சூட்டை குறைக்கும் மல்லிகை பூவின் எண்ணெய் !

நமது உடம்பு சூடு அதிகமானால் கண்கள் பொங்கி எரிச்சலை உண்டாக்கும். தினமும் தலைக்கு எண்ணை தடவிக் கொள்ளபவர்களுக்கு மல்லிகைப் பூ எண்ணெய் ஒரு சிறந்த நிவாரணம்.

குண்டு மல்லிகையை மிக்ஸியில் அரைத்து துணியில் கட்டி தொங்க விடுங்கள்.

அதிலிருந்து விழும் ஒரு சொட்டு சாற்றை எடுத்து அரை கப் சுத்தமான தேங்காய் எண்னையில் கலந்து தினமும் தலைக்கு தடவி வாருங்கள். 

இவ்வாறு செய்து வந்தால், கண் எரிச்சல் என்பதே இருக்காது. எப்போதும் குளிர்ச்சியை உணரலாம். சிலருக்கு மல்லிகைப் பூ வாசம் தலைவலியை ஏற்படுத்திவிடும்.

அவர்கள் 4 சொட்டு மல்லிகைப் பூ சாறுடன் அரை கப் தேங்காய் எண்ணெய் கலந்து வாரம் ஒரு முறை மட்டும் தலைக்கு தேய்த்து சீயக்காய் போட்டு அலசலாம். கூந்தல் பூ போன்று மிருதுவாகவும், வாசத்துடனும் இருக்கும். 

தலைவலியும் வராது. தலையை அரித்து எடுக்கும் பேன் மற்றும் பொடுகை போக்குவதில் மல்லிகை செடியின் வேர் அற்புதமான ஒரு கிருமிநாசினியாக செயல்படுகிறதாம்.
Tags:
Privacy and cookie settings