தற்போது குளிர் அதிகம் இருப்ப தால் பலருக்கும் சளி, இருமல் போன்றவை எளிதில் தொற்றிக் கொள்கின்றன.
இத்தகைய சளி, இருமலுக்கு பலரும் பல்வேறு மருந்து மாத்திரை களை எடுத்துக் கொண்டு வருவார்கள். ஆனால் எந்த ஒரு பலனும் இருந்தி ருக்காது.
அப்படி வெளியே மருந்து கடைக்கு சென்று மருந்து வாங்கி உட்கொள்வதை விட்டு, நம் வீட்டின் உள்ளேயே இருக்கும்
குட்டி மருந்துக் கடையான சமையலறைக்கு சென்று அங்குள்ள அற்புதமான சில பொருட் களைக் கொண்டே சளி மற்றும் இருமலுக்கு உடனடி நிவாரண த்தைக் காணலாம்.
அப்படி சளி மற்றும் இருமலுக்கு உடனடி நிவாரணம் தரக்கூடியது தான் சீரகம்.
இந்த சீரகத்தில் நோயெதிர்ப்பு அழற்சி தன்மை, ஆன்டி - பாக்டீரியல் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு தன்மை அதிக அளவில் நிறைந் துள்ளது.
மேலும் சீரகத்தில் உள்ள சத்துக் களால் காயமடைந்த தசைகள் ரிலாக் ஸாகும் மற்றும் நோயெதிர்ப்பு மண்டலம் வலிமை யடையும்.
இதனால் உடலில் உள்ள நோய்த் தொற்றுக்கள் விரைவில் குணமாகும்.
அது மட்டுமின்றி, சீரகத்தில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி சளிக்கு உடனடி நிவாரண த்தைத் தரும்.
இப்போது சீரகத்தைக் கொண்டு எப்படி சளிக்கு உடனடி நிவாரணம் காண்பது என்று பார்ப்போம்.
* 2 கப் நீரில் 1 ஸ்பூன் சீரகத்தை சேர்த்து கொதிக்க விட்டு, பின் அதில் சிறிது இஞ்சி மற்றும்
துளசி இலைகளை தட்டி சேர்த்து வடிகட்டி, வெது வெதுப்பான நிலையில் குடித்து வந்தால், சளிக்கு உடனடி நிவாரணம் கிடைக்கும்.
* சளியினால் மூக்கடைப்பு ஏற்பட்டி ருந்தால், சீரகத்தை நீரில் போட்டு கொதிக்க விட்டு, அத்துடன் சிறிது கிராம்பையும் சேர்த்து கொதிக்க விட்டு,
பின் அந்த நீரை ஆவி பிடித்தால், மூக்கடைப்பு நீங்கி, நிம்மதியாக மூச்சு விட முடியும்.