வைரஸ் காய்ச்சல் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் !

காலநிலை மாறும் போது பல்வேறு நோய்த் தொற்றுகள் ஏற்படக் கூடும். அதில் ஒன்று தான் வைரஸ் காய்ச்சல். 
வைரஸ் காய்ச்சல் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் !
தற்போது ஆங்காங்கு டெங்கு காய்ச் சலால் பலர் பாதிக்கப் பட்டுள்ள தால், வைரஸ் காய்ச் சலையும், டெங்கு காய்ச் சலையும் போட்டு குழப்பிக் கொண்டிருக் கின்றனர்.

உண்மையில் இந்த இரண்டு காய்ச்ச லுக்கும் வெவ்வேறு வைரஸ்கள் காரணம் மற்றும் அறி குறிகளும் வேறுபடும்.

வைரஸ் காய்ச்சல் வந்தால், கடுமையான உடல் வலி, அரிப்புக்கள் மற்றும் தலைவலியை உணரக் கூடும். மேலும் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப் பட்டவர் களின் நோயெதிர்ப்பு சக்தி குறைந்து விடும்.

இதற்கு சரியான சிகிச்சையை மேற்கொண்டு வந்தால் சீக்கிரம் குணப்படுத்தி விடலாம். 

ஆனால் அதற்கு ஒவ்வொருவரும் முதலில் இந்த வைரஸ் காய்ச்சல் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். 

சரி, இப்போது அந்த வைரஸ் காய்ச்சல் பற்றி காண்போமா! வைரஸ் காய்ச்சல் இருந்தால், நிறைய அறிகுறிகள் தென்படும். அதில் முக்கியமான அறிகுறிக ளென்றால்,

காய்ச்சல், மிகுந்த சோர்வு, குமட்டல், கடுமையான உடல் வலி, அரிப்புக்கள், கடுமையான தலை வலி, இருமல், தொண்டைப்புண், அடிவயிற்றில் வலி போன்றவை முக்கியமானவை.

வைரஸ் காய்ச்சல் வந்தால், அவற்றை உண்டாக்கும் வைரஸ் செல்களை தாக்கும். குறிப்பாக சுவாச மண்டலத்தை தான் வைரஸ் காய்ச்சல் வெகுவாக பாதிக்கும்.

ஒருவேளை வைரஸ் மிகவும் சக்தி வாய்ந்த தெனில், அதனால் நரம்பு மண்டலம் கூட பாதிக்கப் பட்டு, அதனால் தீவிரமான பிரச்சனை யையும் சந்திக்கக்கூடும்.
வைரஸ் காய்ச்சல் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் !
ஆம், வைரஸ் காய்ச்சல் மிகவும் ஆபத்தானது. ஒருவேளை பாதிக்கப் பட்ட நோயாளி மிகவும் பலவீனமான வராக இருந்து, எதையும் உட்கொள்ள முடியாமல் தவித்தால்,

அந்நோயாளி உடனடியாக மருத்துவ மனையில் அனுமதி க்கப்பட வேண்டும். மேலும் எந்த ஒரு மாத்திரை யையும் எடுத்து குணமாகா விட்டால், அது ஆபத்தானதே.

வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப் பட்டவருக்கு மேற்கூறிய அறி குறிகள் தென்படாமல் இருக்கலாம். 

மாறாக மூச்சு விடுவதில் சிரமம் மற்றும் தொடர்ந்து 5 நாட்கள் அதிகப் படியான காய்ச்சலால் அவஸ்தைப் படக்கூடும். அத்தகைய வர்களும் உடனடியாக மருத்துவரை சந்திக்க வேண்டும்.

பெரும்பாலான வைரஸ் காய்ச்சல், அசுத்தமான தண்ணீர் அல்லது உணவின் மூலம் பரவும் வைரஸ் காய்ச்சல் மூலம் பாதிக்கப் பட்டவர்களுக்கு, ஆரம்பத்தில் வைரஸானது இரத்த ஓட்டம்

அல்லது நிணநீர் தடங்களில் பரவும். வித்தியாசமாக சிலருக்கு பாதிக்கப்பட்ட நபருடன் உடலுறவு அல்லது நெருங்கிய நிலையில் இருப்பதன் மூலம் பரவும் வாய் ப்புள்ளது.

வைரஸ் காய்ச்சல் வந்தால், உடல் வறட்சி யடையாமல் இருப்பதற்கு தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்,

ஓய்வு நன்கு எடுக்க வேண்டும் மற்றும் எளிதில் செரிமானமாகும் உணவுகளை தவறாமல் உட்கொண்டு வர வேண்டும்.

வைரஸ் காய்ச்சலை சரி செய்வதற்கான வீட்டு வைத்தியம், மல்லி டீ, வைரஸை அழிக்க வெந்தய தண்ணீர் மற்றும் ஸ்டார்ச் அதிகம் நிறைந்த கஞ்சி குடிக்க வேண்டும்.
வைரஸ் காய்ச்சல் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் !
வைரஸ் காய்ச்சல் மற்றவருக்கு பரவாமல் இருப்பதற்கு, கப், ஸ்பூன், உண்ணும் தட்டு போன்ற வற்றை பகிர்ந்து கொள்ளக் கூடாது.

மேலும் பாதிக்கப் பட்டவர் பயன் படுத்திய டிஸ்யூவை அவ்வப்போது தூங்கி எறிவதோடு, கிருமிகள் பரவாமல் இருக்க கைகளை அவ்வப்போது கழுவ வேண்டும்.
Tags:
Privacy and cookie settings