தோள்மூட்டு, புஜம், கைகளில் ஏற்படும் வலி !

4 minute read
தோள் மூட்டு, புஜம், கைகளில் ஏற்படும் வலி உளைவு எரிவுகளு க்குக் காரணம் கழுத்து எலும்புத் தேய்வாக இருக்கலாம் அழுது விடுவாள் போலிருந்தது.
தோள்மூட்டு, புஜம், கைகளில் ஏற்படும் வலி !
சில இரவுகளில் ஒழங்கான தூக்கம் இல்லாததால் கண்கள் கரு வளையம் சூழ்ந்தி ருந்தன. முகம் சோர்ந்தது மாத்திர மின்றிப் பூசிணிப்பழம் போல ஊதியும் கிடந்தது.

சோர்வு க்குக் காரணம் மனத்துயரம் அல்ல என்பது அவள் பேசத் தொடங்கி யதும் புரிந்தது.

வலி!

தாங்க முடியாத வலி. முதுகின் சீப்புப் பகுதியில். உளைவா வலியா என்று பிரிதறிய முடியாத வேதனை.அங்கிருந்த வலி மேலும் நகர்ந்து இடது கை முழுவதும் பரவி உளைந்து கொண்டி ருந்தது. 

நான் துருவித் துருவிக் கேட்ட போது அக் கை நுனியில் சற்று விறைத்து மரத்திருப்தும் தெரிய வந்தது.
பைபாஸ் சிகிச்சைக்குப் பின் பின்பற்ற வேண்டிய சில வழிகள் !
ஒரிரு மாதங்க ளாக வலி இருக்கி றதாம். உளைவா, எரிவா, வலியா என்று பிரித்துச் சொல்ல முடியாத ஏதோவொரு கடுமையான வேதனை. 

ஆரம்ப த்தில் ஓரளவாக இருந்தது, வர வர அதிகரித்துக் கொண்டே வருகிறது. கை வைத்தியம், நாட்டு வைத்தியம் எதுவும் சுகம் கொடுக்க வில்லை.

அருகிலிருந்த மருத்து வரிடம் காட்டிய போது தசைப் பிடிப்பாக இருக்கும் எனச் சொல்லி அவ்விடத்தில் ஊசி ஏற்றியிருக் கிறார். ஆயினும் அந்த ஊசியிலும் எந்தச் சுகமு மில்லை.

கழுத்து எலும்புத் தேய்வு நோய்

அனுபவப் பட்ட மருத்துவர்களுக்கு அத்தகைய வலிக்கான காரணம் வலிக்கும் அதே இடத்தில் இல்லை. வேறு இடத்தி லிள்ள நோய்க்கான வலி இங்கு பிரதிபலிக்கிறது என்பது தெரிந்தி ருக்கும். 

பெரும்பாலும் கழுத்து எலும்புடன் சேர்ந்த Cervical spondylosis என ஊகிப்பதில் பிரச்சனை இருக்காது.

நிச்சயப் படுத்த பரிசோ தனைகள் தேவைப்படும்.

நோய் ஓரிடத்தில் இருக்க வலி வேறு ஒரு இடத்தில் பிரதிபலிப் பதை தொலை விட வலி (Referred Pain) என்பார்கள்

இதனைக் கழுத்து எலும்புத் தேய்வு நோய் என்று சொல்லலாம். வயதாகும் போது ஏனைய எலும்புகளில் தேய்மானம் ஏற்படுவது போலவே கழுத்தின் முண்ணெலும் பிலும் ஏற்படுவ துண்டு. 

40 வயதிற்கு மேல் இத்தகைய பிரச்சனை ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகமாகும்.

பொதுவாக வலி தொடர்ச் சியாக இருப்ப தில்லை. விட்டுவிட்டு வரும். அத்துடன் கழுத்துத் தசைகள் இறுக்கமாகவும் இருக்கும். 

கழுத்து எலும்பு களின் அமைப்பும் பாதிப்பும். கழுத்து எலும்புகள் ஏனைய முதுகெலு ம்புகள் போலவே ஒன்றென்மேல் ஒன்றாக அடுக்க பட்டிருக் கினறன.

அவை தம்மிடை யேயான அசைவாட்டத் திற்காக வட்டுகள் எனப்படும் Intervertebral disc யால் இணைக்கப் பட்டுள்ளன. 

முள்ளெலு ம்புகள் தேய்வதாலும், தேய்ந்த எலும்புகள் இடையேயுள்ள வட்டுகளை அழுத்து வதாலும், சிறு எலும்புத் துணிக்கை கள் வளர்வதாலும்,

முண்ணான், அதிலிருந்து வெளியேறும் நரம்புகள் அழுத்தப் படுதாலும் தான் வலி, வேதனை நரம்புப் பாதிப்புகள் ஏற்படுகின்றன.

நரம்புகள் அழுத்தபட்டால்

ஆனால் இது மோசமாகி, அவற்றிடையே உள்ள இடைவெளி சுருங்கி அதனூடாக வெளி வரும் நரம்புகளை அழுத்துவ தால் வலி ஆதிகமாகும். 

இதன் அறிகுறிக ளாக பின் வருவன வற்றைக் கூறலாம்.கழுத்தில் வலியும்,
ஜலதோசம், மூக்கடைப்பு உடனடி நிவாரணம் !
அதன் தசைகளில் இறுக்கமும் பிடிப்பும். இவ் வலியானது தோள் மூட்டு, புஜம், நெஞ்சு போன்ற இடங்களுக்குப் பரவக் கூடும்.

தோள்மூட்டு, புஜம், கைகளில் ஏற்படும் வலி !
புஜங்கள், கை, கால்கள், பாதம் போன்ற இடங்களில் ஊசியால் குத்துவது போன்ற வலி, உளைவு, எரிவு போன்ற அறிகுறிகள் தோன்றலாம். 

கைகள், விரல்கள், பாதம் போன்ற இடங்கள் மரத்தது போன்ற உணர்வு ஏற்படலாம்.

சிலவேளை அங்குள்ள தசைகள் பலமிழப்பது முண்டு. விரல்க ளால் பற்றுவது சிரமமாக இருக்கலாம். நடப்பதில் சிரமம் ஏற்படக் கூடும். நிலை தளரக் கூடும்.

மலம், சிறுநீர் கழிப்பதில் உள்ள கட்டுப்பாடு குறைந்து, தன்னுண ர்வின்றி அவை வெளி யேறக் கூடும். இது சற்றுத் தீவிரமான நிலையில் தோன்றும்.

நோயை எப்படிக் கண்டறிவது?
ஆரம்ப நிலையில் கழுத்தினது அசைவு, வலியுள்ள இடங்கள் ஆகிய வற்றைப் பரிசோதிப் பதுடன், நரம்புப் பாதிப்புகள் இருக்கிறதா என மருத்துவர் உடற் பரிசோதனை செய்வதுடன் நோயைக் கண்டறிவார்.

X Ray பரிசேதனை செய்வதன் மூலம் கழுத்து எலும்பு களின் நிலை பற்றி அறிந்து கொள்ள முடியும். தேவை ஏற்படின் CT scan, MRI போன்ற பரிசோதனைகள் செய்வார். 

நரம்புகள் எந்தளவு வேகமாகவும், திறமையா கவும் செய்லாற் றுகின்றன என அறிய Nerve conduction study பரிசோதனை யும் உதவலாம்.

சிகிச்சை

சாதரண வலிகளுக்கு சுடுநீர் ஒத்தடம் கொடுப்பது, வலி நிவாரணி ஜெல் பூசுதல், தசைகளைப் பிடித்து விடுதல், மெதுமை யான மசாஜ் போன்றவை உதவும்.

சற்றுக் கடுமை யான வலியெனில் வலி நிவாரணி மாத்திரை கள் தேவைப் படும். கழுத்திற்கு கொலர் (Cervical Collar) அணிவது உதவும். கடுமையெனில் சத்திர சிகிச்சையும் தேவைப் படலாம்

நீங்கள் செய்யக் கூடிய ஏனையவை

தலையக் குனிந்து செய்யும் வேலைகளைக் குறையுங்கள். புத்தகம் படிப்பது, சமையல் வேலை போன்றவற்றின் போது கவனம் எடுக்கவும். குறைந்த தடிப்புள்ள தலையணையை மாத்திரம் உபயோகியுங்கள்.
அஜீரணத்தை போக்கும் சமையலறை பொருட்கள் !
கழுத்தை ஒரே பக்கமாக நீண்ட நேரம் திருப்பி வைத்திருப்பதைத் தவிருங்கள். நடுவில் பள்ளமுள்ள விசேட தலையணைகள் நல்லது. முகம் குப்புறப்படுக்க வேண்டாம்.

• தலையில் பாரங்கள் சுமக்க வேண்டாம். முண்ணான் எலும்புகள், அவற்றை இணைக்கின்ற வட்டுகள் ஆகியவற்றின் அமைப்பையும் 

அவற்றில் ஏற்படுகின்ற சில நோய்களையும் மேலே உள்ள படம் காட்டுகிறது... டாக்டர்.எம்.கே.முருகானந்தன்
Tags:
Today | 6, April 2025
Privacy and cookie settings