தற்போது பெரும்பாலான பெண்களுக்கு சிசேரியன் மூலம் தான் குழந்தைப் பிறக்கிறது. இதற்கு கர்ப்ப காலத்தில் பெண்கள் நன்கு குனிந்து நிமிர்ந்து வேலை செய்யாமல் இருந்தது மட்டுமின்றி,
குழந்தையின் தவறான நிலையும் காரணங்களாகும். சிசேரியன் பிரசவத்திற்குப் பின் பெண்கள் கடுமையான வலிகளை சந்திப்பார்கள்.
எனவே சிசேரியன் செய்த பெண்களுக்கு சில மாதங்கள் நல்ல ஓய்வு என்பது அவசியம். அதிலும் அறுவை சிகிச்சையினால் ஏற்பட்ட காயங்கள் குணமாகும் வரை பெண்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
குறிப்பாக ஒருசில செயல்களை சிசேரியன் செய்த பெண்கள் சில மாதங்களுக்கு மேற்கொள்ளக்கூடாது. இங்கு சிசேரியன் செய்து கொண்ட பெண்கள் கட்டாயம் செய்யக்கூடாத சில செயல்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.
கடுமையான உடலுழைப்பு.
சிசேரியன் செய்த பெண்கள், உடலுக்கு நல்ல ஓய்வை வழங்க வேண்டும். அதை விட்டு குணமாகும் முன்பே கடுமையான உடற்பயிற்சிகள் அல்லது வீட்டு வேலைகளைச் செய்தால், அதனால் வலி இன்னும் அதிகரிப்பதோடு, கடுமையான விளைவை சந்திக்க நேரிடும்.
மிகுந்த எடை கொண்ட பொருட்களை தூக்குவது.
சிசேரியன் மூலம் குழந்தைப் பெற்றுக் கொண்ட பெண்கள், சில வாரங்களுக்கு மிகுந்த எடையைக் கொண்ட பொருட்களைத் தூக்கக்கூடாது. அப்படி தூக்கினால், தையல் கிழிந்து, இரத்தக்கசிவு ஏற்படக்கூடும்.
உடல் வறட்சி.
மற்றொரு முக்கியமான ஒன்று, பிரசவித்த பெண்கள் அதிகளவு நீரைப் பருக வேண்டும். உடலை வறட்சியடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு நீரை அதிகம் பருகுவதனால்,
உடலின் ஆற்றல் நிலைத்திருப்பதோடு, மலச்சிக்கலும் தடுக்கப்படும். சிசேரியன் பெண்களுக்கு மலச்சிக்கல் ஏற்பட்டால், அடிவயிற்றில் அழுத்தம் அதிகரித்து, வலி இன்னும் அதிகமாகும்.
மாடி படிக்கட்டு ஏறுவது.
முடிந்த அளவில் மாடிப்படி ஏறுவதை சிசேரியன் செய்த பெண்கள் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால், அறுவை சிகிச்சையினால் ஏற்பட்ட காயங்கள் இன்னும் மோசமாக, இரத்தக்கசிவு இன்னும் அதிகரிக்கக்கூடும்.
உடலுறவு.
சிசேரியன் செய்திருக்கும் பெண்கள் குறைந்தது 1 வாரத்திற்காவது உடலுறவில் ஈடுபடக்கூடாது. ஒருவேளை அவ்வாறு காயம் குணமாகும் முன் உடலுறவில் ஈடுபட்டால், தையல் கிழிந்து, இரத்தக்கசிவு மற்றும் இதர சிக்கல்களை சந்திக்க வேண்டியிருக்கும்.
இருமல்.
சிசேரியன் செய்த பெண்கள் முடிந்த அளவில் சளி, இருமல் வராமல் கவனமாக இருக்க வேண்டும். அதிகமாக இருமினால், அடிவயிற்றில் போடப்பட்டுள்ள தையலினால் ஏற்பட்ட காயங்கள் மோசமாகும்.
எண்ணெய் அல்லது கார உணவுகள்.
சிசேரியன் செய்திருக்கும் பெண்கள் மிகவும் சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும். குறிப்பாக உண்ணும் உணவுகளில் கவனமாக இருக்க வேண்டும்.
செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும் வகையிலான உணவுகளை உட்கொண்டால், அது காயங்கள் குணமாக தாமதப்படுத்தும்.
நீண்ட நேர குளியல்.
நீண்ட நேரம் குளிப்பதை சிசேரியன் செய்த பெண்கள் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இதனால் அறுவை சிகிச்சை மேற்கொண்ட இடத்தில் நோய்த்தொற்றுக்கள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகரிக்கும்.
எனவே வேகமாக குளித்துவிட்டு வருவதோடு, காயமுள்ள பகுதியை சுத்தமான துணியால் துடைத்துவிட வேண்டும்.
காய்ச்சல்.
புதிய தாய்மார்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டியது அவசியம். குறிப்பாக காய்ச்சல் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் காய்ச்சல் வந்தால், காயங்கள் குணமாவதில் தாமதமாகும். எனவே கவனமாக இருக்க வேண்டும்.
இது போன்ற நல்ல பல தகவல்களை எங்களது இணையத்தளதில் நீங்கள் வாசித்தறிந்து கொள்ளும் போது அதன் மூலம் நீங்கள் பெற்றுக் கொண்ட அறிவை
உங்களோடு மாத்திரம் இருத்தி சுயநலவாதிகளாக இல்லாமல் உங்கள் நண்பர்களுக்கும், ஏனையோருக்கும் இத்தகவலைப் பகிர்ந்து நன்மைகளைத் தேடிக் கொள்ளுங்கள்.