மரபணு உணவுப் பொருளை கண்டறிவது எப்படி?

0
பச்சையான காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிடுவது நல்லது. ஆனால் தற்போது விற்கப்படும் பல காய்கறிகள் மற்றும் பழங்கள் மரபணு மாற்றம் செய்யப் பட்டதாக (GMO) உள்ளது.
மரபணு உணவுப் பொருளை கண்டறிவது எப்படி?
இவை உடலுக்கு மிகுந்த தீங்கை விளை விக்கக் கூடியவை என பல்வேறு ஆய்வுகளில் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.

நம்மில் பலருக்கும் மரபணு மாற்றப் பட்ட தக்காளி அல்லது இதர மரபணு மாற்றப்பட்ட உணவுப் பொருட் களை எப்படி கண்டறிவது என தெரியாது.

நல்ல தக்காளிக்கும், GMO தக்காளிக்கும் உள்ள வேறுபாட்டை கண்டறிய இந்த கட்டுரை உங்களுக்கு உதவும்.
GMO உணவுப் பொருட்கள்

GMO உணவுப் பொருட்களால் தீங்கு விளைவ தாக பல ஆய்வுகள் கூறுகிறது. அதுவும் மரபணு மாற்றப்பட்ட உணவுப் பொருட்கள் குறித்து மேற்கொள்ளப் பட்ட ஆய்வுக் கூடத்தில் உள்ள விலங்கு களுக்கு நச்சு, ஒவ்வாமை, 

உடல்நிலை சரியில்லாமல் போவது மற்றும் ஒவ்வொரு உறுப்புக் களையும் பாதித்தி ருப்பது தெரிய வந்தது.
தடை செய்யப் பட்ட நாடுகள்

பெரும் பாலான வளர்ச்சி யடைந்த நாடுகள் இந்த உணவுகளை ஆரோக்கிய மற்றதாக கருதி, அவற்றை தடை செய்துள்ளது.

உலகில் உள்ள 60-க்கும் மேற்பட்ட நாடுகளான ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் GMO உணவுப் பொருட் களின் விற்பனை தடை செய்யப் பட்டுள்ளது.

அதன்படி, பல ஐரோப்பிய நாடுகளில் GMO பொருட் களின் விற்பனை மற்றும் உற்பத்தி தடை செய்யப் பட்டுள்ளது. 

அதோடு, ஆஸ்திரியா, பிரான்ஸ், ஜெர்மனி, கிரீஸ் போன்ற நாடுகளி லும் இந்த உணவுகள் தடை செய்யப் பட்டுள்ளன.

அமெரிக்கா வில் 80% சதவீதத் திற்கும் அதிகமான பதப்படுத்தப் பட்ட உணவுகள் மரபணு மாற்றம் செய்யப் பட்டவை களாகத் தான் உள்ளது.
GMO உணவுப் பொருட் களை அறிவது எப்படி?
** கெமிக்கல்கள் பயன் படுத்தப்பட்ட வளர்க்கப் பட்ட காய்கறிகள் மற்றும் பழங்கள் நான்கு இலக்கங் களைக் கொண்ட குறியீட் டுடன் பெரியடப் பட்டிருக்கும்.

** ஆர்கானிக் பழங்கள் மற்றும் காய்கறிகள் 5 இலக்கங் களுடன், 9 என்ற எண்ணில் ஆரம்ப மாகும்.

** GMO பழங்கள் மற்றும் காய்கறிகள் 5 இலக்கங் களுடன், 8 என்ற எண்ணில் ஆரம்ப மாகும்.

** GMO தக்காளி களின் மையப் பகுதி நன்கு கனிந்து, சற்று வித்தி யாசமாக இருக்கும்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings