இன்றைய நாகரிக உடைகள்.. ஜீன்ஸ் !

இறுக்கமான ஆடை அணிவது என்பது இரு பாலருக்குமே ஏற்றது அல்ல. இன்றைய இளம் பெண்கள் உடலை இறுக்கிப் பிடிக்கும் ஆடைகளை விரும்பி அணிகிறார்கள். 
ஜீன்ஸ்


இளம் பெண்கள் உடை அணிந்ததே தெரியாத அளவுக்கு, லெகின்ஸ், டைட்ஸ் என நவநாகரிக உடைகள் இப்பொழுது கடைகளில் கிடைக்கின்றன. பெண்கள் நடந்து செல்வதற்கும்,

வண்டி ஓட்டுவதற்கும், இறுக்கமான உடைதான் சௌகரியம் என்று கருதுகின்றனர். ஆனால், உடலை ஒட்டிப் பிடிக்கும் உடைகள் உடலுக்கு நல்லதல்ல.

காலச் சூழலுக்கு ஏற்ற உடைகளை அணிய வேண்டுமே தவிர, சதாசர்வ காலமும் இறுக்கமான உடைகள் அணிவது நல்லது அல்ல. பெண்கள் இறுக்கமான உடைகளை அணியும் போது, வியர்வை வெளியேற முடியாமல், 

அதாவது வெளியே வர வாய்ப்பு இல்லாமல் கிருமிகளின் வளர்ச்சி பன்மடங்கு உயர்ந்து விடும். இதனால், வேர்க்குரு, உஷ்ணக் கட்டிகள் மற்றும் கோடைக் கால நோய்கள் சருமத்தைப் பாதிக்கும். 

மேலும் அணியும் உள்ளாடைகள், சாக்ஸ் உட்பட இறுக்கமாக இருந்தால், உடலில் துர்நாற்றம் வீசுவதோடு, படை, சொறி சிரங்கு, அரிப்பு போன்றவை வரும். உடலில் ரத்த ஓட்டம் குறைந்து, சுவாசத் திறன் பாதிக்கும். 

தோள் பட்டை, முதுகு வலி ஏற்படலாம். ஓரளவு தளர்வான பருத்தி ஆடைகளை அணிவது தான் உடல் ஆரோக்கி யத்திற்கு ஏற்றது. காற்று உட்புகவும், அதிகப் படியான வியர்வை வெளியேறவும் வழிவகுக்கும். 

ஈரத்தை நன்கு உள்வாங்கும். உடலுக்கு நல்ல குளிர்ச்சியையும் தரக்கூடியது. ஆணோ, பெண்ணோ அனைத்து தரப்பினரும் உபயோகிக்கும் ஒரு உடையாக இருக்கிறது ஜீன்ஸ். 

எத்தனை நாளைக்கு வேண்டு மானாலும் துவைக்காமல் போட்டுக் கொள்ளலாம் அப்படி ஒரு சவுகரியம் அந்த உடையில் உள்ளது. ஆனால் ஜீன்ஸ் உடையில் சில அசௌகரி யங்களும் இருப்பதாக கூறுகின்றனர் மருத்துவர்கள். 

ஆண்களுக்கு ஆண்மை குறைபாடும், பெண்களுக்கு நரம்பு தொடர்பான நோய்களும் ஏற்படுவ தாகவும் அவர்கள் எச்சரிக்கின்றனர்.
ஆண்மை குறைபாடு


ஜீன்ஸ் அணிந்த இளசுகளை கேட்டாலே அந்த உடையைப் பற்றி கதை கதையாக கூறுவார்கள். சவுகரியமான உடை, தன்னம்பிக்கை தரக்கூடிய உடை, அழகை எடுப்பாக எடுத்துக் காட்டும் என்றெல்லாம் கூறுவார்கள். 

ஜீன்ஸ் உடை அணிய எத்தனை காரணங்களை கூறினாலும் இறுக்கமான ஜீன்ஸ்களை தொடர்ச்சியாக அணியும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் அதனால் பல பாதிப்புகள் ஏற்படுகின்றன என்பது ஆய்வு ரீதியாக நிரூபணம் ஆகி யிருக்கிறது.

பயணத்திற்கு சவுகரியமானது என்று கருதி, இறுக்கமான ஜீன்சை தொடர்ச்சி யாக பயன் படுத்தினால் அது உடலை இருக்கிப் பிடித்து மெரால்ஜியா பாரஸ்தெற்றிகா' என்ற பாதிப்பை உருவாக்கி விடும். 

ஜீன்சும், பெல்ட்டும் போட்டிபோட்டு இறுக்குவதால் பெண்களின் அடி வயிற்றில் இருந்து தொடைப் பகுதி வழியாக செல்லும் மெல்லிய நரம்பு பாதிக்கப்படும் என்று கூறும் மருத்துவர்கள் இதனால் கடுமையான கால் வலி ஏற்படும் என்கின்றனர். 

ஜீரணம் பாதிக்கும் நடுத்தர வயதினர் இறுக்கமான ஜீன்ஸ் அணிந்தால் அவர்களது ஜீரண செயல்பாடுகள் குறையும் என்றும் ஆய்வு மூலம் கண்டறியப் பட்டிருக்கிறது.

இடுப்பு பகுதி தொடர்ந்து இறுக்கப் படுவதால், அவர்கள் முது கெலும்பும் நெருக்கடிக்கு உள்ளாகிறது.

ஜீன்ஸ் உடலை இறுக்குவதால் சருமத்தில் காற்று படாது. அதனால் வியர்வை தேங்கி, கிருமித் தொற்று உருவாகும். உடல், உடையால் இறுக்கப்படுவதால், ரத்த ஓட்டம் பாதிக்கப் படுகிறது. 

அதனால் சருமத்தில் சுருக்கம், வறட்சி, லேசான காயங்கள் ஏற்படுவ தாகவும் சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆண்மைக் குறைபாடு பெண்களை விட ஆண்களுக்கு ஜீன்ஸ் தரும் பாதிப்பு அதிகம்.. 

இறுகிய ஆடைகள் அணிவதே அவர்களின் இனப்பெருக்க சக்தி குறை பாட்டிற்கு காரணம்' என்று சுவீடனில் நடந்த ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.

அதை தொடர்ந்து சுவிடிஷ் டைட் பேண்ட் தியரி' என்ற ஒரு கொள்கையை ஆய்வாளர்கள் உருவாக்கி னார்கள்.
சருமத்தில் சுருக்கம்


ஆண்களின் இறுக்க மான ஜீன்ஸ் போன்றவை களை அணியும் போது ஆண்களின் விரைப் பைகள் மீண்டும் உடலோடு நெருக்கப்பட்டு, உஷ்ண பாதிப்புக்கு அவை உள்ளாகின்றன. 

அதனால் உயிரணு உற்பத்தி குறைந்துபோகிறது. இறுக்கமான ஜீன்சை தொடர்ந்து அணிகிறவர் களின் உயிரணு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்படும்.

சிறுவர்களுக்கு இறுக்கமான உள்ளாடை களையோ, ஜீன்ஸ் களையோ அணிவிக்க வேண்டாம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இருக்கமான உடை அணிவித்தால் எதிர் காலத்தில் அவர்கள் ஆண்மைக் குறைபாடு கொண்டவர்க ளாக ஆகக்கூடும் என்றும் ஆய்வாளர்கள் எச்சரிக்கி ன்றனர்.

ஆரோக்கிய மான உடை ஜீன்ஸ் அணிவதால் இவ்வளவு பிரச்சினைகள் இருந்தாலும், பேஷன், சவுகரியம் போன்ற வைகளை அடிப்படையாகக் கொண்டு பலரும் அதைத்தான் அணிய விரும்புவார்கள். 

ஆண்களைப் பொருத்தவரை, அவர்களுடைய பிறப்புறுப் பிற்குக் கொஞ்சம் கூடக் காற்று செல்ல வசதி இல்லாமல் போய் விடுகிறது. 

இதனால், வியர்வை சுரந்து அதிகப் படியான துர் நாற்றத்தை ஏற்படுத்தும். அதிலும் குறிப்பாக ஆண்களுக்கு இயற்கை யாகவே விதைகள் (testes) குளிர்ந்த சூழலைப் பெறுமாறு அமைந்துள்ளது. 

ஆனால், மிக இறுக்கமான உள்ளாடைகள் அணியும் போது, அவர்களுக்குச் சுரக்கக் கூடிய விந்துவின் திடத்தன்மை குறைவதுடன், அந்த இடத்தில் உருவாகும் அதிகப் படியான வெப்பத்தினால் விந்தணுக்களின் எண்ணிக் கையும் குறையக் கூடிய வாய்ப்புகள் கூடும். 

மேலும், இறுக்கமான ஆடை அணிவதையே வழக்கமாக வைத்திருப்ப வர்களுக்கு ஆண்மைக் குறைவு மற்றும் சிறுநீரகம் சம்பந்தமான பிரச்னைகள் உண்டாகவும் வாய்ப்புகள் இருக்கின்றன.

அவர்கள் பாதிப்பு இல்லாத அளவிற்குரிய ஜீன்ஸ்களை தேர்ந்தெடுத்து அணிய வேண்டும். ஸ்கின் பிட்' ஜீன்ஸ் அணிபவர்கள் நெகிழ்வு தன்மை கொண்ட துணிகளில் தயாரித் தவைகளை வாங்க வேண்டும். 

ஸ்ட்ரச்சபிள் ஜீன்ஸ்' என்று சொல்லப்படும் அவை, நெகிழும் தன்மை கொண்டிருப்ப தால் உடலை இறுக்காது. தூர பயணம் மேற்கொள்ளும் போது ஸ்கின் பிட் ஜீன்ஸ் அணிய வேண்டாம். 
சிறுநீரகம் சம்பந்தமான பிரச்னை


அணிந்து கொண்டு காலுக்கு மேல் கால் போட்டபடி பயணம் மேற்கொள்ளவும் வேண்டாம். ஜீன்ஸ் அணிபவர்கள் பேஷனைவிட ஆரோக்கியம் முக்கியம் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் என்பது மருத்துவர்களின் அறிவுரை யாகும். 

பேஷன் என்ற பெயரிலோ, தனக்கு கட்டுடல் இருக்கிறது என்பதை காட்டவோ தன் இடுப்பளவை விட குறைந்த அளவிலான ஜீன்ஸ்களை ஒருபோதும் வாங்கக் கூடாது. 

தன் உடலுக்கு பொருத்த மானவைகளை மட்டுமே வாங்க வேண்டும். தொடர்ச்சியாக ஒரு போதும் ஜீன்ஸ்களை அணியாதீர்கள்.

அதுவும் கோடை காலத்தில், ஜீன்ஸ்கள் அணிவதை தவிர்த்திடுங்கள் என்கின்றனர் மருத்துவர்கள்.
Tags:
Privacy and cookie settings