ஓர் இந்து ஆணுக்கு சொந்த மான சொத்து அவர் உயில் எழு தாமல் இறந்து விடடால் யாரு க்குப் போய்ச் சேரும் என்பது இந்து வாரிசு உரிமைச் சட்டம், 1956 –ல் இரு பிரிவு களில் விவரிக் கப்பட் டுள்ளது.
அதன் விவரம் வருமாறு:
முதல் பிரிவு:
மகன்
மகள்
கைம்பெண் மனைவி
தாய்
முன் இறந்து போன மகனின் மகன்
முன் இறந்து போன மகனின் மகள்
முன் இறந்து போன மகனின் மகளின் மகன்
முன் இருந்து போன மகனின் மகளின் மகள்
முன் இறந்து போன மகனின் கைம்பெண்
முன் இறந்து போன மகனின் முன் இறந்து போன மகனின் மகன்
முன் இறந்து போன மகனின் முன் இறந்து போன மகனின் மகள்
முன் இறந்து போன மகனின் முன் இறந்து போன் மகனின் விதவை
இந்த முதல் பட்டிய லில் எத்தனை பேர் இருந் தாலும் தலைக்கு ஒரு பங்கு என்ற விகித த்தில் உயில் எழுதாமல் இறந்து போன் இந்து ஆண் மகனின் சொத்து பிரிக்கப் படும்.
மேலே கண்ட முதல் பட்டியலில் ஒருவர் கூட இல்லை என்றால் கீழ்கண்ட இரண் டாவது பட்டியலில் கண்ட நபர்கள் சொத்தை அடை வார்கள்.
இரண்டாவது பட்டியலில் 1 முதல் 9 வரை உப பிரிவுகள் உள்ளன. முதல் உப பிரிவில் உள்ளவர் உயிரு டன் இருந்தல் அவருக்கு சொத்து போய் சேரும்.
அவர் இல்லை என்றால் இரண்டாவது பிரிவில் உள்ள வரை போய் சேரும். ஒவ்வொரு பிரி வாகப் பரீசீலி க்கும் போது
ஏதாவது ஒரு பிரிவில் ஒரு நபர் அல்லது ஒன்று க்கும் மேற் பட்டவர் இருந் தால் அவர் சொத்தை அடைவார்.
பிறகு அடுத்த உப பிரிவுக்கு தள்ள வேண்டிய அவசியம் இல்லை.
இரண்டா வது பட்டிய லில் உள்ள எந்த உப பிரிவி லும், எந்த ஒரு வாரி சுதாரரும் இல்லை என்கிற போது இறந்த வருக்கு வாரிசு களே அற்ற நிலை யில் அவர் சொத்து அரசுக்கு போய் சேரும்.
இரண்டாவது பட்டியல்
அ.
தந்தை
ஆ.
1. மகனின் மகளின் மகன்
2. மகனின் மகளின் மகள்
3. சகோதரர்
4. சகோதரி
இ.
1. மகளின் மகனின் மகன்
2. மகளின் மகனின் மகள்
3. மகளின் மகளின் மகன்
4. மகளின் மகளின் மகள்
ஈ.
1 சகோதர ரின் மகன்
2. சகோதரி யின் மகன்
3. சகோதர ரின் மகள்
4. சகோதரி யின் மகள்
உ.
1. தந்தையின் தந்தை
2. தாயின் தாய்
ஊ.
1. தந்தை யின் கைம்பெண் மனைவி
2. சகோத ரரின் கைம்பெண் மனைவி
எ.
1. தந்தை யின் சகோதரர்
2. தந்தை யின் சகோதரி
ஏ
1. தாயின் தகப்பனார்
2. தாயின் தாய்
ஐ.
1. தாயின் சகோதரர்
2. தாயின் சகோதரி
மேற்கண்ட முதல் பட்டிய லில் குறிப்பிடப் பட்டவர் கள் எப்படி சொத்தை பங்கு பிரித்துக் கொள்ள வேண்டும்...!
1. கைம்பெண் 1 பங்கு பெறுவார்.
2. ஒன்று க்கு மேற்பட்ட கைம் பெண்கள் இருப்பின் அனை வரும் 1 பங்கு பெறுவர்.
3. மகன் மகள் தாய் ஓவ்வொரு வரும் ஒரு பங்கு பெறுவர்.
4. முன்ன தாக இறந்து போன மகன் அல்லது மகள் குடும்ப த்தை சேர்ந்த வர்கள் அனை வரும் சேர்ந்து ஒரு பங்கை பெறுவர்.
ஒரு பெண் இறந்த பிறகு அவரு க்குக் கணவன், மகள் அல்லது மகள் யாரும் இல்லாத நிலை யில் அவளது சொத்து யாரு க்கு சேரும்?
அது கீழ்க்கண்ட வரிசைப்படியான வாரிசுகளுக்குப் போய் சேரும்
கணவனது வாரிசுகள்
தாய் மற்றும் தந்தை
தந்தையின் வாரிசுகள்
தாயின் வாரிசுகள்
மேலே குறிப் பிட்ட கண வனது வாரிசுகள், தந்தை யின் வாரிசு கள் என்பவை முன்பே விவரிக்கப் பட்டுள்ள ஆண் வாரிசு களின் முதல் பட்டி யலில், இரண்டாம் பட்டிய லில் உள்ள நபர் களைக் குறி க்கும்.
ஒரு இந்து பெண், தன் தாய் தந்தை யிடமிருந்து சொத்தை வாரிசு உரிமை முறை மூலம் பெறும் போது அவள் இறப்பு க்குப் பின், மகன், மகள், இல்லாத நிலை யில், அவள் சொத்து தந்தையின் வாரிசு களுக்குச் செல்லும்.
கணவன், மற்றும் மானம னாரிடம் இருந்து வாரிசு உரிமை யாகப் பெறப் பட்ட சொத்து அவளு க்குக் குழந்தை கள் இல்லாத போது, கண வனது வாரிசுக ளூக்குப் போய்ச் சேரும்.
உயில் வழி வாரிசு உரிமை..!
ஒரு கூட்டுக் குடும்ப த்தில் தந்தை யின் மூன்று மகன் களும் இருந்தால் ஒவ்வொரு வருக்கும் கால் (¼) பங்கு உள்ளது.
தந்தை தனது ¼ பங்கை உயில் மூலம் யார் ஒருவரு க்கும் எழுதி வைக்க இந்து வாரிசு உரிமைச் சட்டம், 1956 வழி செய்கிறது.
ஆனால் தன் பங்கு சொத்தை செட்டில் மெண்ட் செய்ய இயலாது.