மூட்டு வலியை தவிர்க்க முறையான உடற்பயிற்சி அவசியம் !

முறையான உடற்பயிற்சி, உணவுப் பழக்கங்களால் மூட்டு வலியை தவிர்க்கலாம் என அரசு மருத்துவர் ஆர்.அறிவாசன் தெரிவித்துள்ளார். 
மூட்டு வலியை தவிர்க்க முறையான உடற்பயிற்சி அவசியம் !
சர்வதேச மூட்டு அழற்சி (மூட்டு வலி) தினம் ஆண்டு தோறும் அக்டோபர் 12-ம் தேதி அனுசரிக்கப் படுகிறது. மனிதனின் செயல் பாட்டுக்கு எலும்பு மூட்டுகள் வலுவாகவும், வலி இல்லாமலும் இருக்க வேண்டும். 

அப்போது தான் சோர்வு இன்றி உழைக்க முடியும். முன்னர் முதியோர்களை மட்டுமே தாக்கி வந்த மூட்டு வலியானது பல்வேறு காரணங்களால் இன்று இளைய தலைமுறை யினரையும் அதிகம் பாதித்து வருகிறது. 
மூட்டுகள் பலமாக இருக்க நம் உடலை முறையாகப் பராமரிக்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மதுரை அரசு ராஜாஜி மருத்து வமனை எலும்பு மூட்டு மற்றும் முடநீக்கியல் துறை பேராசிரியர் ஆர்.அறிவாசன் கூறியது:
உடல் பருமன், முறையான உடற்பயிற்சி இல்லாமை, சாலை விபத்துக்கள், முறையான சிகிச்சை மற்றும் அணுகுமுறை இல்லாமை, உணவு பழக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்,

மன உளைச்சல், சர்க்கரை நோய், தைராய்டு சுரப்பில் ஏற்படும் கோளாறுகள் எனப் பல்வேறு காரணங்களால் மூட்டு வலி ஏற்பட்டு உழைக்க முடியாத நிலை ஏற்படுகிறது. 

இப்பிரச்சினையை சரி செய்வதற்காக அதிக செலவு செய்யும் நிலை உள்ளது. எனவே மூட்டுக்களை முறையாகப் பேணி பாதுகாக்க வேண்டும். சில ஆண்டு களுக்கு முன் 50 வயதுக்கு மேற்பட்ட வர்களுக்கே மூட்டு வலி இருந்தது. 

ஆனால், வாழ்க்கை முறை மாற்றத்தால் தற்போதைய காலகட்டத்தில் 35 வயது இளைஞர்களுக்குக்கூட முழங்கால், தோள்பட்டை மூட்டுகள் பலவீனம் அடைந்து வலி ஏற்படுகிறது.

இதனால் அவர்களின் வாழ்க்கைத்தரம் கடுமையாகப் பாதிக்கப் படுகிறது. மூட்டில் வலி ஏற்பட்டால் வலி நிவாரண மாத்திரை களை உட்கொள்ளக் கூடாது. வலி ஏற்பட்டவுடன் மருத்துவரை அணுக வேண்டும்.
கட்டிட கட்டுமானத்தின் போது பணிகளை முறையாகப் மேற்கொள்ள !
தினமும் உடற்பயிற்சி, நடைபயிற்சி செய்ய வேண்டும். உடல் எடையை கட்டுப் படுத்த வேண்டும். புகை மற்றும் மது பழக்கத்தை கைவிட வேண்டும்.
மூட்டு வலியை தவிர்க்க முறையான உடற்பயிற்சி அவசியம் !
தற்போது உணவுப் பொரு ட்களில் அதிக ரசாயன கலப்பு இருப்பதால் இயற்கை முறையில் விளை விக்கப்பட்ட உணவுகளை உட்கொள்ள வேண்டும். 

சர்க் கரை, இதயம், ரத்த அழுத்தம் ஆகிய நோய்களால் பெற்றோர் பாதிக்கப் பட்டிருந்தால் அவர் களின் பிள்ளைகள் 30 வயதுக்கு மேல் மருத்துவர்களை அணுகி முறையான சிகிச்சை பெற வேண்டும். 
கட்டி முடிக்கப்படாத வீட்டுக்கு இன்சூரன்ஸ் தேவையா?
விபத்து ஏற்படாத வகையில் சாலை விதிகளை மதிக்க வேண்டும். இவற்றை பின்பற்றுவதன் மூலம் மூட்டுகளை பாதுகாக்கலாம். 

மட்டன், சிக்கன், நண்டு, முட்டை, கேழ்வரகு, ஆரஞ்சு, பீட்ரூட், ஆப்பிள், வாழைப்பழம் போன்ற கால்சியம் நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். இதன் மூலம் எலும்புகள் பலமடையும் என்றார். 
Tags:
Privacy and cookie settings