பெட்ரோல், டீசல், இயற்கை எரிவாயு ஆகிய வற்றின் விலை ஏற்றம் காரணமாக பூமியின் சுற்றுச் சூழல் பல்வேறு மாசுவால் கடும் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறது.
இதனால் சுற்றுச் சூழலுக்கான முக்கியத்து வமும், விழிப்புணர் வும், பொறுப் புணர்வும் அதிகரிக்கப் பட வேண்டிய காலக் கட்டத்தில் நாம் உள்ளோம்.
புவிவெப்ப உயர்வு, பருவநிலை மாற்றம், எரிபொருள் அழிவு, பல்லுயிர்ச் சூழல் பாதிப்பு ஆகிய பிரச்னை கள் நம் முன்னே பூதாகர மாகி நிற்கின்றன.
இது ஒருபுற மிருக்க, சுற்றுச் சூழலைப் பாதிக்காத இயற்கை வளங்க ளான நீர், காற்று மூலம் கிடைக்கும் மின்சார மானது, உலகின் அசுர வளர்ச்சி யின் தேவைக்கு ஏற்ப போது மானதாக இல்லை.
இதனால், புதிய மற்றும் புதிப்பிக்க வல்ல எரிசக்தி சார்ந்த உற்பத்தி நடவடிக் கை களில் ஈடுபடுவதில் அனைத்து நாடுகளுமே ஆர்வம் காட்டத் தொடங்கி யுள்ளது.
புவி வெப்பமாதலு க்குப் பசுமை இல்லவாயு (கார்பன் டை ஆக்ஸைடு) வெளியேற் றம் முக்கிய மான காரணமாக இருப்பதால், இந்த வாயுவை உருவாக் கும் டீசல், பெட்ரோல்
மற்றும் இயற்கை எரிவாயு பயன் பாடுகளைக் குறைப்பதிலும், வெப்பத்தாலும், மின்சாரத்தாலும் இயங்கும் சாதனங்களை தயாரிப்பதிலும்
மற்றும் இயற்கை எரிவாயு பயன் பாடுகளைக் குறைப்பதிலும், வெப்பத்தாலும், மின்சாரத்தாலும் இயங்கும் சாதனங்களை தயாரிப்பதிலும்
அமேரிக்கா, சீனா உள்ளிட்ட பொருளா தாரத்தில் வளர்ந்த நாடுகள் பலவும் முனைப்பு காட்டுகின்றன.
இந்தியா போன்ற பொருளா தாரத்தில் வேகமாக வளரும் நாடுகளில் இயற்கை வளங்கள் குறைந்து வருவதும், சுற்றுச் சூழல் சீரழிவும் முக்கிப் பிரச்னை கள் நம்மை அச்சுறுத்தி வருகின்றன.
இந்தப் பிரச்னைகளை திறம்பட எதிர் கொள்வது என்பது, புதிப்பிக்கவல்ல எரிசக்தி சார்ந்த கருவிகளைப் பயன்படுத்துவதன் மூலமும், குறிப்பாக சூரிய எரிசக்தி பயன்பாட்டின் மூலம் தான் சாத்தியமாகும்.
மற்றும் மின் ஆற்றலை வெப்ப ஆற்றலாகவும், மாற்றி நமது தேவைக்கு ஏற்றவாறு பயன்படுத்திக் கொள்ளலாம்.
சூரிய ஆற்றலை வெப்ப ஆற்றலாக மாற்றக் கூடிய கருவிகளில் சூரிய வென்நீர் கலன், சூரிய உலர்கலன், சூரிய நன்னீர் கலன் போன்றவை முக்கியமானவையாகும்.
அதே நேரத்தில் சூரிய மின் உற்பத்தியிலும் சோலார் போட்டோ வோல்டிக் வழியாகவும், சோலார் தெர்மல் முக்கிய பங்கு வகிக்கின்றன.
சூரிய எரி சக்தியை வெப்ப மாக மாற்றி அதன்பின் மின்சாரம் பெறுவத ற்கும், நேரடி யாகவே மின்சார மாக மாற்று வதற்கும் பயன் படுத்தலாம்.
சூரிய வெப்பம் மற்றும் மின் கருவிகள் உற்பத்தியும், பயன்பாடும் இன்றைக்கு உலகம் முழுவதும் மிகவும் அவசியத் தேவையாகி வருகிறது. குஜராத் மாநிலத்தில் சூரிய ஒளியை பயன்படுத்தி மின்சாரம் தயாரித்து வருகிறது.
மின் தட்டுப் பாட்டை சமாளிக்க தமிழ் நாட்டில் அனைத்து இடங்களி லும் சூரியஒளி மின்சார த்தை அதிக அளவில் பயன் படுத்த வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் யோசனை தெரிவித்தார்.
பூண்டு மீன் குழம்பு செய்முறை !
இப்போது தமிழகத்தில் ஒரு அரசியல் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் சூரிய ஒளியில் மின்சாரம் தயாரிக்கும்
சோலார் போட்டோ வோல்டிக் சாதனம் அமைத்து தந்து தடையில்லா மின்சாரம் கிடைக்க வகை செய்வோம் என்று அறிவித் துள்ளது. இது இலவசங் களை விட நன்மை பயக்கும் திட்டம் வரவேற்க வேண்டிய ஒன்று.
சோலார் போட்டோ வோல்டிக் இதன் விலை அதிகம். அதிகம் பேர் பயன்படுத்தினால் உற்பத்தி பெருகும் விலையும் குறைய நிறைய வாய்புள்ளது.
ஆதாயம் தேடும் அரசியல் கட்சிகள் கொடுக்கிறேன் என்கிற இலவசங் களைக் காட்டிலும் இயற்கை யாக நமக்கு கிடைக்கும் சூரிய சக்கியை ஆக்கசக்தி யாக்கி பயனடைவோம்.