முந்தைய காலங்களில் தலை முதல் கால் வரை சோப் உபயோகித்துக் குளித்த அனுபவம் பலருக்கும் இருக்கும். இன்று போல அந்த நாட்களில் தலை முடிக்கான ஷாம்புவோ, முகத்துக்கான ஃபேஸ் வாஷோ கிடையாது.
இப்போது தலைக்கு ஒன்று, முகத்துக்கு ஒன்று, உடம்புக்கு ஒன்று என மூன்று விதமான பொருட் களை உபயோகிக் கிறோம். கடந்த இதழில் முகத்தை மட்டும் சுத்தப் படுத்துகிற ஃபேஸ் வாஷ் பற்றிப் பார்த்தோம்.
அதே போன்று உடலை சுத்தப் படுத்த பாடி வாஷ் என்றும் இருக்கிறது. பாடி வாஷின் பயன்கள் என்ன, யாருக்கு என்ன பாடி வாஷ், எப்படித் தேர்ந்தெடுப்பது... எல்லா தகவல் களையும் விளக்குகிறார் நேச்சுரல்ஸ் வீணா குமாரவேல்.
`சோப் உபயோ கித்துக் கொண்டிருந்த பலரும் இன்று பாடி வாஷுக்கு மாற ஆரம்பித்திரு க்கிறார்கள். சோப்பை விட பாடி வாஷ் உபயோ கிப்பது வசதியான தாகவும் இருக்கிறது.
வீட்டிலுள்ள அனைவரும் தனித்தனி சோப் உபயோ கிக்க முடியாத போது, ஒரே சோப்பை பகிர்ந்து கொள்ள வேண்டி யிருக்கும்.
அது ஆரோக்கிய மானதல்ல. பயணங் களின் போது சோப்பை கொண்டு செல்வதும், உபயோகித்த, ஈர நைப்புள்ள சோப்பை திரும்ப எடுத்து வருவதும் சிரமமானது.
இந்தப் பிரச் னைகளுக் கெல்லாம் தீர்வாகிறது பாடி வாஷ். ஷாம்பு வடிவில் இருக்கும் இதை உள்ளங் கையில் சிறிது எடுத்து உடல் முழுக்கத் தேய்த்துக் குளிக்கலாம்.
எங்கேயும் எடுத்துச் செல்வதும் எளிது. இரண்டு வகையான பாடி வாஷ் இருக்கி ன்றன. ஒன்று ஷவர் ஜெல், இன்னொன்று மாயிச் சரைசிங் பாடி வாஷ். ஷவர் ஜெல் கிட்டத்தட்ட ஷாம்புவை போன்ற தோற் றத்தில்,
கலர் கலராக இருப்பவை இவை. தண்ணீர் மற்றும் சோடியம் லாரத் சல்பேட் கலவை யான இவற்றின் பிரதான வேலை சுத்தப் படுத்துவது.
இவற்றில் உள்ள Surfactant சருமத்தில் படிந்த எண்ணெய் பசையை நீக்கக் கூடியது. இவற்றில் சருமம் வறண்டு போகாமலிருக்க கண்டி ஷனிங் பொருட்களும் சேர்க்கப் பட்டிருக்கும்.
மாயிச் சரைசிங் பாடி வாஷ்
இவை லோஷன் வடிவில் சற்றே கெட்டியாக இருக்கும். கிரீம் ஆயில், டீப் மாயிச்சர், நரிஷிங் எனப் பல்வேறு பெயர்களில் கிடைக்கும். இவற்றிலும் தண்ணீர் மற்றும் சோடியம் லாரத் சல்பேட்டின் கலவை இருக்கும்.
கூடவே சோயாபீன், சூரியகாந்தி எண்ணெய் அல்லது பெட்ரோலியம் ஜெல்லி போன்ற வையும் சேர்க்கப் பட்டிருக்கும்.
இந்த வகை பாடி வாஷ் பயன் படுத்திக் குளித்த பிறகும், உடலில் ஒருவித வழுவழுப்புத் தன்மை இருக்கும். ஷவர் ஜெல் உபயோகி க்கும் போது உண்டாகும் வறட்சி, இதில் இருக்காது.
* சீக்கிரமே முதுமைக் கான அடையா ளங்கள் தென்படுகிற சருமத்து க்கும் இந்த வகை மாயிச்சரைசிங் பாடி வாஷ் மிகப் பொருத் தமானது.
* சருமத்தில் உள்ள அழுக்கு, தூசுகளை அகற்ற கிளென்சிங் உபயோகி க்கிறோம். சில வகை கிளென் சர்கள் சருமத்தின் இயல்பான எண்ணெய் பசையை நீக்கி விடும்.
அதனால் சருமம் வறண்டு போகா மலிருக்க மாயிச் சரைசர் உபயோகி ப்போம். மாயிச் சரைசர் என்பது குளித்த உடன் சருமத்தில் ஈரப்பதம் இருக்கும் போதே தடவப்பட வேண்டியது.
இப்படி இரண்டு வெவ்வேறு பொருட்கள் செய்கிற வேலையை மாயிச் சரைசிங் பாடி வாஷ் செய்து விடும்.
* சில வகை மாயிச் சரைசிங் பாடி வாஷ்களில் சேர்க்கப் படுகிற வைட்டமின் ஈ, சருமத்துக்குக் கூடுதல் ஊட்டம் அளிக்கக் கூடியவை.
முத்தமா அசுத்தமா? பேசும் அன்பு மொழி முத்தம் !
* சென்சிட்டிவ் சருமம் உள்ள சிலருக்கு பாடி வாஷ் ஏற்றுக் கொள்ளாமல் இருக்கலாம். அதில் சேர்க்கப் படுகிற நறுமண ங்களும், ப்ரிசர் வேட்டிவ்களும் ஒவ்வா மையை ஏற்படுத்தலாம்.
அவர்கள் பாடி வாஷ் உபயோகி ப்பதைத் தவிர்க் கலாம் அல்லது இப்போது வாசனை யோ, ப்ரிசர் வேட்டிவோ இல்லாமல் வருகிற ஆர்கானிக் பாடி வாஷ் உபயோ கிக்கலாம்.
* பிரச்னை உள்ள சருமங் களுக்கு மருத்துவரின் ஆலோச னையின் பேரில் ஆன்ட்டி செப்டிக் பாடி வாஷை பயன் படுத்தலாம்.
ஷாம்பு வடிவில் இருக்கும் பாடி வாஷை உள்ளங் கையில் சிறிது எடுத்து உடல் முழுக்கத் தேய்த்துக் குளிக்கலாம். எங்கேயும் எடுத்துச் செல்வதும் எளிது.