பெண்களுக்கு சிறுநீரகத்தில் கற்கள் !

சிறுநீரக கற்கள் என்பது பொதுவான பிரச்சனை அல்ல. சிறுநீரக கற்கள் இருந்தால், அதனை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, அதனைக் கரைப்பதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும்.

இல்லா விட்டால், அதனை அறுவை சிகிச்சை மூலம் தான் நீக்க முடியும். அதிலும் பெண்கள் தான் சிறுநீரக கற்களால் அதிகம் கஷ்டப்படுவார்கள்.

சிறுநீரக கற்கள் வருவதற்கு முறையற்ற டயட் மற்றும் அதிகப்படியான உப்பு நிறைந்த உணவுகளை உண்பது தான் காரணம். 

அது மட்டுமின்றி அளவுக்கு அதிகமாக கால்சியம் நிறைந்த மாத்திரைகளை எடுத்து வந்தாலும், சிறுநீரக கற்கள் உருவாகும். சிறுநீரக கற்கள் வந்தால், ஒரு சில அறிகுறிகள் தென்படும்.

ஆனால் அந்த அறிகுறிகள் சாதாரணமாக வருவதால், அதனை பலரும் பொருட்படுத்தாமல் இருந்து விடுவர். இப்போது பெண்களுக்கு சிறுநீரக கற்கள் இருந்தால் தென்படும் அறிகுறிகள் என்னவென்று பார்ப்போம். 

* சிறுநீர் கழிப்பதில் பிரச்சனை இருந்தால், அதனை சாதாணமாக நினைக்காமல், உடனே அதனை பரிசோதித்து, சரிசெய்யும் முயற்சியில் ஈடுபடுங்கள்.

* உங்களுக்கு திடீரென்று குமட்டல் வர ஆரம்பிக்கிறதா? அதிலும் அதிகப்படியான காய்ச்சல் இருந்து குமட்டல் வந்தால், உங்கள் சிறு நீரகங்களில் கற்கள் உள்ளது என்று அர்த்தம்.

கழிக்கும் சிறுநீர் தெளிவின்றி இருந்தால், அதுவும் சிறுநீரக கற்களுக்கான அறிகுறி. மேலும் தெளிவற்ற சிறுநீர், சிறுநீர் பாதையில் தொற்று இருப்பதையும் குறிக்கும். எனவே சிறுநீர் பரிசோதனையை மேற்கொண்டு, உங்கள் சந்தேகத்தை போக்கிக் கொள்ளுங்கள். 

* குமட்டல், தெளிவற்ற சிறுநீர் போன்றவற்றுடன் காய்ச்சல் அதிகம் இருந்தால், அது சிறுநீரக கற்கள் இருப்பதற்கான அறிகுறிகளுள் ஒன்று. எனவே மருத்துவரை சந்தித்து போதிய சிகிச்சையைப் பெறுங்கள். 

* அடிக்கடி தெளிவற்ற சிறுநீருடன், அடிவயிற்றில் கடுமையான வலியை சந்தித்தால், உடனே சிறுநீர் பரிசோதனையை மேற்கொண்டு, உங்கள் சந்தேகத்தைப் போக்கிக் கொள்ளுங்கள்.

* வழக்கத்திற்கு மாறாக பிறப்புறுப்பைச் சுற்றி மற்றும் முகத்தில் வியர்வை அதிகமாக வெளியேறினால், அதனை சாதாரணமாக நினைக்காமல், உடனே இரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனை மேற்கொள்ளுங்கள்.

ஏனெனில் இதுவும் சிறுநீரக கற்கள் இருப்பதற்கான அறிகுறிகளுள் ஒன்று.

* சிறுநீர் கழிக்கும் போது, அத்துடன் இரத்தம் வெளியேறினால், சிறுநீரக கற்கள் சிறுநீரகங்களில் காயங்களை ஏற்படுத்தி, அதனால் இரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளது என்று அர்த்தம். 

* பிறப்புறுப்பைச் சுற்றி அடிக்கடி கடுமையான வலி ஏற்பட்டால், அதுவும் சிறுநீரக கற்கள் இருப்பதற்கான அறி குறிகளுள் ஒன்று.

சிறுநீர் கழிக்கும் போது கற்கள் சிறுநீர் வடிகுழாய் வழியே நகர்வதால் தான் பிறப்புறுப்பைச் சுற்றி வலி ஏற்படுகிறது. 

* சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் ஏற்படுகிறதா? அதுவும் சிறுநீரக கற்கள் இருப்பதற்கான அறிகுறியே. அதிலும் அந்த எரிச்சலானது சிறுநீர் கழித்து 5-10 நிமிடங்கள் வரை இருக்கும். 

பெண்களே இத்தகைய அறிகுறிகள் இருந்தால் அலட்சியப்படுத்தாமல் உடனடியாக மருத்துவரை பார்ப்பது மிகவும் நல்லது.
Tags:
Privacy and cookie settings