சர்க்கரை நோய் அல்லது நீரிழிவு நோய் என்றால் என்ன?

பத்தும் பறந்திடும் பசி வந்தால் மறைந்திடும் என்பது வாழ்க்கையில் ஒவ்வொரு வருமே உணர்ந்திருக்கும் வாழ்வியல் யதார்த்தம். 
சர்க்கரை நோய் அல்லது நீரிழிவு நோய் என்றால் என்ன?
அதாவது மானம், கல்வி, அறிவு, தவம், தாளாண்மை, பலம், வன்மை, தானம், முயற்சி, காதல் என்பவையே பசியினால் பறந்திடும் பத்துமாகும். ஆனால் பசிக்கு அளவுடன் புசிக்காது விடின் பத்துடன் பதினொன்றாக அரிய உயிரையே பறிகொ டுக்கும் பரிதாபம் நமக்கு ஏற்படும். 

மனித வாழ்விலே சந்தோஷம் என்றாலே இனிப்பு என்பதே பொருள். ஆனால் அளவுக்கு மீறினால் அமர்தமும் நஞ்சு என்பது ஆன்றோர் வாக்கு. 
அவ்வாறே இன்மையைக் கொடுக்கும் இந்த இனிப்பு நமது இரத்தத்தில் அதிகமாகும் போது அதுவே நமது உயிரைக் குடிக்கும் விஷமாக மாறுகிறது. 

இரத்தத்தில் சர்க்கரையின் அளவு சீராக இருந்தால் தான் நமது உடலும் ஆரோக்கியமான நிலையில் இருக்கும். நம் வயிற்றுப் பகுதியில், கல்லீரலுக்கு சற்று கீழே கணையம் எனப்படும் சுரப்பி காணப்படுகிறது. 

இதனால் சுரக்கப்படும் இன்சுலின் (Insulin) என்னும் சுரப்பினாலேயே இரத்தத்தில் சர்க்கரையின் அளவு சமநிலையில் பேணப்படுகிறது.
சர்க்கரை நோய் அல்லது நீரிழிவு நோய் என்றால் என்ன?
நாம் உண்ணும் உணவில் மாச்சத்து (Carbohydrate) அதிகமாகும் போது அது குளுக்கோசாக மாறி இரத்தத்தில் கலக்கும் போது இன்சுலினால் சர்க்கரை சமநிலை பேணப்பட மிகுதி சர்க்கரை நமது உடலில் கிளைக்கோசனாக (Glycogen) சேமித்து வைக்கப் படுகிறது.

பிறகு உடலுக்குத் தேவைப்படும் சந்தர்ப் பங்களில் இக்கிளைக்கோசன் குளுக்கோசாக மாறி சக்தியைத் தருகிறது. 

வங்கா பாபாவின் உலகப் போர் கணிப்பு பலிக்கப் போகிறதா?

இந்தப் பணி சரிவர நடைபெற வேண்டு மென்றால் நமது கல்லீரலும் எந்தப் பாதிப்பும் இல்லாது நன்கு வேலை செய்ய வேண்டும்.

நீரிழிவு நோய் இன்சுலின் அளவு குறை வதாலும் (Insulin Deficiency) கணையம், கல்லீரல் போன்றவை நோய்க்குட்பட்டு இருக்கும் நிலையில் சுரந்த இன்சுலின் சரிவர உபயோகப் படுத்தப் படாமல் இருப்ப தாலும் 

இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாகி Hyperglycemia என்ற நிலை ஏற்படு கிறது. இதையே நாம் சர்க்கரை நோய் அல்லது நீரிழிவு நோய் என்கிறோம்.

நீரிழிவு நோயின் அறிகுறிகள்
சர்க்கரை நோய் அல்லது நீரிழிவு நோய் என்றால் என்ன?
1. அடிக்கடி சிறுநீர் கழித்தல் (Polyaria)

2. அடிக்கடி சிறுநீர் கழித்தலால் தாகம் அதிகரித்தல் (Excesssive Thirst)

3. களைப்புத் தன்மை (Weakness)

4. எடை குறைவு (Weight Loss)

5. பசி அதிகரித்தல் (Increased appetite)

6. நாவறட்சி (Dry mouth)

7. காயம் ஏற்பட்டால் விரைவில் ஆறாமை.
Tags:
Privacy and cookie settings