற் பயிற்சிகள் என்ன வென்று தெரிந்து கொண்டு, அதனை தினமும் பின்பற்றி இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்.
மாடிப்படிகளில் ஏறுதல்
மாடிப்படிகளில் ஏறும் பயிற்சியானது, இதயத்தின் ஆரோக்கி யத்தை பாதுகாக்கிறது.
நடைப்பயிற்சி
சுறுசுறுப்பான நடைப்பயிற்சி, இதயம் நன்கு இயக்குவதற்கு உதவுகிறது. அதிலும் வசதியான சிறந்த காலணிகளை அணிந்து கொண்டு நன்கு வேகமாக நடைப்பயிற்சி செய்யும் பொழுது, நமது நோக்கத்தை அடைய முடியும்.
ஒருவேளை உடற்பயிற்சி செய்ய நேரம் கிடைக்க வில்லை என்றால், ஒரு நாளைக்கு பலமுறை ஐந்து முதல் பத்து நிமிடங்கள் வரை நடைப்பயிற்சி மேற்கொள்ள லாம்.
ஓட்டம்
ஓட்டப் பயிற்சியானது நமது உடலின் கலோரிகளை எரிப்பதற்கான மிகச்சிறந்த பயிற்சி முறையாகும். 75 கிலோ எடை கொண்ட ஒருவர், ஒரு மைல் ஓடினால் 100 கலோரிகளை எரிக்க முடியும்.
அதிலும் சுறுசுறுப்பாக வேகத்துடன் நடைப் பயிற்சியை ஆரம்பித்து, ஐந்து நிமிடங்களுக்கு இடை யிடையே ஒன்று முதல் இரண்டு நிமிடங்கள் ஓட வேண்டும். ஒரு வேளை முடியுமென்றால் ஓடும் நேரத்தை அதிகப் படுத்திக் கொள்ளலாம்.
யோகா
யோகா செய்வதன் மூலம் நமது உடலிலுள்ள கொழுப்புக்கள் குறைந்து, இரத்த அழுத்தம் மற்றும் மன அழுத்தம் போன்ற வற்றைக் குறைக்க உதவுகிறது.
எடை தூக்கும் பயிற்சி
எடை தூக்கும் பயிற்சியின் மூலம் அதிகப்படியான இரத்த அழுத்தம் குறையும். மேலும் இப்பயிற்சி கொழுப்புச்சத்தை அளவுடன் வைத்துக் கொள்ளவும், இரத்த சர்க்கரையின் அளவைக் குறைக்கவும் உதவுகிறது.
மெல்லிய தசைகளை அதிகப் படுத்தி தேவை யில்லாத கொழுப்பு தசையைக் கரைத்து, உடலின் வளர்சிதை மாற்றத்தினை சீராக்கி சரியான எடையுடன் திகழ உதவுகிறது.
அதிலும் உடலைப் பலப்படுத்தும் இந்த ஏரோபிக் பயிற்சியானது வயதாவதால் ஏற்படும் எலும்பு மற்றும் தசை மாற்றங்களைத் தடுக்க உதவுகிறது. இவ்வகைப் பயிற்சிகள் இதயத்தின் துடிப்பை அதிகரிக்காது.
ஆனால் உடலுக்கு நல்ல ஸ்டாமினாவைத் தரும் என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். மேலும் வலுவிழந்து காணப்படும் தசைகள் மற்று இதர தசைப்பகுதிகள் உறுதி பெறவும் இப்பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.
நீச்சல்
நீச்சல் பயிற்சியானது உடல் முழுவதற்குமான ஒரு சிறந்த பயிற்சியாகும். இந்த பயிற்சியானது இதயத் துடிப்பை அதிகரிக்கச் செய்வது மட்டுமின்றி, இதயத்தின் முழு ஆரோக்கியத்திற்கும் உதவியாக உள்ளது.
நீந்தும் பொழுது நீரானது பன் திசை தடுப்பானாக செயல் படுவதால், தசைகள் நன்கு பலம் பெற்று உறுதியாகத் திகழ்கிறது.
ஒருவேளை மூட்டுவலிகள் இருந்தால், வலியை அதிகரிக்கச் செய்யும் நடை மற்றும் ஓட்டப் பயிற்சிகளை விட, நீச்சல் பயிற்சி மிகவும் நல்லது.
சைக்கிள் ஓட்டுதல்
சைக்கிள் ஓட்டும் பயிற்சியானது மிக எளிய மற்றும் மூட்டுகளுக்கு துன்பம் தராத பயிற்சியாகும். எனவே ஜிம்களில் தனியாகவோ அல்லது சாலைகளிலோ சைக்கிள் ஓட்டும் பயிற்சியை மேற்கொள்ளலாம்.
இப்பயிற்சியின் போது, இதயமானது இரத்தத்தை நன்கு பம்ப் செய்வதோடு, உடலின் கீழ்ப்பகுதியை நன்கு வலுவுறச் செய்து, அங்குள்ள தசைகளையும் பலப்படுத்துகிறது.
சர்க்யூட் பயிற்சி
அனைத்து உடற் பயிற்சிகளையும் கலந்து செய்ய வேண்டும். உதாரணமாக, இதயத்திற் கான பயிற்சி செய்யும் பொழுது, இடை யிடையே மூன்று நிமிடங் களுக்கு ஒருமுறை உடல் பலத்திற்கான பயிற்சியையும் ஒரு நிமிடத்திற்கு செய்ய வேண்டும்.
இல்லை யென்றால் ஐந்து முதல் பத்து வகையான உடல் பலத்திற்கான பயிற்சிகளைத் தேர்ந்தெடுத்து,
அதில் ஒரு வகையைப் பயிற்சி செய்து, பின் குறைந்த எடை தூக்கும் பயிற்சியினை மீண்டும் மீண்டும் செய்து, இதய ஓட்டம் அதிகரிப்ப தற்கான பயிற்சிகளைச் செய்ய வேண்டும்.
இவ்வாறு செய்வதால் தசைகள் உறுதி பெற்று, இதயத்தின் ஆரோக்கி யத்திற்கும் வழிவகுக்கும்.