பட்டாப் பதிவுகள் என்பது நில உரிமை மற்றும் நில அளவுக்குத் தொடர் பான உள்ளீடுகள் அடங்கி யவை. பட்டா கிராமப் புறங்களில் ஹெக்டேர்ஃஆர்ஸ் என்ற முறையில் கணக்கிட ப்படுகிறது.
2008-ம் ஆண்டு முதல் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்துக் கிராமப் புறச் சொத்துக்க ளுக்கும் கணினி மூலம் பட்டா வழங்கப் படுகிறது.
அதில் தாசில்தார், துணை தாசில்தார், அல்லது மண்டலத் துணை தாசில்தார் கையெழுத்து இடம் பெறும்.
கணினி பட்டா என்பது மாநகராட்சி, நகராட்சி, நத்தம் நிலம் அல்லாத இடங்களுக்கு வழங்கப்படும்.
மேலும் அதில் கிராமம், தாலுகா கணக்கெடுப்பு எண்கள் குறிப்பிடப்பட வேண்டும்.
உட்பிரிவு எண்கள் நன்செய் நிலம், புன்செய் நிலம் அளவு மற்றும் பிற நில அளவுகளும் அட்டவனையில் குறிப்பிட்டிருக்க வேண்டும்.
மேலும் அதில் கிராமம், தாலுகா கணக்கெடுப்பு எண்கள் குறிப்பிடப்பட வேண்டும்.
உட்பிரிவு எண்கள் நன்செய் நிலம், புன்செய் நிலம் அளவு மற்றும் பிற நில அளவுகளும் அட்டவனையில் குறிப்பிட்டிருக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் கணினி மயமாக்கப் பட்ட பட்டா பெறுவது எப்படி?
2008-ம் ஆண்டு முதல் நிலப் பதிவுகள் கணினி மயமாக்கப் பட்டுள்ள 3-வது மாநிலம் தமிழகம் (கர்நாடகம்,
ஆந்திர பிரதேசம் முறையே முதல் இரு இடங்களில் உள்ள மாநிலங்கள்). கணினி மயமாக் கப்பட்ட பட்டாவில் சொத்தின் வரைபடம் இடம்பெறாது.
ஆந்திர பிரதேசம் முறையே முதல் இரு இடங்களில் உள்ள மாநிலங்கள்). கணினி மயமாக் கப்பட்ட பட்டாவில் சொத்தின் வரைபடம் இடம்பெறாது.
மேலும் 2011-ம் ஆண்டு முதல் தமிழக அரசாங்கம் நடை முறையில் சில மாற்ற ங்களைக் கொண்டு வந்தது.
இதன்படி பட்டா விண்ணப் பதாரர் நேரடி யாகக் கிராம நிர்வாக அலுவல கரிடம் விண்ணப் பங்களைச் சமர்ப்பித்துக் கிராம நிர்வாக அதிகாரி யிடம் ரசீது பெறலாம்.
ஒரு வேளை அந்தப் பட்டா உட்பிரிவு களில் தொடர் புடையது இல்லை யென்றால்
விண்ணப் பதாரர் நேரடி யாகச் சரிபார்த்து அசல் ஆவணங் களுடன் தாலுகா அலுவலகம் சென்று பட்டா பெறலாம்.
ஒரு வேளை உட்பிரிவு களில் தொடர்புடைய தாக இருந்தால் விண்ணப்ப தாரர் விண்ணப்பம் பதிவு செய்ததில் இருந்து
நான்காவது வெள்ளிக் கிழமை பெற்றுக் கொள்ளலாம் (சர்வேயர் இடத்தைப் பார்வை யிட்டப் பிறகு).
விண்ணப்ப தாரர் உட்பிரிவு களுக்குச் செலுத்த வேண்டிய கட்டண த்தைத் தாசில் தாரிடமிருந்த ஒப்புதல் பெற்ற அன்றே செலுத்த வேண்டும்.
உட்பிரிவு நடை முறைகள் 30 நாட்களு க்குள் முடிக்கப் படவேண்டும்.
பட்டா ஆன் லைனில் சரி பார்க்கும் முறை
பட்டா ஆன் லைனில் சரி பார்க்க www.tn.gov.in என்ற இணைய தளத்தில் இ-சேவைகள் பரிவு மாவட்ட அலுவல கங்கள் என்ற இணைப்பை கிளிக் செய்ய வேண்டும்.
பட்டா அல்லது சிட்டா ஆகிய வற்றில் குறிப் பிடப்பட வேண்டிய விவரங் களான மாவட்டம், தாலுகா, கிராமம் மற்றும் பட்டா எண் ஆகிய வற்றைக் காண லாம்.
ஒருவேளை பட்டா எண் தெரிய வில்லை என்றால் சர்வே எண் மற்றும் உட்பிரிவு எண் ஆகிய வற்றைக் குறிப்பிட வேண்டும்.
சர்வே எண் (ஏதாவது ஒரு சர்வே எண் போது மானது) உடன் உட்பிரிவு களும் நிரப்பப் பட வேண்டும்.
சென்னை சொத்துகள் ஆன்லைன் மூலம் சரி பார்க்கும் முறை:
சமீபத்தில் சென்னையி லுள்ள அனைத்துச் சொத்து விவரங் களையும் மேற்படி இணைய தளத்தில் ஆன்லைன் மூலம் சரி பார்க்கும் வசதி அறிமுகப் படுத்தப்பட் டுள்ளது.
அதற்கு சான்றுகள் கிளிக் செய்ய வேண்டும். பிறகு தாலுகாவைத் தேர்வு செய்ய வேண்டும். பிளாக் நம்பர் மற்றும் தெருவைக் குறிப்பிட வேண்டும்.
பின்னர் சர்வே எண் மற்றும் உட்பிரிவு எண்களைக் குறிப்பிட வேண்டும். பின்னர் தேடுதலை கிளிக் செய்ய வேண்டும்.
சொத்தின் முகவரி, சர்வே எண், உட்பிரிவு எண், சொத்தின் அளவு, உரிமை யாளர் பெயர் போன்ற விவரங் களை ஆன்லைன் மூலம் சரி பார்க்கலாம்.
Thanks for Your Comments