முதுகு வலிக்கு முன்எச்சரிக்கை டிப்ஸ் !

இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்கள் சீரான வேகத்தில் செல்ல வேண்டும். அடிக்கடி பிரேக் பிடிப்பது, குண்டு குழிகளில் வண்டியை ஏற்றி இறக்குவது போன்ற வற்றைத் தவிர்க்கவும்.
முதுகு வலிக்கு முன்எச்சரிக்கை டிப்ஸ் !
தினமும் சூரிய நமஸ்காரம் செய்து வந்தால் உடலில் உள்ள அனைத்து உறுப்பு களும் முறையாக இயங்கும். முதுகு வலி வரவே வராது. 

தரையில் அமர்ந்து, நன்றாக முதுகு நிமிர்ந்து, தியானம் செய்வது, முதுகு வலி வராமல் செய்யும் எளிய வழி.

ஏதேனும் பொருட்கள் கீழே விழுந்து விட்டால், நின்ற படியே கீழிறங்கி மெதுவாகக் குனிந்து, பொருட்களை எடுக்கவும். 

வீடு துடைத்தல், துணி துவைத்தல் போன்ற வீட்டு வேலை ஓரே நாளில் செய்யாமல், சிறிது சிறிதாகப் பிரித்து செய்துவந்தால், உடலுக்கு நல்லது.

தினமும் 20 நிமிடங்கள் நடை பயிற்சி மேற்கொள்வதன் மூலம், வைட்டமின் டி சத்தைப் பெறலாம்.
முதுகு வலியால் பாதிக்கப் பட்டவர்கள், பிசியோ தெரப்பி நிபுணரின் அறிவுரைப் படி, தங்களின் உடல் நலனுக்கு ஏற்ற உடற் பயிற்சிகள் செய்ய வேண்டும்.

கம்ப்யூட்டர் முன்பு கவனமாக உட்காருங்கள்

1. கண்களுக்கு நேராக கம்ப்யூட்டர் திரை இருக்குமாறு உட்கார வேண்டும். கம்ப்யூட்டரைத் தலையை உயர்த்திப் பார்க்கவோ, குனிந்து பார்க்கவோ கூடாது.

2. சேரில் உட்காரும் போது பாதங்கள் தரையில் பதிய வேண்டும்.

3. கீபோர்ட், சேரின் கைப்பிடி உயரத்துக்கு இருக்க வேண்டும். கீபோர்டும் கைப்பிடியும் சரிசமாக இல்லை என்றால், குனிந்து அல்லது நிமிர்ந்து கனினி பயன்படுத்த வேண்டியிருக்கும், இதனால் முதுகு வளையும்.

4. எர்கானமிக் (Ergonomic) வகை சேர்களை, அலுவலகத்தில் பயன் படுத்துவது முதுகுக்கு நல்லது.
Tags:
Privacy and cookie settings