பல் போனால் சொல் போச்சு 'என்பது பழமொழி. அதுவும் சிறு வயதில் பல் போனால் முக அழகு பாதிக்கப்படும், உண்பதில் சிரமம் ஏற்படும்.
தற்போதுள்ள சிகிச்சை முறைகளின் மூலம் பல்லின் வேர்ப்பகுதியை பாதுகாத்து பல் விழாமல் காத்துக் கொள்ள முடியும்.
சொத்தைப் பல்லுக்கு ஆரம்பத்திலேயே வேர் சிகிச்சை செய்வதன் மூலம் பல்லை பாதுகாக்க முடியும் என்கிறார் பல் வைத்திய நிபுணர் மீராஸ் முக்தார்.
பற்சுகாதாரம் குறித்து அவர் மேலும் கூறியதாவது,
பல்லில் பாதிப்பு ஏற்படும் முன்னரே வைத்தியரை நாடி, பற்களை பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.
புற்று நோயாளிகள் சிகிச்சை தாமதிக்கக் கூடாது என்று தெரியுமா?
உதாரணமாக பற்கள் பாதிக்கப்பட்டு வீக்கத்துடன் வருவோருக்கு நாம் உடனடியாக சிகிச்சை வழங்குவது குறைவு. ஓரளவு சிறிதாக வீக்கம் இருப்பவர்களுக்கு பல் நீக்கப்படும்.
குடும்ப அட்டை, மின் இணைப்பு பெற ஆதரவு இயக்கம் ஆனால், பெரியளவில் வீக்கம் உடையவர் களுக்கு பற்கள் நீக்கப்பட மாட்டாது.
அவர்களுக்கு ஏற்ற மாத்திரை களை வழங்கி ஒரு குறிப்பிட்ட நாளில் தான் பற்களை கழற்றுவோம். சிறு வயதிலிருந்தே பற்களை ஆரோக்கிய மாக வைப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.
பல் வலிக்க ஆரம்பித்த பின்னர் தான் மருத்துவரைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணமே பலருக்கும் உள்ளது.
சிவந்த உதடுக்கு வீட்டிலேயே லிப் கிளாஸ் தெரியுமா?
குழந்தைகளு க்கு பல் முளைக்க ஆரம்பித்ததில் இருந்து தினமும் இருதடவை பல்துலக்க வேண்டும். பல்லின் இடுக்குகளில் உணவுப் பொருட்கள் படியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
அவ்வாறு சிக்கிக் கொண்டால் வாயைக் கொப்பளித்து உடனடியாகப் பல்லை சுத்தம் செய்ய வேண்டும்.
நீங்கள் லிப் க்ளாஸ், லிப்ஸ்டிக் உபயோகிப்பவரா? அப்ப இதைப் படிங்க !
எச்சிலில் உள்ள அசிட் மற்றும் உணவில் உள்ள கார்போ ஹைரேட்டும் சேர்ந்து பல்லில் சொத்தையை உருவாக் குகின்றன.
பல் சொத்தை பெரிதாக வளர்ந்து பல்லின் வேரைத் தாக்கும் போது தான் வலி ஏற்படுகிறது.
இந்த வலியை கண்டு கொள்ளாமல் விட்டு விட்டால் பல்லின் வேர்ப்பகுதி முழுவதும் பாதிக்கப் பட்டு பல்லை முழுமையாக இழக்கும் நிலை ஏற்படும்.
அந்த படங்களுக்கு அடிமையாக இருப்பதற்கான அறிகுறிகள் தெரியுமா?
பல்லில் சொத்தை ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் அல்லது பல் சொத்தை வாயில் வலியை ஏற்படுத்தும் போதே பல் மருத்துவரிடம் காட்டி வேர் சிகிச்சை மூலம் பாதுகாத்துக் கொள்ளலாம்.
வேரின் தன்மையைப் பொறுத்து பல்லின் ஆயுள் கூடும்.
பல்லின் வேர்ப்பகுதியில் பாதிப்பு ஆரம்பித்த உடனே கண்டறிந்தால் செயற்கை வேர் வைத்து பல்லை உறுதியாக்கி அதன் மீது உரை போட்டு பல்லை உயிருடன் காப்பாற்றி விட முடியும்.
கரோனாவை பற்றி நாம் புரிந்து கொள்ள வேண்டிய சில ஆங்கில சொற்கள் !
இந்த வேர் சிகிச்சையின் மூலம் பல ஆண்டு களுக்கு பல்லைக் காப்பாற்றலாம். வேர் சிகிச்சை என்பது எந்த வயதினரு க்கும் செய்யலாம்.
பல்லில் ஏற்படும் பல் கூச்சம், ஈறு வீக்கம், பல் சொத்தை, வாய் நாற்றம் உள்ளிட்ட எந்தப் பிரச்சினையாக இருந்தாலும்
உடனடியாக பல் மருத்து வரை அணுகி சிகிச்சை செய்து கொள்வதன் மூலம் பல்லின் ஆரோக்கியத்தையும், முகத்தின் அழகையும் பாதுகாக்க முடியும்.
பல்லில் சொத்தை
பற்களின் அமைப்பு ஒழுங்கற்றதாகக் காணப்படு பவர்களுக்கு பற்களுக்கு கிளிப் பாவிப்பதால் அவர்களின் பற்களை சரி செய்து கொள்ள முடியும்.
முன் பக்கத்தில் கடவாய்ப் பற்கள் இரண்டை நீக்கி விட்டு பொறுத்து வதால் பற்கள் சரிவர வாய்ப்புள்ளது.
இந்த கிளிப்களில் நிரந்தரமானது, தற்காலி கமானது என இருவகை உள்ளது. அதாவது, உணவு உண்ணும் போது நீக்கி பின் பொருத்துதல்,
மற்றது நிரந்தரமான பல் கிளிப். ஒரு குறிப்பிட காலம் வரை நீக்காமல் பற்கள் உள்ளே சென்ற பிறகு நீக்கக் கூடிய வகையில் வடி வமைக்கப் பட்டுள்ளது.
வயது எல்லை முக்கியமானது. உதாரணமாக 13 வயதுக் குட்பட்டவர்க ளுக்கு இலகுவில் பற்கள் சீராக அமையும்.
அதே வேளை, 25 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பொருத் தினால் கால தாமதமாகவே பற்கள் சீராக அமையும்.
சாப்பிட்ட பின்னர் வாயில் எஞ்சி இருக்கும் உணவுத் துகள்களே பக்டீரியாக்கள் பெருகு வதற்கு காரணமாகின்றன.
கால்மேல் கால்போட்டு உட்காரும் பெண்ணா நீங்கள்? இந்த பிரச்சனைகள் கண்டிப்பா வரும் !
எனவே ஒவ்வொரு முறையும் சாப்பிட்டு முடிந்ததும் வாயை நன்கு கொப்பளிக்க வேண்டும். காலை, இரவு என்று தினமும் இரண்டு வேளை பல் துலக்குவது அவசியம்.
இரவு படுக்கும் போது உப்புத் தண்ணீரில் வாய் கொப்பளித்து விட்டுப் படுப்பது பற்களுக்கு நல்ல பாதுகாப்பைத் தரும்.
பற்களை நீண்ட நேரம் துலக்கக் கூடாது. ஏனெனில் அது பல்லின் வெளிப் புறத்தில் உள்ள எனாமலைத் தேய்த்து விடும்.
கறி லீஃப் பிரான் செய்வது எப்படி?
உணவுத் துகள்கள் பற்களுக்கும் ஈறுகளு க்கும் இடையில் தங்காது. பக்டீரியா தொற்றுக்கான வாய்ப்புகள் குறையும். துர் நாற்றமும் ஏற்படாது.
ஈறுகளில் வீக்கமும் இரத்தக் கசிவும் ஏற்படாமல் பற்கள் பாதுகாக்கப்படும். பற்சிதைவு ஆரம்பத்தில் ஒரு சிறிய கரும்புள்ளியாக பல்லின் மேற்பரப்பில் தோன்றும்.
இந்த நிலையிலேயே பல் மருத்துவரைச் சந்தித்து உரிய ஆலோசனையையும் சிகிச்சையையும் பெற்றால் மேற்கொண்டு பல் சொத்தை ஆகாமல் பாதுகாக்கலாம்.
ஆனால் மிக ஆழமாகக் குழி உண்டாகி நரம்பு வரையிலும் பற்சிதைவு ஏற்பட்டிருந்தால் பற்களைப் பிடுங்கி எடுக்க வேண்டிய அவசியம் உருவாகும்.
மேட்டுப்பாளையம் மட்டன் குழம்பு செய்வது எப்படி?
ஆனால் அதற்கு முன்பே பல் மருத்துவரை நாடினால் வேர் சிகிச்சை மூலம் பல்லைப் பிடுங்காமலே காப்பாற்ற முடியும்.
பற்களை கழற்றினால் ஒரு மாதத்தில் இருந்து ஆறு மாதங்களுக்குள் செயற்கைப் பற்களைப் பொருத்திக் கொள்ள வேண்டும்.
இதைத் தவிர்த்து எஞ்சிய பற்களைப் பாதுகாக்கப் பொய்ப் பற்கள் கட்டிக் கொள்வது தான் உத்தமம். பற்களால் நகத்தைக் கடித்தல், பென்சில்
போன்ற பொருட்களைக் கடித்தல், குண்டூசி மற்றும் குச்சியால் பற்களைக் குத்துதல் போன்ற செயல்களைச் செய்யக் கூடாது.
இவை பற்களில் நோய்த் தொற்றினை ஏற்படுத்தி விடும். காபனீரொசைட் கலந்த குளிர் பானங்கள் அருந்து வதைத் தவிர்க்க வேண்டும்.
இவற்றில் உள்ள அமிலங்கள் பற்களில் உள்ள எனாமலைப் பாதிப்பதோடு பற்களையும் அரிக்கின்றன.
மார்பின் புள்ளியில் தேய்ப்பதால் கிடைக்கும் பெறும் நன்மைகள் !
பானங்களைக் குடித்தே ஆக வேண்டிய சமயங்களில் இயன்றவரை ஸ்ட்ரோ மூலம் அருந்தலாம். பால் புட்டியில் பால் அருந்தியவுடன் குழந்தைகள் அப்படியே உறங்கி விடுவார்கள்.
பற்களின் பாதுகாப்புக்கும் இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது.
வாயில் உள்ள பாக்டீரியாக்களை முழுமையாக நீக்க இதை செய்யுங்க !
பல் மற்றும் ஈறு தொடர்பான நோய்கள் சர்க்கரை நோயாளிகளுக்கு அதிகம் வர வாய்ப்பிருப்பதால் இரத்தத்தில் சர்க்கரையைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது நல்லது.
புகையிலை மற்றும் மதுப் பழக்கம் ஈறுகளில் புற்று நோயை ஏற்படுத்தும் சாத்தியம் இருப்பதால் அவற்றைத் தவிர்ப்பது பல் பாதுகாப்புக்கு உதவும்.