காபி குடித்தால் மலச்சிக்கல் ஏற்படுமா?

உங்களுக்கு அடிக்கடி மலச்சிக்கல் ஏற்படுகிறதா? அதற்கு என்ன காரணம் என்று தெரிய வில்லையா?
காபி குடித்தால் மலச்சிக்கல் ஏற்படுமா?
உண்மையில் மலச் சிக்கல் ஏற்படு வதற்கு தண்ணீர் குறைவாக குடிப்பது, உட்கார்ந்தே பணியாற்றுகின்ற வாழ்க்கை மற்றும் எடுத்துக் கொள்ளும் சில மருந்துகளின் பக்க விளைவுகள் தான் காரணமாகும்.

அதே சமயம் அன்றாடம் சாப்பிட்டு வரும் சில உணவுகளின் மூலமும் மலச்சிக்கல் ஏற்படும் வாய்ப்புள்ளது. அதுவும் நாம் எதிர்பாராத சில உணவுகள் நமக்கு மலச்சிக்கல் தொல்லையை ஏற்படுத்தவும் செய்யும்.

இங்கு அப்படி எந்த உணவுகள் எல்லாம் மலச் சிக்கலை ஏற்படுத்தும் என்று பட்டியலிடப் பட்டுள்ளது. 

அதிகப்படியான அலுவலக வேலையால் எளிதில் சமைத்து சாப்பிடு வதற்கு ஏற்றவாறு கடைகளில் உறைய வைக்கப் பட்ட உணவுகள் விற்கப் படுகின்றன.

ஆனால் அந்த உணவுப் பொருட்களில் நார்ச்சத்து குறைவாக இருப்பதோடு, கொழுப்பு க்களும் அதிகம் உள்ளது. 

அது மட்டு மின்றி, அவற்றை அடிக்கடி எடுத்து வருவதன் மூலம், செரிமானம் சீராக நடை பெறாமல், மலச்சிக்கல் ஏற்படு கிறது.

என்ன அதிர்ச்சி யாக உள்ளதா? ஆம், வாழைப் பழங்கள் கூட மலச் சிக்கலை உண்டாக்கும். அதுவும் அது கனிந்தி ருக்கும் நிலையைப் பொருத்தது.

வாழைப் பழமானது ஓரளவு காயாக இருந்தால், அது மலம் வெளியேறு வதற்கு தடையை ஏற்படுத்தும். அதுவே நன்கு கனிந்தி ருந்தால் மலச்சிக் கலில் இருந்து விடுதலை தரும். 
ஏனெனில் பச்சை மற்றும் கனியாக வாழைப் பழங்களில் ஸ்டார்ச் அதிகம் உள்ளதால், அது எளிதில் செரிமானமா காமல், மலச்சிக்கலை ஏற்படுத் துகிறது.

சிப்ஸ் மற்றும் வறுத்த நொறுக்குத் தீனிகளை சிலர் எப்போதும் தின்றவாறே இருப்பார்கள். 

உண்மையில் அத்தகைய உணவுப் பொருட்களில் கொழுப்புக்கள் அதிகமாகவும், நார்ச்சத்து குறைவாகவும் இருப்பதோடு, சீக்கிரம் செரிமான மாகாமல், மலச்சிக்கலை ஏற்படுத்தும்.

மாட்டிறைச்சி கூட செரிமானமாக தாமதமாகும். இதற்கு அதில் உள்ள அதிகளவிலான கொழுப்பு க்கள் மற்றும் புரோட்டீன்கள் தான்.

இவை செரிமான மண்டலத்தினால் எளிதில் உடைக்கப் படுவதில்லை. அதுமட்டு மின்றி, இரும்புச்சத்து அதிகம் உள்ளது. இச்சத்தை அதிகம் எடுத்தாலும், மலச்சிக்கல் ஏற்படும்.
காபி குடித்தால் மலச்சிக்கல் ஏற்படுமா?
ஒரு கப் பால் அல்லது சிறிது சீஸ் சாப்பிட்டால் கூட மலச்சிக்கல் ஏற்படும். இதற்கு பால் பொருட்களில் உள்ள லாக்டோஸ் தான் காரணம்.

லாக்டோஸ் வயிற்றில் வாய்வுத் தொல்லையை அதிகரித்து, அதனால் உணவுகள் சரியாக செரிமானமாகாமல், மலச்சிக்கல் ஏற்பட செய்கிறது. 

உங்களுக்கு பிரெஞ்சு பிரைஸ், பஜ்ஜி, பக்கோடா போன்ற வறுத்த உணவுகள் ரொம்ப பிடிக்குமா? அவற்றை அடிக்கடி சாப்பிடுபவரா? 

அப்படியெனில் உங்களுக்கு மலச்சிக்கல் ஏற்படுவதற்கு அது ஒன்றே போதும்.

அவற்றில் கொழுப்பு அதிகம் இருப்பதோடு, அவை உணவுகளை குடலினுள் மெதுவாக நகர்த்து வதோடு, வாய்வு தொல்லையுடன் மலச்சிக் கலையும் ஏற்படுத்தும்.

பலரும் பிஸ்கட், கேக் போன்றவை ஆரோக்கிய மானது என்று நினைக் கின்றனர். ஆனால் உண்மையில் அவை ஆரோக்கி யமற்றது மட்டுமின்றி, உடல் எடை அதிகரிக்கக் கூடியது.

மேலும் இவற்றில் நார்ச்சத்து மிகவும் குறைவு மற்றும் கொழுப்புக்கள் அதிகமாகவும் உள்ளது. இதனால் செரிமான மாவதில் தாமதமாகி, மலச்சிக்கல் ஏற்படும்.
காபி குடித்தால் மலச்சிக்கல் ஏற்படுமா?
வாழைப் பழங்களைப் போலவே, காபி சில நேரங்களில் குடலியக்கத்தை சீராக தூண்டி, மலச்சிக்கலில் இருந்து விடுதலை தரும். இல்லா விட்டால், அதிகப் படியான காபிணை எடுக்கும் போது,

அதில் உள்ள காப்ஃபைன் உடல் வறட்சியை ஏற்படுத்தி, மலச்சிக்கலை ஏற்படுத்தும். எனவே எதிலும் அளவு முக்கியம் என்பதை மறவாதீர்கள்.
Tags:
Privacy and cookie settings