அமெரிக்க நில அதிர்வுவியலாளர் 'சார்லஸ் ரிச்டர்' 1935ம் ஆண்டில் முதன் முதலாக நில அதிர்வுகளுக்கு நில அளவுகளை வரையறுத்தார். இது தரையில் ஏற்படும் நில அதிர்வின் அலை உயரத்தைக் கணிக்கும்.
இதன் ஒரு யூனிட் அதற்கு முந்தைய யூனிட் அளவை விட பத்து மடங்கு அதிக அதிர்வுகளைக் கொண்டதாக இருக்கும்.
நில அதிர்வுகள் ஒரு மில்லி மீட்டருக்கும் குறைவான அளவிலிருந்து பல மீட்டர்கள் வரை மிக அதிக மாறுபாடுகளைக் கொண்டதாக இருப்பதால், அவர் அளவுகளை இவ்வாறு வரையருக்க வேண்டியிருந்தது.
ஆகவே ரிக்டர் ஸ்கேலில் 5 என்ற அளவு நான்கை விட பத்து மடங்கு அதிக அதிர்வுகளைக் கொண்டதாக இருக்கும். மூன்றை விட 10x10 அல்லது 100 மடங்கு அதிக அதிர்வுகளைக் கொண்டதாக இருக்கும்.
ரிக்டர் அளவில் 2.0க்கு குறைவானவற்றை சாதாரண மனிதர்களால் அறிய முடியாது. இவைகள் மைக்ரோ பூகம்பம் எனப்படும். இவை சர்வசாதாரணமாக தொடர்ந்து நடைபெறும்.
6.0க்கு மேல் பதிவாகும் பூகம்பங்கள் மோசமான பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை. ரிக்டர் அளவை உருவான பிறகு அதிக பட்சமாக 8.9 வரை பதிவு செய்யப் பட்டுள்ளது.
ஆனால் பூகம்பம் நிகழும் இடத்தைப் பொறுத்து ஒரே ரிக்டர் அளவைக்கு மாறுபட்ட பாதிப்புகள் ஏற்படலாம். மக்கள் நெருக்கியடித்து வாழும் நகரின் மையத்தில் நிகழும் பூகம்பம் அளவிட முடியாத நாசத்தையும், உயிர் சேதத்தையும் ஏற்படுத்தலாம்.
ஆனால் அதே அளவு பூகம்பம் ஒரு தட்டையான வனப்பிரதேசத்தில் ஏற்பட்டால் அங்குள்ள வனவிலங்குகளைச் சற்று சிதறி ஓடுவதைத் தவிர வேறு பாதிப்புகளை உண்டாக்காமலும் இருக்க முடியும்.