வாயு நிரப்பப்பட்ட உலகின் மிகப்பெரிய விமானம் !

ஹீலியம் வாயு நிரப்பப் பட்ட உலகின் மிகப்பெரிய கலப்பு விமான மான ‘ஏர்லேண்டர் 10’ அண்மையில் முதன் முறையாக வானில் வெற்றி கரமாக வலம் வந்தது.
பறக்கும் புட்டம்
92 மீட்டர் நீளமும், 26 மீட்டர் உயரமும், 43.5 மீட்டர் அகலமும் கொண்ட இந்த ‘பாதி விமானம், பாதி ஹெலிகாப்டர்’ என காக்டெய்ல் கலப்பில் உருவான விமானம் 

மத்திய இங்கிலாந்தை அரை மணி நேரம் சுற்றி வந்து தன் வெற்றி கரமான வருகையை உலகுக்கு அறிவித்தது.
ஏர்லேண்டரின் உருண்டு பருத்த வடிவம் அதற்கு ‘பறக்கும் புட்டம்’ என்ற கேலியான பெயரை பெற்றுத் தந்துள்ளது என்றாலும், 

போயிங் 747 விமானத்தை விட பெரியதான உருவத் தோடு அதன் பறக்கும் திறன் அனைவ ரையும் வியக்க வைத் துள்ளது என்பது உண்மையே.

1.3 மில்லியன் க்யூபிக் மீட்டர் ஹீலியம் வாயு நிரப்பிக் கொள்ளும் வல்லமை பெற்ற இவ்விமான த்தில், மனிதர்க ளையும் சரக்குப் பொருட்க ளையும் குறைவான செலவில் கொண்டு செல்ல முடியும். 

மேலும் இந்த விமானம் ஓர் பெரிய ஹெலிகாப்டர் போல் செயல்படு வதால் இது கிளம்ப ஓடுதளம் தேவை யில்லை. 

வாயுக் குழாய்களைக் கொண்டே இதனை இறங்க வைக்கலாம் என்பதால் பனிப்பாறை, பாலைவனம், நீர் என எந்த தளத்திலும் கீழிறக்க முடியும். 
விமானத்தில் 4 எஞ்சின்கள்
‘‘பயணிகள் விமானத்தை விட 15 மீட்டர் நீளமாக இருக்கும் இந்த விமானத்தில் 4 எஞ்சின்கள் இருந்தாலும் இது பறக்கும் போது அதிக ஒலியினை ஏற்படுத்து வதில்லை’’ என்று மகிழ்ச்சி யோடு பேசுகிறார் 

இதனை உருவாக்கிய இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஹைபிரிட் ஏர் வெஹி கிள்ஸ் நிறுவன த்தின் அதிகாரி ஸ்டீபன் மெக்லெனன். 

2012ம் ஆண்டு ஏர்லேண்டர் 10 விமானம் முதலில் அமெரிக் காவின் ராணுவத்து க்காகத் தான் உருவாக்கப் பட்டது. 

என்றாலும் பின்னர் அம்முயற்சி கைவிடப் பட்டது. இதற் கெல்லாம் கவலை யே படாத பிரிட்டிஷ் நிறுவனம் 

இதனை வெற்றி கரமான மக்கள் பயணிக்கும் விமான மாக மாற்றி, தற்போது சோதனை ஓட்டத் தையும் நடத்திக் காட்டி யுள்ளது.

இதற்கு முன்பே 2012ம் ஆண்டு பல்வேறு வித சோதனைகள் ஏர்லேண்டர் 10 விமான த்தில் செய்யப் பட்டாலும் எஞ்சின்கள் முழுமையாக பொருத்தப் பட்டு நடத்தப் பட்ட வெற்றி கரமான சோதனை இது தான்.
ஸ்பெசல் பெங்களூர் பிரியாணி செய்முறை !
1.1 பில்லியன் டாலர் செலவில் தயாரிக்கப்பட்ட ஏர்லேண்டர் 10ன் விமானிகள் அறையில் இருவர் மட்டுமே அமர முடியும். 

சாதாரண விமானத்தை விட குறைவான எரிபொருளை செலவு செய்யும் ஏர்லேண்டர் 10, வரும் 2020 ம் ஆண்டுக்குள் 50 டன்கள் எடையை சுமக்குமாறு மேம்படுத் தப்படும் என நிறுவனம் அறிவித் துள்ளது.
வாயு நிரப்பப்பட்ட விமானம் !
‘‘முதல் உலகப் போரின் போது இங்கிலாந்து தயாரித்த விமானங் களை நினைவூட் டுவதாக உள்ளது’’ என்ற விமர்சனமும் ஏர்லேண்டரைச் சுற்றி காற்றாக சுழல் கின்றன. 

மணிக்கு 148 கி.மீ வேகத்தில் 4 ஆயிரத்து 900 மீட்டர் உயரத்தில் இரண்டு வாரங்கள் சுற்றி வரும் திறன் கொண்டது ஏர்லேண்டர் 10 என தயாரிப்பு நிறுவன த்தினர் தன்னம் பிக்கை மிளிர கூறுகின்றனர்.
Tags:
Privacy and cookie settings