கன்னம் அழகாக சில குறிப்புகள் !

2 minute read
கன்னங்கள் அழகாக இருந்தால் முகத்துக்கே தனி அழகு தான். ஒரு சிலருக்கு கன்னங்கள் மிகவும் ஒட்டிப் போய் இருக்கும்.பெரும்பாலும் நிறைய பெண்களுக்கு கன்னத்தில் பருக்கள் தொல்லை இருக்கும்.


இவர்கள் இந்த குறிப்புகளை பின் பற்றி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்! முதலில் அதிகாலையில் எழுந்து பழகும் பெண்களுக்கு இயற்கையாக சுத்தமான காற்று கிடைக்கிறது.

இதனால் முகத்தில் ஒரு வித பொலிவு கிடைக்கும். மிதமான சுடு நீரில் சிறிதளவு  உப்பு கலந்து பத்து நிமிடம் வாய்க்குள் வைத்து பின் கொப்பளிப்பது நல்லது. இப்படி தொடர்ந்து செய்வதால் கன்னத்தின் அழகு அதிகரிக்கும்.

சந்தனம், மஞ்சள் போன்றவற்றை பொடியாக்கி முகத்தில், கை, கால்களில் தடவலாம். வறண்டசருமத்தைக் கொண்டவர்கள் பால், வெண்ணை கலந்து குழைத்துப் பூச வேண்டும்.

எண்ணைத் தன்மை கொண்ட சருமத்தை உடையவர்கள் வெள்ளரிக்காய் சாறு, எலுமிச்சம் பழச்சாறு, தக்காளிச் சாறு ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை கலந்து சிறிதளவு தேனும் சேர்த்து உடலில் பூசலாம்.

முகப்பரு இருப்பவர்கள் வேப்பமரப் பட்டையை வெண்ணையில் அரைத்துத் தடவுவது நல்லது. மஞ்சளை, கறிவேப்பிலையுடன் சேர்த்து அரைத்து முகப்பரு இருக்கும் இடத்தில் தடவினால் முகப்பரு மற்றும் அதனால் ஏற்பட்ட வடுக்களும் மறையும்.

அதே போல் துளசி சாற்றை தினமும் முகத்தில் தேய்த்து அரைமணி நேரம் கழித்துக் கழுவி விட்டால் முகப்பரு தொல்லை ஏற்படாது. சில பெண்களுக்கு முகத்தில் மற்றும் தேவையில்லாத இடத்தில் ரோமம் முளைக்கும்.

சிறிது மஞ்சளைக் குழைத்து முகத்தில் தடவி, ஒரு மணி நேரம் கழித்துக் கழுவி விட வேண்டும். இவ்வாறு ஒரு மாதம் செய்து வந்தால் ரோமம் கொஞ்சம் கொஞ்சமாக மறையும்.



முகத்தில் தழும்புகள் மறைய


பப்பாளி மரத்திலிருந்து எதை உடைத்தாலும் பால் வரும். அதைச் சிறிதளவு சேகரித்து அத்துடன் கொஞ்சம் தண்ணீரையும் சேர்க்கவும். இந்தக் கலவையில் சிறிதளவு சீரகத்தை ஊறப் போடவும்.

இதை கால் மணி நேரம் வைத்திருக்கவும். பின் முகப்பரு எங்கே உள்ளதோ அங்கே இக்கலவையை நன்றாகத் தடவி விடவும். முகப்பருக்கள் மறைந்து, இருந்த சுவடு தெரியாமல் போய்விடும்.

அம்மை வடுக்களை அழிக்க சிறிதளவு கசகசா, சின்னதாக மஞ்சள் துண்டு ஒன்று, கறிவேப்பிலை சிறிதளவு எடுத்து இம்மூன்றையும் மை பதத்திற்கு அரைக்கவும்.

இந்தக் கலவையை முகத்தில் எங்கே அம்மை வடுக்கள் காணப்படுகின்றனவோ அங்கே நன்றாகத் தடவுங்கள். 15-20 நிமிடங்கள் உலற விடுங்கள்.

பின்னர் பயத்த மாவினால் முகத்தைக் கழுவி விடுங்கள். இப்படியே 3 நாட்களுக்கு ஒரு முறை செய்யுங்கள். அம்மை வடுக்கள் நீங்கி முகம் மினுமினுக்கும்.
Tags:
Today | 7, April 2025
Privacy and cookie settings