கார் ஹேக்கிங் படத்தில் காட்டுவது போல சாத்தியமா?

ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் 8 பார்த்து விட்டீர்களா? அதில் வில்லி சார்லிஸ் தெரோன் ஒரு ஹைடெக் தீவிரவாதி. இந்தத் தீவிரவாதி கையில் எடுக்கும் ஆயுதம்... 
கார் ஹேக்கிங் படத்தில் காட்டுவது போல சாத்தியமா?
ஹேக்கிங்.  ஹேக்கிங் அணு குண்டை விட ஆபத்தானதா என்கிறீர்களா? வெயிட். படத்தில் ஒரு காட்சி.

முக்கியமான பைல்ஸ் கொண்ட சூட்கேஸை எடுத்துக் கொண்டு பாதுகாப்பான காரில் ஒருவர் பயணம் செய்கிறார். 

அந்தக் காரை துப்பாக்கி குண்டு மட்டுமல்ல. வெடிகுண்டே போட்டாலும் ஒன்றும் செய்ய முடியாது. மேலும், காருக்கு முன்னே 5 கார்கள். பின்னே ஐந்து கார்கள். 
இந்தப் பாதுகாப்பு வளைய த்தைத் தாண்டி ஹீரோ வின் டீஸல் அந்த சூட்கேஸை எடுக்க வேண்டும். தனியே இதைச் செய்வது சாத்திய மற்றது. 

வின் டீஸலுக்கு உதவுவதற்கு வில்லன் டீம் தயார் செய்யும் விஷயம் தான் ஹைலைட். அந்தச் சாலையில் பயணிக்கும் அனைத்து கார்களையும் ஹேக் செய்து விடுவார்கள். 
நின்றுக் கொண்டிரு க்கும் காரும் சரி, ஓடிக் கொண்டிரு க்கும் சரி... வில்லனின் கட்டுப் பாட்டுக்கு வந்து விடும். 

அதன் பின், அவர்கள் சொல்வதை தான் கார் கேட்கும். "There's thousands of cars in the city, and now, they're all mine” எனக் கொக்கரிப்பார் தெரோன்.

அது மட்டு மல்ல. அடுக்கு மாடி கட்டிடத்தின் பார்க்கிங் கில் இருக்கும் கார்களையும் ஹேக் செய்து விடுவார். 
கண்ணாடியை உடைத்துக் கொண்டு கார்கள், டார்கெட் காரின் மீது வந்து விடும். அந்தப் பிரமாண்டம்... ஐமேக்ஸ் திரையில் பார்த்து ரசிக்க வேண்டிய ஒன்று.

உண்மை யிலே அது மாதிரி கார்களை ஹேக் செய்ய முடியுமா? அதுவும் அத்தனை கார்களை? ஹேக் செய்த கார்களை, நாம் நினைத்த மாதிரி ஓட்ட முடியுமா? 

ஒரே வார்த்தை யில் பதில் சொல்ல வேண்டு மென்றால் முடியும் தான். ஆனால், ஒரு வரியில் சொல்வ தென்றால் ‘ஹேக் செய்யலாம். ஆனால், இப்படி செய்ய முடியாது”.

பிஎம்டபிள்யூ, பென்ஸ், ஃபெராரி, லம்போகினி என பல நவீன கார்கள் இப்போது ஏகப்பட்ட எலெக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் புரோக்ராம் தொழில் நுட்பம் மூலம் இயங்கு கின்றன. 
இந்தக் கம்ப்யூட்டர் தொழில் நுட்பத்தை 'ஹேக்’ செய்து, உங்கள் காரில் பிரேக் பிடிக்காமல் செய்ய வைக்க முடியும்; 

எங்கோ இருந்து கொண்டு உங்கள் காரின் மியூசிக் சிஸ்டத்தில் பாடல்களை மாற்றிக் கொண்டே இருக்க முடியும்; 

கார் ஓட்டிக் கொண்டு இருக்கும் போதே உங்கள் காரை ஆஃப் செய்ய முடியும் என்கிறார்கள், கார் ஹேக்கிங் தொடர்பாக ஆய்வுகள் செய்திருக்கும் வாஷிங்டன் பல்கலைக் கழக மாணவர்கள்.
கார்களில் இப்போது ப்ளூ -டூத், பென் டிரைவ், வை-ஃபை வசதிகள் வந்து விட்டன. 

இதில், பென் டிரைவ் மூலமாகவோ அல்லது ப்ளூ-டூத் மூலமாகவோ வைரஸை அனுப்பி காரில் உள்ள எலெக்ட்ரானிக் விஷயங் களைக் கட்டுப் படுத்த முடியுமாம். 
எங்கோ இருந்து கொண்டு ஒரு எஸ்.எம்.எஸ் மூலமாக கார் கதவுகளைத் திறக்கவும், இன்ஜினை ஸ்டார்ட் செய்யவும், ஆஃப் செய்யவும் முடியும் என்கிறது இந்த ஆய்வு முடிவுகள்! 

வெறும் ஆய்வோடு நில்லாமல், இரண்டு கார்களை இதன் படி ஹேக் செய்து காட்டி அலற வைத்திருக் கிறார்கள் 

பல்கலைக் கழக மாணவர்கள். கார்கள் மட்டு மல்ல, நம் வீட்டில் இருக்கும் பல ஸ்மார்ட் பொருட் களையும் ஹேக் செய்ய முடியும்.

சில மாதங்கள் முன் விக்கிலீக்ஸ் இணைய தளம் வெளியிட்ட தகவல் களின் படி, உங்களின் ஸ்மார்ட் போன், ஸ்மார்ட் டி.வி, ஆன்டி வைரஸ் மென் பொருட்கள் போன்ற அனைத்தையும் சி.ஐ.ஏ.,வால் ஹேக் செய்ய முடியும். 
வீப்பிங் ஏஞ்சல் எனப்படும் உளவு பார்க்கும் டூல் மூலம் சாம்சங் ஸ்மார்ட் டி.வி-க்களின் வழியாக எவரை வேண்டு மானாலும் சி.ஐ.ஏ உளவு பார்க்கலாம் 
என அதிர்ச்சித் தகவல்களை வெளி யிட்டது. 'உளவுத்துறை அளவுக்கு வொர்த் இல்லையே பாஸ்' என நீங்கள் நினைக்கலாம். 

ஆனால் வைஃபை உடன் கனெக்ட் ஆகும் எந்தப் பொருள் ஹேக் செய்யப் பட்டாலும் அதன் வழியாக, ஹேக்கர்கள் நம் தகவல் களைத் திருடவும், நம்மைக் கண்காணி க்கவும் முடியும்.
Tags:
Privacy and cookie settings