அக்பரிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய பாடம் !

4 வயதில் முகலாய அரச சிம்மாசனத்தில் ஏற்றப்பட்ட பேரரசர் அக்பர் (எ) அபுல் ஃபத் ஜலாலுதீன் முஹம்மது அக்பர்.
அக்பரிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய பாடம் !
வெகு விரைவில் ஏகாதிபத்திய பலத்தை பெற்று, முகலாய சாம்ராஜ்ய த்தை தென் கிழக்கு ஆசியா முழுவதும் விரிவுப் படுத்தினார். 

அவருக்கு முன்னும் பின்னும் இந்தியாவை படையெடுத்த வர்களைப் போல் அல்லாமல், இந்தியாவில் உள்ள மத மற்றும் கலாச்சார வேறுபாடுகளுக்கு மதிப்பளித்தார் அக்பர்.

அமிலப் பின்னோட்ட நோய் எப்படி ஏற்படுகிறது? அறிகுறிகள் என்ன?

அதேப் போல் அவருடைய ஆன்மீக தலைமை அமை தியையும், நிலைத் தன்மையையும் கொண்டு வந்தது. அதனால் அவருக்கு கீழ் முகலாய சாம்ராஜ்யத்தின் அளவும் சொத்தும் மூன்று மடங்கு பெரிதானது.

முகலாய வரலாற்றில் மிகவும் போற்றப்பட்ட பேரரசராக விளங்கிய அக்பரின் புகழுக்கு பின்னணியாக உள்ள காரணங்களைக் கண்டு கொள்ள 

முகலாய சாம்ராஜ்யத்தின் உச்சிக்கே நாம் செல்ல வேண்டியிருக்கும். அக்பரிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்.

பன்முகத் தன்மையைப் போற்றுதல்
அக்பரிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய பாடம் !
தாராள மயமாக்குதல் என்பது இல்லாத காலத்தில் இத்தகைய ஒன்றை கூறுகிறோம் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அக்பர் மிகவும் பொறுமை சாலியாக இருந்தார். 

இந்தியாவின் பன்முகத் தன்மையை அவர் போற்றினார். நீங்கள் கையாளும் மக்களை ஆழமாக புரிந்து கொள்வதால் மட்டுமே வருவது அது. 
இது தான் ஒரு தலைவரை முதலாளி தன்மையில் இருந்து பிரிக்கும். நிர்வாகத்தின் பயனைப் பெற இஸ்லாமிய மதத்திற்கு மாற வேண்டிய அவசியமில்லை என அவர் கூறினார். 

இவருடைய இத்தகைய கொள்கைகள் தான் பெருவாரியான மக்களிடையே இவரின் புகழை உயர்த்தியது.

உயர்மதிப்பீடு திறமை
அக்பரிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய பாடம் !
அக்பர் தன்னிடம் பணி புரிவதற்கு சிறந்த நபர்களை வேட்டையாடி கண்டுப் பிடித்தார். தன் அரசாட்சியில் இருந்து மிகவும் திறமை வாய்ந்த 9 நபர்களைத் தேர்ந்தெடுத்து தன் சபையில் அவர்களை அங்கம் வகிக்க செய்தார். 

இந்த நபர்கள் தன் பின்னாளில் அக்பரின் நவரத்தினங்கள் என அழைக்கப் பட்டனர். தனக்கு ஒரு நபர் வேண்டும் என்றால் அவரிடம் என்ன இருக்க வேண்டும் என்பதை அக்பர் தெளிவாக தெரிந்து வைத்தி ருந்தார்.

இந்த தெளிவு, அவரை எப்போதும் சிறந்த நபர்களையே தேர்ந்தெடுக்க வைத்தது.

எதிர்நோக்குதல்
அக்பரிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய பாடம் !
அற்புதமான தொலை நோக்கு பார்வையை கொண்டவராக விளங்கினார் அக்பர். தன் வருங்கால ஆற்றல்மிக்க எதிராளிகள் யாரென்பதை அவரால் கணிக்க முடிந்தது. 

அதே போல் அனைத்து பிரச்சனை களையும் தீர்க்க தன் மென்மையான சாதுரிய திறன்களை அவர் பயன் படுத்தினார். 

ராஜ்புட் தான் தன்னுடைய மிக பலமான எதிராளிகள் என்பதை அவர் எதிர் நோக்கிய போது, ராஜ்புட் இளவரசியை மணம் புரிந்து, கடுமையான 
ஆனால் விசுவாசமான ராஜ்பு அரசர்களை வென்றார். இன்றைய கார்ப்பரேட் உலகத்தில் உங்கள் போட்டியாளரின் மகளை மணம் முடிப்பது கண்டிப்பாக உதவாது. 

நாங்கள் என்ன சொல்கிறோம் என்பது கண்டிப்பாக உங்களுக்கு புரியும்.

ஆர்வமிக்கவராக இருத்தல்
அக்பரிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய பாடம் !
போர்களத்தின் வாள்களும், அம்புகளும் அவரை பேனா அருகிலேயே அண்ட விடவில்லை தான். ஆனால் படிப்பறிவு இல்லாத இந்த அரசர் 24,000 புத்தகங்களைக் கொண்ட நூலகத்தைக் கட்டினார்.

சமஸ்கிருதம், ஹிந்துஸ்தானி, பாரசீகம், கிரேக்கம், லத்தீன், அரபு மற்றும் காஷ்மீரி போன்ற மொழிகளில் எழுதிய புத்தகங்கள் இங்கே வைக்கப்பட்டது. 

வாழ்க்கை, மதம் மற்றும் நிர்வாகத்தின் மீதான தங்கள் கண்ணோட்டங் களைப் பகிர்ந்து கொள்ள புத்திஜீவி களையும், மத தலைவர் களையும் அவர் ஆர்வத்துடன் அழைத்தார்.

அக்பரின் நிர்வாகச் சீர்திருத் தங்களோடு ராணுவ புதுமைகளும் துணை நின்றது. பீரங்கிகள், யானைகள், 
அரணமைத்தல், துப்பாக்கி போன்றவற்றை அவரின் கீழிருந்த முகலாயர்கள் திறம்பட பயன் படுத்தினார்கள்.
மேம்பட்ட துப்பாக்கிகள் மற்றும் பீரங்கிகளைப் பயன் படுத்துவதில் திறமையை வளர்க்க ஓட்டோமேன் மற்றும் ஐரோப்பி யர்களுடன் சாதுர்யமான உறவை வளர்த்துக் கொண்டார். 

அனைத்து துறைகளிலும் புதுமைகளை வரவேற்றார். இவருடைய ராணுவ பலமே இவருக்கு 'ஆயுத பலம் கொண்ட பேரரசர்' என்ற பட்டத்தை பெற்றுத் தந்தது.
Tags:
Privacy and cookie settings