ப்ளூவேல் என்ற விளையாட்டு கடந்த ஆண்டு பிரபலமானது. ப்ளூவேல் விளையாட்டு இணையத்தின் மூலம்
உள்ளே புகுந்து அதன் மூலம் அந்த விளையாட்டை விளையாடு பவர்களை உளவியல் ரீதியாக மிரட்டி அவர்களைத் தற்கொலை க்குத் தூண்டி உயிரைப் பறித்தது.
ஹேக்கர்ஸ் என்று அழைக்கப்படும் இணையத் தகவல் திருடும் கும்பல்களின் அட்டூழியம் தான் இந்த வகை விளையாட்டுகள்.
விளையாட்டாக, சாப்ட்வேர் களைக் கரைத்து குடித்தவர்கள் அடுத்தவர்களின் தகவல்களைத் திருடுவதில் கைதேர்ந்தவர்கள் ஆகி விடுகின்றனர்.
இது போன்ற ஹேக்கர்களால் பரப்பப்படுவது தான் மோமோ சேலஞ்ச் விளையாட்டு.
மோமோ என்ற அருவருப்பான உருவமாக ஜப்பானில் தேர்வு செய்யப்பட்ட பறவையின் உடல் மனித உடல் கலந்த,
முட்டைக் கண்கள் கொண்ட ஒரு உருவத்தைத் தான் இவர்கள் பயன்படுத்து கிறார்கள்.
வாட்ஸ் அப் மூலமாக தொடர்பு கொண்டு மோமோ என தன்னை உருவகப் படுத்திக் கொண்டு
தொடர்பு கொள்ளும் மர்ம நபர்கள், தங்களுடன் சேட் செய்யுமாறு வற்புறுத்து கின்றனர்.
அந்த வகையில், மேற்கு வங்காள மாநிலம் பிர்பம் மாவட்டத்தை சேர்ந்த தொழில் அதிபர் அப்துல் குத்துஸ் என்பவரை மோமோ தொடர்பு கொண்டது.
தன்னிடம் சேட் செய்யுமாறும் மோமோ மிரட்டியுள்ளது. மோமோ விடுத்த அழைப்பை நிராகரித்த அவருக்கு அடுத்த அதிர்ச்சி காத்திருந்துள்ளது.
அடையாளம் தெரியாத ஒரு எண்ணில் இருந்து தொழில் அதிபரின் வங்கி கணக்கு விவரங்கள் வாட்ஸ் அப் மூலமாக அனுப்பப் பட்டுள்ளது.
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த தொழில் அதிபர் அப்துல் குத்துஸ், உடனடியாக சிஐடி போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
இது பற்றி விசாரணை மேற்கொண்டுள்ள போலீசார், மோமோ என்ற பெயரில் பெரும்பாலும் போலியான நபர்களே
குறுந்தகவல்கள் அனுப்பி மிரட்டுவதா கவும், அப்துல் குத்தூஸ் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடைபெறுவ தாகவும் தெரிவித்துள்ளார்.
Thanks for Your Comments