சென்னை போன்ற பெருநகரங் களில் கறவை மாடுகளுக்கு ஊசி போட்டு பால் அதிகம் சுரக்கச் செய்கின்றனர். அதனால் மாடு இளைத்து பாதிப்புக்கு உள்ளாகிறது.
அந்த பாலைக் குடிக்கும் மனித இனத்துக்கும் பாதிப்பு ஏற்படுகிறது என்று, ‘தி இந்து’ உங்கள் குரல் தொலை பேசி எண்ணில் பெயர் குறிப்பிட விரும்பாத வாசகர் ஒருவர் கூறி னார்.
இதுகுறித்து விசாரித்தபோது பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் கிடைத்தன.
தமிழ்நாட்டில் 56 லட்சத்து 6 ஆயிரத்து 290 கலப்பின மற்றும் நாட்டு இன பசுக்கள், 5 லட்சத்து 39 ஆயிரத்து 943 எருமை மாடுகள் உள்ளன.
மொத்தம் 61 லட்சத்து 46 ஆயிரத்து 233 கறவை மாடுகள் இருக்கின்றன. சென்னை போன்ற பெருநகரங்களில் மக்கள்தொகை பெருக்கம் காரணமாக பாலின் தேவை மிக அதிகம்.
இங்கு தான் முறைகேடு நடப்பதாக அரசு அதிகாரி ஒருவர் கூறினார். கறவை மாடுகளுக்கு பால் அதிகம் சுரக்க வேண்டும் என்பதற் காக ஆக்ஸி டோஸின் ஊசியைப் போடுகின்றனர்.
இதனால் ஒன்று முதல் ஒன்றரை லிட்டர் வரை பால் கூடுதலாகக் கிடைக்கிறது. இந்த ஹார்மோன் ஊசியைப் போடும்போது மாட்டின் மடியில் உள்ள மொத்த பாலும் சுரந்துவிடும். இதனால் மாடு இளைத்து விடும்.
சில மாடுகள் இறந்துவிடும். இந்த ஊசியைப் போடுவதால் மாட்டின் இனப்பெருக்க ஆற்றலும் வெகுவாகப் பாதிக்கப்படுகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு விவ சாய சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் செ.நல்லசாமி கூறும் போது, “அதிகம் பால் சுரப்பதற்காக ஊசி போட்டு மாடுகளை சித்ர வதை செய்கின்றனர்.
இதை தடுக்காவிட்டால் புற்றுநோய், மலட்டுத்தன்மை, கர்ப்பம் கலை தல் போன்ற பாதிப்பு தவிர்க்க முடியாததாகிவிடும்” என்றார்.
இதுதொடர்பாக தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக சிகிச்சைத் துறை இயக்குநர் ஆர்.ஜெயப் பிரகாஷ் கூறும்போது, ‘‘மாடு கன்று ஈனுவதற்கு சிரமப் படும்போது
அதன் கர்ப்பப் பை சுருங்கி விரிந்து கன்றுக்குட்டி எளிதாக வெளிவருவதற்காக மட் டும் அதாவது மருத்துவப் பயன்பாட்டுக்காக ஆக்ஸிடோ ஸின் ஊசி போடப்படுகிறது.
இதனை அதிகம் பால் சுரப்ப தற்காக பயன்படுத்துவது சட்டப்படி குற்றம். அவ்வாறு விற்பனை செய்யும் மெடிக்கல் ஸ்டோரின் உரிமம் ரத்து போன்ற கடும் நட வடிக்கை எடுக்கப்படுகிறது.
இந்த ஊசியைப் பயன்படுத்தினால் மாடு இளைத்து, கடும் பாதிப் புக்கு உள்ளாகும். அந்த பாலைக் குடிக்கும் மக்களுக்கு இனப்பெருக் கம் தொடர்பான பாதிப்பு ஏற் படும்.
குறிப்பாக பெண் குழந்தை யாக இருந்தால் விரைவாக பூப் பெய்தும் அபாயம் இருக்கிறது. இந்த ஊசியைப் பயன்ப டுத்தினால் மாடுகளும், மக்களும் பெரிதும் பாதிக்கப்படுவர்” என்றார்.