நாம் இடைவேளை உணவாக சாப்பிடுபவை தான் நமது உடலுக்கு உலை வைக்கும் எமனாக மாறி விடுகிறது. இதன் காரணத்தினால் தான் பெரும்பாலும் உடல் எடை அதிகரிக்கிறது.
நீரிழிவு மற்றும் இதய நோய்கள் ஏற்படுகின்றன. வறுத்து பதப்படுத் தப்பட்டு விற்கப்படும் சிப்ஸ், செயற்கை இனிப்பூட்டிகள் கலந்து விற்கப்படும் சோடா / கோலா பானங்கள் மற்றும் சாக்லேட்கள் உட்கொள்ளும் பழக்கம் அதிகரித்ததன் காரணம் தான்
இன்று தெருவுக்கு, தெரு மருத்துவ மனைகள் ஓங்கி எழுந்து நிற்க காரணமாக இருக்கிறது. ஃபிங்கர் சிப்ஸ் மூலம் உடலில் சேரும் கொழுப்பை கரைக்க நீங்கள் 5.97 கிலோமீட்டர் தூரம் ஓட வேண்டும்.
பர்கர் மூலம் உடலில் சேரும் கொழுப்பை கரைக்க நீங்கள் 4.05 கிலோமீட்டர் தூரம் ஓட வேண்டும்.
பதப்படுத்தப்பட்டு பாக்கெட்டுகளில் விற்கப்படும் சிப்ஸ் மூலம் உடலில் சேரும் கொழுப்பை கரைக்க நீங்கள் 10.47 கிலோமீட்டர் தூரம் ஓட வேண்டும்.
பார் சாக்லேட்கள் மூலமாக உடலில் சேரும் கொழுப்பை கரைக்க நீங்கள் 3.34 கிலோ மீட்டர் தூரம் ஓட வேண்டும்.
நீங்கள் விரும்பி பருகும் கோலா பானத்தின் மூலம் உடலில் சேரும் கொழுப்பை கரைக்க நீங்கள்1.87 கிலோ மீட்டர் தூரம் ஓட வேண்டும்.
சாதாரண கிட் -காட் போன்ற சாக்லேட்கள் மூலம் உடலில் சேரும் கொழுப்பை கரைக்க நீங்கள் 3.54 கிலோ மீட்டர் தூரம் ஓட வேண்டும்.
சிக்கன், முட்டை, வெஜ் போன்ற ரோல் உணவுகள் மூலம் உடலில் சேரும் கொழுப்பை கரைக்க நீங்கள் 11.99 கிலோ மீட்டர் தூரம் ஓட வேண்டும்.
நட்ஸ் கலந்த அடர்த்தியான சாக்லேட் உணவுகள் மூலம் உங்கள் உடலில் சேரும் கொழுப்பை கரைக்க நீங்கள் 3.66 கிலோ மீட்டர் தூரம் ஓட வேண்டும்.
அளவு, ஃப்ளேவர், அதில் சேர்க்கப் பட்டிருக்கும் மூலப்பொருட்கள் சார்ந்த இது வேறுபடலாம்.