தூங்கும் போது ஏன் இடது பக்கமாக தூங்க வேண்டும் !

தூங்கும் போது நாம் எந்த நிலையில் இருப்போம் என்றே நமக்குத் தெரியாது. ஆனால் தூங்கும் நிலைக்கும், ஆரோக்கி யத்திற்கும் சம்பந்தம் உள்ளது என்று தெரியுமா?
தூங்கும் போது ஏன் இடது பக்கமாக தூங்க வேண்டும் !
ஆம், பொதுவாக நாம் நேராக படுப்பது தான் சிறந்த நிலை என்று நினைக்கிறோம். ஆனால் உண்மையில், இடது பக்கமாக திரும்பி படுப்பதால் எண்ணற்ற நன்மைகளைப் பெற முடியும். 

இடது பக்கமாக தூங்குவதால், பல நோய்கள் தடுக்கப் படுவதோடு, செரிமானம் மேம்பட்டு, குடலியக்கம் சீராக நடைபெறும். எனவே தூங்கும் போது இடது பக்கமாக தூங்கும் வழக்கத்தைக் கொள்ளுங்கள்.
குறட்டையை கட்டுப்படுத்த
தூங்கும் போது ஏன் இடது பக்கமாக தூங்க வேண்டும் !
இரவு தூங்கும் பொழுது நீங்கள் விடும் குறட்டையை கண்டு உங்கள் கணவரோ அல்லது உங்கள் குடும்பத்தாரோ உங்களை கேலி செய்கிறார்களா? 

அல்லது உங்கள் குறட்டையால் அவர்களின் தூக்கம் கெடுகிறது என்று உங்களிடம் புகார் கூறுகிறீர்களா? இனி கவலை வேண்டாம்! 

உங்களின் இடது பக்கத்தில் தூங்குவதன் மூலம் உங்களின் குறட்டையை நீங்கள் கட்டுப்படுத்தலாம். குறிப்பாக, நீங்கள் மல்லார்ந்து படுத்து தூங்கும் போது, நீங்கள் இன்னும் சத்தமாக குறட்டை விடுவீர்கள். 

ஏனென்றால், நீங்கள் தூங்கும் போது உங்கள் நாக்கு, வாய் மற்றும் தாடை ஆகியவை எந்தவித அசைவும் இன்றி முற்றிலும் தளர்வாக இருக்கும், 

எனவே நீங்கள் மல்லார்ந்து படுத்து தூங்கும் போது உங்களுக்கு குறட்டை ஏற்படுகிறது.

டாக்ஸின்கள் வெளியேறும் 
தூங்கும் போது ஏன் இடது பக்கமாக தூங்க வேண்டும் !
இடது பக்கமாக தூங்கும் போது நிணநீர் வடிகால் மூலம் டாக்ஸின்கள் வெளியேற்றப்படும். 

இதனால் டாக்ஸின்கள் உடலில் தேங்குவது தடுக்கப்பட்டு, அதன் மூலம் கடுமையான நோய்களின் தாக்கத்தில் இருந்து விடுபடலாம்.
கல்லீரல் மற்றும் சிறுநீரக செயல்பாடு மேம்படும் 
தூங்கும் போது ஏன் இடது பக்கமாக தூங்க வேண்டும் !
உடலிலேயே கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களில் தான் கழிவுகள் மற்றும் டாக்ஸின்கள் அதிகம் தேங்கக்கூடும். 

ஆனால் இடது பக்கமாக தூங்கினால், இந்த உறுப்புகளில் தேங்கியுள்ள கழிவுகள் மற்றும் டாக்ஸின்கள் வடிகட்டி வெளியேற்றப்படும். 

செரிமானம் நன்கு செயல்படும் 
தூங்கும் போது ஏன் இடது பக்கமாக தூங்க வேண்டும் !
இடது பக்கமாக தூங்குவதால், இரைப்பை மற்றும் கணையம் இயற்கையாக சந்திக்கும். இதனால் உணவு செரிமானம் சீராக நடைபெறும். 

மேலும் உணவுகளும் இரைப் பையின் வழியாக அதிகப் படியான ஈர்ப்பின் காரணமாக எளிதில் செரிமானமாகி வெளியே தள்ளப்படும். 
மென்மையான குடலியக்கம் 

இடது பக்கமாக தூங்கும் போது, உண்ட உணவானது சிறு குடலில் இருந்து பெருங்குடலுக்கு ஈர்ப்பின் காரணமாக எளிதில் தள்ளப்படும். 

இதனால் காலையில் எவ்வித இடையூறுமின்றி, உடலில் சேர்ந்த கழிவுகளை மலமாக வெளியேற்றலாம். 

அசிடிட்டி மற்றும் நெஞ்செரிச்சல் 
தூங்கும் போது ஏன் இடது பக்கமாக தூங்க வேண்டும் !
நீங்கள் தூங்கும் நேரத்தில் அதிகமாக சாப்பிட்டால், அது உங்களுக்கு நெஞ்சு எரிச்சலை ஏற்படுத்தும். மேலும் இந்த நெஞ்சு எரிச்சல், இரவு முழுவதும் கூட நீடிக்கக்கூடும். 

ஆகையால் தான், நிபுணர்கள் நீங்கள் உங்களின் இடது பக்கத்தில் தூங்க வேண்டும் என்று கூறுகிறார்கள். 

இடது பக்கம் தூங்குவதன் மூலம், அசிடிட்டியை உண்டாக்கிய இரைப் பையில் உள்ள அமிலமானது உணவுக் குழாய் வழியே மேலே ஏறுவது தடுக்கப்பட்டு, நெஞ்செரிச்சல் தடுக்கப்படும்.

இதயத்திற்கும் நன்மை பயக்கும்
தூங்கும் போது ஏன் இடது பக்கமாக தூங்க வேண்டும் !
உங்கள் இடது பக்கத்தில் தூங்குவதன் மூலம் உங்கள் இதயத்தின் கடின உழைப்பைக் நீங்கள் குறைக்கலாம்; அதாவது உங்கள் இதயம் கடினமாக செயல்படுவதை நீங்கள் தவிர்க்கலாம். 

நீங்கள் இவ்வாறு இடது பக்கம் படுத்து தூங்கினால், உங்கள் இதயத்திற்கு, உங்களின் உடல் முழுவதும் இரத்த ஓட்டத்தை பரப்புவதற்கு மிகவும் எளிமையாக இருக்கும்.
அசௌகரியம் தடுக்கப்படும் 
தூங்கும் போது ஏன் இடது பக்கமாக தூங்க வேண்டும் !
இடது புறமாக தூங்குவதால், கல்லீரல் மற்றும் பித்தப்பை இயற்கையாக சந்திப்பதோடு, எவ்வித கழிவுகளும் இல்லாமல் நிணநீர் அதிகமாக சுரக்கப்படும். 

இதனால் உண்ட உணவுகள் எளிதில் செரிமானமாகி, அசௌகரியத்தைத் தடுக்கும். 

கர்ப்பமாக இருக்கும் பெண்கள் பெரும்பாலும் இடது பக்கத்தில் தூங்க அறிவுறுத்தப் படுகிறார்கள். அது ஏன் என்று உங்களுக்கு தெரியுமா? 

அதாவது, உங்கள் வலது பக்கத்தில் நீங்கள் தூங்கினால், உங்கள் கருப்பை ஆனது உங்கள் கல்லீரலுக்கு எதிராக அழுத்தப்படுகிறது (கல்லீரல் ஆனது, உங்கள் உடலின் வலது பக்கத்தில் காணப்படுகிறது).

கொழுப்புக்களும் கரையும் 
தூங்கும் போது ஏன் இடது பக்கமாக தூங்க வேண்டும் !
அனைவ ருக்குமே கல்லீரல் மற்றும் பித்தப் பையில் இருந்து செரிமானத்திற்கு தேவையான பித்தநீர் சுரக்கப் படுகிறது என்று தெரியும். அதிலும் இடது புறமாக தூங்கும் போது,

இந்த பித்தநீரின் உற்பத்தி அதிகமாவதால், கொழுப்புக்கள் இருந்தாலும் எளிதில் உடைக்கப்பட்டு கரைந்து விடும். இதனால் உடலில் மற்றும் கல்லீரலில் கொழுப்புக்கள் தங்குவது தடுக்கப்படும்.
வலது பக்கம் தூங்குவதால் என்ன நடக்கும்? 
தூங்கும் போது ஏன் இடது பக்கமாக தூங்க வேண்டும் !
வலது பக்கமாக படுப்பதால், டாக்ஸின்கள் உடலில் இருந்து வெளியேற்றப் படாமல் இருப்பதோடு, செரிமானம் மோசமாக நடைபெறும்.

நேராக படுப்பதால் என்ன நடக்கும்? 
தூங்கும் போது ஏன் இடது பக்கமாக தூங்க வேண்டும் !
நேராக படுக்கும் போது மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்படும். மற்றும் மூச்சுத் திணறல் அல்லது ஆஸ்துமா இருப்பவர்கள் இந்நிலையில் படுப்பது மிகவும் ஆபத்தானது. 

நாம் அனைவரும் நம் இடது பக்கத்தில் தூங்குவது தான் மிகவும் நல்லது. எனவே, அண்ணார்ந்து அல்லது மல்லார்ந்து தூங்குபவர்கள், குப்புற படுத்து தூங்குபவர்கள், 
மற்றும் உங்களின் வலது பக்கம் திரும்பி தூங்குபவர்கள் ஆகிய அனைவரும் இனிமேல் அப்படி தூங்குவதை தவிர்க்கவும்.
Tags:
Privacy and cookie settings