இந்தோனேசியாவில் பயணிகள் மற்றும் வாகனங்களை ஏற்றிச் செல்லும் கப்பல் ஒன்று புயலில் சிக்கி
மூழ்கியதில் பயணிகள் பலர் உயிர் தப்ப கடலில் குதித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. இந்தோனேசியாவின் Sulawesi தீவில் இருந்து அருகாமையில் உள்ள Selayar தீவுக்கு வாகனங்கள்
மற்றும் பயணிகளுடன் KM Lestari என்ற கப்பலானது புறப்பட்டு சென்றுள்ளது. இந்த நிலையில் திடீரென்று பேய்க் காற்று வீசவே கடல் கொந்தளிக்க துவங்கி யுள்ளது.
இதனால் பல அடி உயரத்திற்கு அலைகள் எழுந்துள்ளது. இதில் சிக்கிய குறித்த கப்பல் தத்தளித் துள்ளது.
ஒரு கட்டத்தில் கப்பலுக்குள் தண்ணீர் புகுந்து, கப்பல் மூழ்கும் நிலைக்கு தள்ளப் பட்டுள்ளது. இதனை யடுத்து பல பயணிகளும் உயிர் பயத்தில் கடலுக்குள் குதித்துள்ளனர்.
மட்டுமின்றி கப்பலும் கடலுக்குள் மூழ்கி யுள்ளது. இதில் அந்த கப்பலில் இருந்த பல வாகனங்கள் கடலில் மிதந்துள்ளன.
இந்த சம்பவம் தொடர்பாக அந்த கப்பலில் இருந்த பயணிகள் சிலர் புகைப்படம் எடுத்து சமூக வலை தளத்தில் பதிவேற்றி யுள்ளனர்.
விபத்து குறித்த தகவல் அறிந்து விரைந்து வந்த மீட்பு குழுவினர் கடலில் தத்தளித்த அனைத்து பயணி களையும் மீட்டுள்ளனர்.
இந்தோனேசியா வில் எரிமலை ஏரி ஒன்றில் சிக்கி மாயமான சுமார் 200 பயணிகளின் உடல்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது கப்பல் மூழ்கி விபத்து ஏற்பட்டுள்ளது.
Thanks for Your Comments