கூழாங்கல் மீது நடைப்பயிற்சி செய்தால் ஆரோக்கியமாக இருக்கும் !

கூழாங்கற்களின் மீது நடைப்பயிற்சி செய்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்று அக்குபஞ்சர் டாக்டர் தெரிவித்தார். 
ரெங்கா அக்கு பஞ்சர் மற்றும் யோகா சமூக நலக்கல்வி அறக்கட்டளையின் பத்தாம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு இலவச அக்குபஞ்சர், 
அக்கு பிரஷர், ஃபுட்-ரிப்ளக் ஸாலஜி விழிப்பு ணர்வு நிகழ்ச்சி” சென்னை அண்ணா நகரில் (கிழக்கு) நேற்று நடந்தது. 

அறக் கட்டளை தலைவரும், அறங்காவ லருமான டாக்டர் எஸ்.ரவிச் சந்திரன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந் தினராக கலந்து கொண்ட உயர் நீதிமன்ற நீதிபதி ச.தமிழ் வாணன் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து

விழா மலரை வெளியிட, தமிழ் வளர்ச்சித்துறை செயலாளர் டாக்டர் எம்.ராஜாராம் பெற்றுக் கொண்டார். இந்த நிகழ்ச் சியில் 200-க்கும் மேற்பட்ட பொது மக்கள் பங்கே ற்றனர்.

அக்குபஞ்சர் மூலம் மயக்கம், உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு, மன அழுத்தம், விபத்தில் உடலில் இருந்து வெளியேறும் ரத்தத்தை கட்டுப்ப டுத்துவது போன்ற வைகள் குறித்து பொது மக்களுக்கு பயிற்சி அளிக்கப்ப ட்டது. 

நிகழ்ச்சியில் நீதிபதி ச.தமிழ்வாணன் பேசும் போது, “மருந்து இல்லாத, மக்களு க்கு கேடு விளை விக்காத இயற்கை சார்ந்த மருத்துவ முறை களை பயன் படுத்தலாம். 
அக்குபஞ்சர் சிகிச்சை முறையாக படித்த வர்கள் மூலமாக மற்றவர் களுக்கும் உதவு கிறது. இது போன்ற மருத்துவ முறைகள் பொது மக்களுக்கு தேவை யானது” என்றார். 

டாக்டர் எஸ்.ரவிச் சந்திரன் கூறும் போது, “முகத்தில் 52-க்கும் மேற்பட்ட அக்கு பஞ்சர் புள்ளிகள் இருக்கின்றன. பயம், படபடப்பு, மன அழுத்தம் இருக்கும் போது தண்ணீரால் முகத்தை கழுவினால் எல்லாம் சரியாகி விடும்.
உடல் சார்ந்த நோய்கள் வராமலும் தடுக்கலாம். உடல் உறுப்புகள் அனைத்து க்கும் கால் பாதங்களில் புள்ளிகள் இருக்கின்றன. 

கூழாங்க ற்களின் மீது தினமும் 15 நிமிடம் நடைப்ப யிற்சி செய்தால் உடல் உறுப்புகள் தூண்ட ப்படும். உடலில் உள்ள நச்சுப் பொருட்கள் வெளியேற் றப்படும். உடல் ஆரோக்கி யமாக இருக்கும். 

சென்னை பூங்காக்களில் கூழாங்கற்களின் மீது நடைப் பயிற்சி செய்வதற் காக பாதை அமைக்கப் பட்டுள்ளது” என்றார். 
முகத்தில் 52-க்கும் மேற்பட்ட அக்குபஞ்சர் புள்ளிகள் இருக் கின்றன. பயம், படபடப்பு, மன அழுத்தம் இருக்கும்போது தண் ணீரால் முகத்தை கழு வினால் எல்லாம் சரியாகி விடும்.
Tags:
Privacy and cookie settings