குடலில் உள்ள புழுக்களை அழிக்கும் வைத்தியங்கள் !

0
நீங்கள் தூக்கத்தில் நெளிந்து கொண்டே இருக்கிறீர்களா அல்லது அடிக்கடி இரவில் விழிக்கிறீர்களா? உங்கள் வயிறு ஒருவித அசௌகரியத் துடனேயே இருக்கிறதா? 
குடலில் உள்ள புழுக்களை அழிக்கும் வைத்தியங்கள் !
அடிக்கடி வயிற்றுப் போக்கு ஏற்படுகிறதா? அப்படி யானால் உங்கள் வயிற்றில் புழுக்கள் அதிகம் இருக்க வாய்ப் புள்ளது. தொடர்ந்து மாசடைந்த சுற்றுச் சூழலில் வாழ்ந்து வந்தால், ஒருவரது உடலில் எளிதில் புழுக்கள் நுழைந்து விடும்.

அப்படி நுழையும் புழுக்கள் குடலை தனது இருப்பிடமாக கொண்டு வாழ்ந்து வளர ஆரம்பிக்கும். மேலும் இவைகள் நாம் சாப்பிடும் உணவுகளை உட்கொண்டு, நமக்கு ஊட்டச் சத்துக் குறை பாடுகளையும் உண்டாக்கும். 
நம் வயிற்றில் வளரும் இந்த புழுக்களை அழிப்பதற்கு ஏராளமான மருந்துகள் கடைகளில் விற்கப் படுகின்றன. இருப்பினும் குடலில் வாழும் புழுக்களை அழிப்பதற்கு ஏராளமான இயற்கை வழிகள் உள்ளன.

கீழே ஆயிரம் வருடங்களாக நம் முன்னோர்கள் வயிற்றில் வளரும் புழுக்களை அழிக்க மேற்கொண்டு வந்த சில வழிகள் கொடுக்கப் பட்டுள்ளன. அவற்றைப் படித்து பின்பற்றி, உங்கள் குடலையும், உடலையும் சுத்த மாகவும், ஆரோக்கி யமாகவும் வைத்துக் கொள்ளுங்கள்.

தேங்காய்
குடலில் உள்ள புழுக்களை அழிக்கும் வைத்தியங்கள் !
தேங்காய் குடலில் வாழும் புழுக்களை வெளியேற்றும். தேங்காயில் வலிமை யான ஆன்டி- பாராசிடிக் பண்புகள் உள்ளன. இவை குடலில் உள்ள புழுக்களை அழித்து வெளியேற்றி விடும்.

எனவே தினமும் காலை உணவின் போது 1 டேபிள் ஸ்பூன் துருவிய தேங்காயை சாப்பிடுங்கள்.  தேங்காய் சாப்பிட்ட 3 மணி நேரத்திற்கு பின், 375 மிலி பாலில் 30 மிலி விளக் கெண்ணெய் சேர்த்து கலந்து குடியுங்கள்.

பூண்டு

பூண்டில் ஆன்டி-பாராசிடிக் பண்புகள் உள்ளன. இது அனைத்து வகையான குடல் புழுக்களை யும் அழிக்க உதவும். 

மேலும் பூண்டில் சல்பர் அதிக அளவில் உள்ளது. பூண்டில் ஆன்டி-மைக்ரோபியல், ஆன்டி- பாக்டீரியல், பூஞ்சை எதிர்ப்பு பண்புகள்  மற்றும் ஆன்டி- ஆக்ஸிடன்ட் பண்புகள், உடலில் இருந்து நுண்ணுயிரி களை நீக்க உதவும்.

குடலில் புழுக்கள் அதிகமாக இருந்தால், மலப் புழையில் கடுமை யான அரிப்பை சந்திக்க நேரிடும். அந்நேரத்தில் பூண்டு பற்களை அரைத்து, வேஸ்லின் சேர்த்து மலப்புழையைச் சுற்றி தடவுங்கள். 

இதனால் மலப் புழையில் உள்ள புழுக்களின் முட்டையை அழித்து, அரிப்பைக் குறைக்கும். மேலும் தினமும் 2 பல் பூண்டு சாப்பிடு வதன் மூலம், புழுக்களில் இருந்து விடுபடலாம்.
பப்பாளி

ஆயுர் வேதத்தில் குடல் புழுக்களை அழிக்க பப்பாளி பயன்படுத்தப் படுகிறது. இதற்கு பப்பாளியில் உள்ள பாப்பைன் என்னும் முக்கியமான நொதிப் பொருள் தான் காரணம். 

ஆகவே பப்பாளிக் காயை துருவி சாறு எடுத்து, 1 டேபிள் ஸ்பூன் சாற்றில் 1 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் நீர் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும். 

2 மணி நேரம் கழித்து, 250 மிலி பாலில் 30 மிலி விளக் கெண்ணெய் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும். இப்படி செய்தால், விரைவில் வயிற்றில் உள்ள புழுக்கள் அழிந்து வெளியேறும்.

பூசணி விதைகள்
குடலில் உள்ள புழுக்களை அழிக்கும் வைத்தியங்கள் !
பூசணி விதைகளில் உள்ள குகுர்பிடாசின், வயிற்றில் உள்ள ஒட்டுண்ணி களை முடக்கி, உடலில் இருந்து முழுமை யாக வெளியேற்றும்.

முக்கியமாக பூசணி விதைகள் நாடா புழுக்கள் மற்றும் உருளைப் புழுக்களை அழிக்க உதவும். அதற்கு பூசணி விதைகளை அப்படியே சாப்பிடலாம் 

அல்லது பொடி செய்து ஜூஸ் உடன் கலந்து உட்கொள்ளலாம். சில மணி நேரங்கள் கழித்து, பாலில் சில துளிகள் விளக் கெண்ணெய் கலந்து குடியுங்கள். இதனால் குடல் முழுமையாக சுத்தம் செய்யப்படும்.

ஓமம்

ஓமம் கூட குடல் புழுக்களை வெளியேற்ற உதவும். ஓம விதைகளில் தைமோல் ஏராளமாக உள்ளது. இது வயிற்றில் வளரும் புழுக்களின் வளர்ச்சியைத் தடுத்து வெளியேற்றும். 

ஆயுர் வேதத்தில் வயிற்றுப் புழுக்களை அழிக்க, ஓம விதைகளை வெல்ல த்துடன் சேர்த்து சாப்பிட பரிந்துரைக்கப் படுகிறது.
மாதுளை மரப் பட்டை

மாதுளை மரப்பட்டையை நாம் இதுவரை பயன்படுத்தி இருக்க மாட்டோம். இருப்பினும் மாதுளை யின் மரப்பட்டை, இலைகள் மற்றும் தண்டு போன்றவை ஏராளமான மருத்துவ பண்புகளைக் கொண்டது. 

மாதுளையின் மரப்பட்டை யில் புனிசின் என்னும் அல்கலாய்டு ஏராளமான அளவில் உள்ளது. இது வயிற்றில் வளரும் நாடாப் புழுக்களை அழித்து வெளியேற்றக் கூடியது. 

அதற்கு மாதுளை மரப்பட்டையை நீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி, அந்நீரை ஒரு நாளை க்கு மூன்று வேளை குடிக்க, குடல் புழுக்கள் அழிந்து வெளியேறும்.

வேப்பிலை
குடலில் உள்ள புழுக்களை அழிக்கும் வைத்தியங்கள் !
வேப்பிலை யில் ஆன்டி-பாக்டீரியல், ஆன்டி- வைரல் மற்றும் புழுக்களை அழிக்கும் பண்புகள் ஏராளமான அளவில் நிறைந் துள்ளது.

இது வயிற்றில் வளரும் புழுக்களை அழிப்பதோடு, உடலில் உள்ள இதர கிருமி களையும் அழித்து, உடலில் இருந்து வெளியேற்றி, உடலை சுத்தமாக வைத்துக் கொள்ளும்.

கேரட்

கேரட்டு களில் உள்ள பீட்டா- கரோட்டின், உடலில் இருந்து புழுக்களை வெளியேற்றும். இதில் உள்ள வைட்டமின் ஏ, புழு முட்டைகளை கரையச் செய்து விடும். 

மேலும் கேரட்டில் இருக்கும் வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் ஜிங்க் போன்றவை நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமை யாக்க உதவும்.
கிராம்பு

கிராம்பில் ஆன்டி- பாக்டீரியல், ஆன்டி- மைக்ரோபியல் மற்றும் புழுக்களை அழிக்கும் பண்புகள் ஏராளமாக உள்ளது. இது வயிற்றில் உள்ள புழு முட்டைகளை அழிக்க உதவுவதோடு, உடலில் இருந்து அந்த புழுக்களை யும் வெளி யேற்றும். 

ஆகவே உங்கள் உணவுகளில் கிராம்பு பொடியை சேர்த்துக் கொள்ளு ங்கள். இல்லா விட்டால், ஒரு கிராம்பை தினமும் வாயில் போட்டு மென்று விழுங்குங்கள்.

மஞ்சள்
குடலில் உள்ள புழுக்களை அழிக்கும் வைத்தியங்கள் !
மஞ்சள் குடல் புழுக்களில் இருந்து விடுபட உதவும் அற்புத பொருளாகும். மஞ்சளில் ஆன்டி- செப்டிக், ஆன்டி- மைக்ரோபியல் மற்றும் ஆன்டி- வைரல் பண்புகள், குடல் புழுக்களை வெளியேற்ற உதவும்.

மேலும் மஞ்சள் வயிற்று உப்புசத்தை குறைக்க உதவும் மற்றும் குடல் புழுக்களுக் கான அறிகுறி களையும் நீக்க உதவி யாக இருக்கும்.

வால்நட்ஸ் தோல்

கருப்பு நிற வால்நட்ஸ் தோலை அரைத்து சாறு எடுத்து, குடிப்பதன் மூலம், வயிற்றில் உள்ள அதிகப் படியான குடல் புழுக்களில் இருந்து விடு படலாம். ஆயுர்வேதத்தில் பெரும் பாலும் இந்த ஜூஸ் படர் தாமரையைப் போக்க பயன்படுத்தப் படும்.
கிரேப்ஃபுரூட் விதை சாறு

இது சுகாதார உணவு கடைகளில் ஜூஸ் வடிவில் விற்கப்படும் அற்புதமான குடல் புழுக்களை அழிக்க உதவும் பொருள். 

இதில் உள்ள ஆன்டி-மைக்ரோபியல் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள், குடல் புழுக்களை எதிர்த்துப் போராட பெரிதும் உதவியாக இருக்கும்.

நீர் பூசணி/வெள்ளை பூசணி
குடலில் உள்ள புழுக்களை அழிக்கும் வைத்தியங்கள் !
வெள்ளைப் பூசணிக் காயின் விதைகளை நீரில் நன்கு கழுவி, வெயிலில் உலர்த்தி, அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும்.

பின் அந்த பொடியை தேங்காய் பாலில் கலந்து குடித்து வந்தால், புழுக்களின் வளர்ச்சி தடுக்கப் பட்டு, உடலில் இருந்து வெளியேற்றப் படும். குறிப்பாக இது நாடாப் புழுக்களை வெளியேற்ற பெரிதும் உதவியாக இருக்கும்.

மூங்கில் இலை

மூங்கில் இலைகள் குடல் புழுக்களை அழிக்க பெரிதும் உதவியாக இருக்கும். அதற்கு மூங்கில் இலைகளை அரைத்து சாறு எடுத்து, தினமும் சிறிது குடிக்க வேண்டும். 

இப்படி செய்தால், விரைவில் குடல் புழுக்கள் அழிந்து வெளியேறு வதோடு, இனிமேல் குடல் புழுக்கள் வராமலும் இருக்கும்.

கற்றாழை
குடலில் உள்ள புழுக்களை அழிக்கும் வைத்தியங்கள் !
கற்றாழை இலைகளை நீரில் போட்டு கொதிக்க வைத்து இறக்கி, அந்நீரைக் குடித்து வர வேண்டும். குறிப்பாக இந்த நீரை குழந்களுக்கு குடிக்கக் கொடுப்பது நல்லது.
இதனால் அவர்கள் வயிற்றில் உள்ள புழுக்கள் அழிந்து, உடலில் இருந்து வெளியேற்றப் படும்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings