முதுமையடையும் வேகத்தைக் கண்டறிய புதிய பரிசோதனை…!

1 minute read
ஒருவர் என்ன வேகத்தில் முதுமை அடைந்து வருகிறார் என்பதைக் கண்டறிவ தற்கான புதிய பரிசோதனை ஒன்றை லண்டனில் விஞ்ஞானிகள் உருவாக்கி யுள்ளனர்.
 


ரத்தத்தி லிருந்தும் மூளையி லிருந்தும், தசை திசுக்களி லிருந்தும் எடுக்கப்பட்ட நூற்றுக்கும் அதிகமான மரபணுக்கள் என்ன நிலையில் இருக்கின்றன என்பதை வைத்து முதுமை யடையும் வேகத்தைக் கண்டறிய முடியும் என தெரிவிக்கப் படுகிறது.

நல்ல ஆரோக்கி யத்துடன் இருக்கும் இருக்கும் அறுபத்தைந்து வயதுக்காரர் களிடம் இருந்து எடுக்கப்படும் மரபணுக் களையும்,

இளவயதுக் காரர்களிடம் இருந்து எடுக்கப்படும் மரபணுக் களையும் ஒப்பிட்டு, ஆரோக்கியமாக முதுமையடை வதலுக்கான சூத்திரம் ஒன்றை விஞ்ஞானிகள் வகுத்துள்ளனர்.


சிலர் தங்களின் நிஜமான வயதைக் காட்டிலும் பதினைந்து வயது வரை கூடுதலாக முதுமை எய்தியவர்களாக இருக்கின்றனர் என்று அவர்கள் கண்டறிந் துள்ளனர்.

இந்த பரிசோதனை மூலம் எளிதில் நோய் வாய்ப்படக் கூடியவர்களை அடையாளம் காண முடியும் என்று அவர்கள் தெரிவிகின்றனர்.
Tags:
Today | 7, April 2025
Privacy and cookie settings