கையை தட்டி நோயை விரட்டுவோம் !

பொது நிகழ்ச்சிகளில் ஒருவரை பாராட்ட கை தட்டுகிறோம். இப்படி கைதட்டி ரசித்து சிரிப்பதன் மூலம், எந்த நோயும் நம்மை அண்டாமல் விரட்டலாம்.
 கையை தட்டி நோயை விரட்டுவோம் !
இந்தியாவில், ஒரு மணி நேரத்தில் 90 பேர் மாரடைப்பு வந்து மரணமடைகின்றனர். இதய நோய் பாதிப்புக்கு ஆளாவதில், உலகத்திலேயே இந்தியர்களுக்குத் தான் முதலிடம். 

இந்தியர்களுக்கு நோய் வர உடலியல் காரணங்களை விட உளவியல் காரணங்களே அதிகம். 

எதற்கும் உணர்ச்சி வசப்படாமல், அனைத்தையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளும் மனநிலை வந்தாலே, நம்மை எந்த நோயும் அணுகாது.

வெற்றிதான் மகிழ்ச்சியின் திறவுகோல் என்பதை விட, மகிழ்ச்சியாக இருப்பதே வெற்றி தான் என்று எண்ண வேண்டும். 

இதற்கு நன்றாக மனம்விட்டு சிரிப்பதும், கைதட்டி ரசிப்பதும் அவசியம். கை தட்டுவதால் உடலில் ஒரு வகையான, அக்குபிரஷர் ட்ரீட்மென்ட் ஏற்படுகிறது. 
மூளையும், பிற உறுப்புகளும் உற்சாகமாய் இயங்குகின்றன. கைகளில் உள்ள நரம்புகள், இதயம், ஈரல், சிறுநீரகம், நுரையீரல் போன்ற உறுப்புகளுடன் தொடர்பு கொண்டவை.

இரண்டு கைகளையும் இணைந்து தட்டுவதன் மூலம், நரம்புகள் தூண்டப் படுகின்றன. தைவான் நாட்டில், கை தட்டுவதன் மூலம் எலும்பு புற்று நோயினை குணப்படுத்தி யுள்ளனர். 
 கையை தட்டி நோயை விரட்டுவோம் !
எலும்பு புற்று நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் திபெத் சென்று தலாய்லாமாவை சந்தித்தார். 

அப்போது தலாய்லாமா, புற்று நோயால் பாதிக்கப்பட்டவரை 20 நிமிடங்களுக்கு இரண்டு கைகளையும் சேர்த்து தட்டச் சொன்னாராம். 

இப்படி தினமும் 20 நிமிடங்கள் கை தட்ட பயற்சி செய்தால் போதும் என்றாராம். இதில், ஆச்சரியம் என்ன வென்றால், புற்று நோய் அவருக்கு முற்றிலுமாக குணமாகி விட்டது. 

நம் உடலில் உள்ள ரத்த நாளங்கள் வெறும் 2 மி.மீ., குறுக்களவு கொண்டவை. நாம் டென்ஷன் ஆகும் போது அட்ரினலின், கார்ட்டிசால் ஹார்மோன்கள் அதிகமாக சுரக்கும். 
இவை அந்த நாளங்களில் அடைப்பை ஏற்படுத்தும். இந்த சுரப்பை கட்டு ப்படுத்தும் சக்தி நம் உடலில் இயல்பாகவே இருக்கிறது. 

சீரான உணவு, முறையான உடற்பயிற்சி, நல்ல பழக்கங்கள், மனமகிழ்ச்சி இவையெல்லாம் எண்டார்பின், மெலட்டோனின், செரட்டோனின் ஹார்மோன்களும் எச்.டி.எல்.,
என்கிற நல்ல கொழுப்புகளும் உருவாகும். இதனால் 99 சதவீத அடைப்பு இருந்தால் கூட தானாக கரைந்து விடும் என மருத்துவ நிபுணர்கள் சொல்கின்றனர்.

தினமும் 20 நிமிடங்களுக்கு ஜோராய் கை தட்டுங்கள் நோய் வரவே வராது. காசா... பணமா... சும்மா தட்டித் தான் பாருங்களேன்.
Tags:
Privacy and cookie settings