நீங்க டிஷ்யுல தான் முகம் துடைப்பீங்களா? படிங்க !

பாக்கெட்டில் கைக் குட்டையுடன் நான் சவூதி வந்திறங்கிய போது, இங்குள்ள மக்கள் அனைவரும் டிஷ்யூ பேப்பர்களை உபயோகிப்பதை கண்ணுற்றேன்.
Virgin Tissue Paper
அலுவலகம், வீடு, டாக்சி, பஸ், ரெஸ்டாரன்ட், மஸ்ஜித்... என எங்கே போனாலும், அங்கே ஒரு உடைத்த டிஷ்யூ பாக்ஸ் வைத்து இருக்கிறார்கள். 

பொதுச் சேவை..! நாம் அதில் இருந்து டிஷ்யூக் களை வேண்டிய மட்டும் உருவிக் கொள்ளலாம்..!

பொதுவா கவே... வியர்வை துடைக்க, முகம்-கை கழுவி (மஸ்ஜி துகளில் ஒழு செய்து) விட்டு துடைக்க அப்புறம் முக்கியமாக சளி பிடித்து தும்மல் போட்டுக் கொண்டு இருக்கும் போது சுகாதாரமாகவும், சுத்தமாகவும், 
அசூசை இல்லாமலும்... 'துடைத்தோமா.. வீசிநோமா.. சென்றோமா..' என்று மிகவும் 'டீசண்டான மேட்டராக' மக்களுக்கு உபயோகப்படுவது... கைக் குட்டையை விட எல்லா விதத்திலும் டிஷ்யூ பேப்பர் தான்.

ஏற்கனவே, 'பேப்பர் தயாரிக்க மரங்கள் வெட்டப் பட்டுக் கொண்டு இருக்கின்றனவே' என்ற உலக மக்களின் கவலையில் நாம் ஐக்கிய மாகி இருக்க... "கைக்குட்டை" என்ற ஒன்றை 

இனி மியூசியத்தில் தான் பார்க்க வேண்டிய நிலையை வேண்டுமென்றே உண்டாக்கி விட்டு, ஏன் இப்படி ஒரேயடியாக மக்கள் தங்கள் தவறான புரிதலால் டிஷ்யூ பேப்பர் பக்கம் சாய்ந்து விட்டா ர்கள்..?
படு வேகமாக பரவி வரும் இந்த "டிஷ்யூ பேப்பர் கலாச்சாரம்" எதிர்கால மனித நன்மைக்கு ஏற்றதா..?

பேப்பர் செய்ய மரங்கள் வெட்டப்பட்டால் காடுகள் அழிவதால் மழை வருமா..? Deforestation ஆல் உலக வெப்ப மயமாதல் உண்டாகுமே..?

கைக்குட்டை என்ற ஒன்று இருக்க, டிஷ்யூ உபயோகிப்பது வீண் வெட்டி ஆடம்பர செலவு இல்லையா..? கழிப்பறை சென்று விட்டு தண்ணீர் விட்டு கழுவாமல் ஜஸ்ட் பேப்பரால் துடைப்பது தான் நாகரீகமா..?

அவசரத்தில் கழுவாமல் அப்படி துடைத்து விட்டு ஓடுவது சுகாதாரக் கேடல்லவா..?

இப்படி ஊரெங்கும் பேப்பர் குப்பை களை அதிகப்படுத்தும் இந்த டிஷ்யூ வால் நேரடி & மறைமுக பாதிப்புகள் என்ன வெல்லாம் உள்ளன..?

மிகவும் ஆழ்ந்து ஒரு தனிப் பதிவில் சிந்தித்து அலச வேண்டிய விஷயம் இது..! இது ஒருபுறம் இருக்க, இந்த டிஷ்யூ பற்றி சில விஷயங்கள் அறிவோம். 

டிஷ்யூக் களில், Facial tissues, Paper Towels,Toilet Tissues...என்று சில வகைகள் உள்ளன. மேலே முதல் படத்தில் காட்டப் பட்டுள்ள முதல் வகையான Facial tissues மிக மிக மிருது வாகவும், மிக மிக எளிதில் நீரை உறிஞ்சக் கூடியதாக வும் இருக்கும். 

அதனால், முகம் துடைக்க இது பயன் படுகிறது. இதனால், இதில் ஒருவித நறுமண வாசனை களையும் சேர்த்து இருப்பார்கள். 

பொதுவாக இவ்வகை கைக்கு அடக்க மான ஒரு ஜான்-அரை ஜான் நீள-அகல அளவு கொண்ட பெட்டி களில் தான் வருகிறது. 
டிஷ்யூ பேப்பர் கலாச்சாரம்
ஓர் உருவலில் ஒரு சதுர ஜான் டிஷ்யூவாக மட்டுமின்றி, அதிலேயே இரண்டு அடுக்கு அல்லது மூன்று அடுக்கு என்றும் வருகிறது. 

மற்ற டிஷ்யூக் களை விட இது விலை சற்று கூட. இதில் மிருதுத் தன்மைக் கும், நறுமனத் துக்கும், வெண்மை க்கும் இரசாயனம் சேர்க்கப் படுகிறது. 

நீள-அகலம், டிஷ்யூ எண்ணி க்கை மற்றும் மிருது தன்மை இவற்றுக்கு ஏற்ப விலை இருக்கிறது. இதில் மிருதுத் தன்மைக்கும் நறுமண த்துக்கும் வெண்மைக்கும் இரசாயனம் சேர்க்கப் படுகிறது

மற்றொரு வகை Paper Towels. இதுவும் ரோல்களில் சுற்றப்பட்டுத் தான் வருகின்றது. 

Facial Tissue அளவுக்கு நீரை உறிஞ்சாது என்றாலும் இது Toilet Tissue வைவிட சற்று அழுத்த மானது. எளிதில் கிழியாததும் கூட. இதனை "கிச்சன் டவல்" என்றும் கூறுகி றார்கள்.
கல்லீரலில் கொழுப்பு படிதல்  !
கழுவிய பாத்திரங் களை சுத்தப் படுத்தி பளபளப்பாக வைக்க, சமைக்கும் போது அவ்வப் போது கைத் துடைக்க என்று, சமைய லறையில் உபயோகப் படுத்த ஏற்ற 'டிஷ்யூ பேப்பர் டவல்' தான்..! 

இது Facial tissues ஐவிட மலிவானது..! ஒரு ஜான் அளவு நீள ரோலில் வருகிறது..!

அடுத்த Toilet Tissues வகையில், இது ஓரளவு தான் வேகமாக நீரை உறிஞ்சக் கூடியதாக இருக்கும். Facial tissues இல் உள்ளது போல அந்தளவு மிருதுத் தன்மை, நறுமணம் எல்லாம் இருக்காது. 

பெரும் பாலும் மேலை நாட்டு கழிவறை களில் தண்ணீருக்கு பதில்' உபயோ கிக்கப் படுகிறது. 

இங்கே ஈரக்கையை துடைக்க பயன் படுகிறது.இவை ரோல்களில் சுற்றப் பட்டு வருகின்றன. அரை ஜான் நீள ரோலில் கிடைக்கிறது. இது மற்றதை விட மலிவானது.
இப்படி, ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையான பயன் பாட்டு அடிப்படை யில் உருவாக்கப் படுகிறது. 

வலதுகையை சாப்பிடவும் பிறருடன் கைகுலு க்கவும் உபயோகித்த மனிதன் தன் இடது கையை கழிவுகளை கழுவ உபயோகி த்துக் கொண்டான். 

ஆனால், நாளடை வில் இடது கையால் சாப்பிடுவது தான் ஃபேஷன் என்றாகி விட... பலர் இரண்டு கையாலும் சாப்பிட ஆரம்பிக்க... 

அந்த கைக்கு கொடுக்கப் பட்டிருந்த வேலையை டிஷ்யூ பேப்பருக்கு தந்து விட்டான் போலும்..!

விளைவு, துடைத்த டிஷ்யூ பேப்பரை வேஸ்ட் பின்னில் போட முடியாது என்பதால்... ஃபிளஷ் அவுட்டில் தான் அந்த பேப்பரை தண்ணீரோடு அப்புறப் படுத்த இயலும் என்றாகி விட்ட நிலையில், 

அது ஃபிளஷ் அவுட் கழிவு குழாயை அடைத்துக் கொண்டு விடாமல், உடனடியாக கரைந்து இலகுவாகி சிதைந்து பிய்ந்து விட வேண்டும். 

அதற்கு ஏற்பத் தான் அந்த டாய்லட் டிஷ்யூ தயாரிக்க படுகிறது. இந்நிலை யில், 'கழிவுக்கு அனுப்பக் கூடிய பேப்பருக்குப் போய்... நிழலும் மழையும் குளிர்ச்சியும் தரும் 

சிறப்பு மிக்க மரத்தை அழிப்பதா..?' என்ற எண்ணம் மெத்தப் படித் தோரிடம் மேலோங்க... மேல் நாட்டினர் ஓர் உறுதி பூண்டனர்..!
அது என்ன உறுதி என்றால்... "இனி, நேரடியாக மரத்தின் wood pulp இலிருந்து Facial tissues மட்டுமே தயாரிக்கப் படலாம். 

மற்றபடி, உபயோகப் படுத்தப்பட்ட பழைய வேஸ்ட் பேப்பரில் இருந்து தான் இனி டாய்லட் டிஷ்யூக்கள் (Toilet Tissues) தயாரிக்கப் பட வேண்டும்.

கழிவை துடைத்து ஃப்ளஷ் அவுட் பண்ண பயன்படும் பேப்பர் செய்ய வெல்லாம்... cellulose wood pulp வேண்டி மரங்கள் வெட்டப்பட்டு அழிக்கப் படுவதை இனி ஒப்புக் கொள்ள / ஏற்க முடியாது" என்று ஒரு மனதாக முடிவு செய்து விட்டனர்..!

இம்முடிவு... விலை மலிவா கவும், எளிதில் கரையக் கூடியதா கவும், மரத்தை பாதுகாக்கவும் டாய்லட் டிஷ்யு செய்ய பயன்படுவதால் உலகம் முழுக்க டாய்லட் டிஷ்யூ உற்பத்தியில் Waste Paper Recycling முறை பின்பற்றப் படுகிறது..!

இந்நிலையில், மரங்களை அழித்து, அதிலிருந்து நேரடி Wood Pulp பயன் படுத்தப் பட்டு தயாரிக்கப் படுவதால் "Virgin Tissue Paper" என்று "பெருமை யோடு"(!) வேறு கூறிக் கொள்ளும்... 
டிஷ்யுல தான் முகம் துடைப்பீங்களா?
முகம் தொடைக்க என்று ஒதுக்கப் பட்ட இந்த Facial tissues Box தீர்ந்து விட்டால், அல்லது... அது விலை அதிகம் என்று வாங்காமல்...

விலை குறைந்த டாய்லட் டிஷ்யூக் களை (தொழுகைக்கு ஒழு செய்து) முகம் தொடைக்க அல்லது மூக்கு சிந்த என்று சிலர் "இது தாங்க சுத்தமானது..!" என்று பயன் படுத்து வார்கள்..!

ஆனால்... எந்த டிஷ்யூ ஆனாலும், 'அவை எப்படி தயாரிக்க படுகின்றன, மெய்யா லுமே "Virgin Tissue Paper" தானா...' என்று... 

துவைத்து கைக் குட்டை உபயோகிப் போரை தூய்மை அற்றவர்கள் போல நினைக்கும் இவர்கள் அறிவார்களா..? :-)))

அவர்களுக்காக.... சுத்தம் என்று சொல்லி, இந்த டாய்லட் டிஷ்யூவிலா முகம் துடைக்கிறீர்கள்? என்ற கேள்வியுடன் ஒரு டாய்லட் டிஷ்யூ ஃபேக்டரி.
Tags:
Privacy and cookie settings