இந்தியாவின் கண்டம் விட்டு கண்டம் பாயும் அக்னி 5 ஏவுகணை யின் தாக்கும் தொலைவு எவ்வளவு என்று உங்களுக்குத் தெரியுமா?
இந்தியா அக்னி 5 ஏவுகணை சுமார் 5000 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளைக் கூட சர்வ சாதரணமாக தாக்கி அழிக்கும் என்று DRDO அதிகாரப் பூர்வமாக கூறியுள்ளது
ஆனால் சீனா அக்னி 5 ஏவுகணை 8000 கிலோ மிட்டர் தூரத்திற்கு அப்பால் செல்லும் திறனுடையது என்றும். இந்த செய்தியை இந்தியா உலக நாடுகளுக்கு மறைத்து வருகிறது என்றும் புலம்பி வருகிறது.
இந்த விஷயத்தில் ஆழமாக செல்லும் முன் சற்று யோசித்து பாருங்கள். இந்தியா ஏன் தன படை வலிமையை உலகுக்கு குறைத்து காட்ட வேண்டும்?
NSG (Nuclear Suppliers Group) எனப்படும் அணு அணுவாற்றல் வழங்குவோர் குழுமத்தில் இந்தியா உறுப்பினராக இல்லை.
என்.எஸ்.ஜி. கூட்டமைப்பில் 48 நாடுகள் உள்ளன. இந்த நாடுகள் தங்களுக்குள் அணு மூலப் பொருட்கள், அணு உலை தொழில் நுட்பங்களை பரஸ்பரம் விநியோகம் செய்து கொள்கின்றன.
இந்த கூட்டமைப்பில் உறுப்பினராக மாற இந்தியா முயற்சித்து வருகிறது. எந்தவொரு நாடு வேண்டு மானாலும் என்.எஸ்.ஜி.யில் உறுப்பு நாடாக விண்ணப்பிக்க லாம்.
ஆனால் எந்தெந்த நாடுகளை குழுவில் சேர்க்க வேண்டும் என்பது 48 நாடுகள் அளிக்கும் வாக்கு களைப் பொறுத்தே முடிவு செய்யப்படும்.
பிரதமர் மோடி பல நாடுகளுக்குச் சென்று இந்தியா விற்கு ஆதரவு தாருங்கள் என்று கூறினார்.பல நாடுகள் முன் வந்தன..
இந்தியா NSG யில் இணைய முட்டுக்கட்டை போடும் ஒரே நாடு சீனா மட்டும் தான். அதன் நட்பு நாடுகளையும் இந்தியாவிற்கு NSG யில் வாக்கு அழிக்க கூடாது என்று மிரட்டி வருகிறது சீனா.
இந்தியா NSG யில் இணைய முட்டுக்கட்டை போடும் ஒரே நாடு சீனா மட்டும் தான். அதன் நட்பு நாடுகளையும் இந்தியாவிற்கு NSG யில் வாக்கு அழிக்க கூடாது என்று மிரட்டி வருகிறது சீனா.
என்.எஸ்.ஜி.யில் இந்தியா இணைந்தால் தனது அணுமின் நிலையங் களுக்கு தேவையான எரிபொருள், தொழில் நுட்பத்தை வெளி நாடுகளிடம் இருந்து பெற்றுக் கொள்ளும்.
அதே நேரம் உள்ளூரில் கிடைக்கும் அணுகச்தி மூலப் பொருட்களை தனது இராணுவ தேவைக்குப் பயன் படுத்திக் கொள்ளும்.
இதன் மூலம் இந்தியாவால் அதிக அணு ஆயுதங்களை உற்பத்தி செய்ய முடியும். எனவே தான் சீனா இந்தியாவை எதிர்க்கிறது.
இந்தியாவிடம் 8000 கிலோமீட்டர் செல்லும் அணு ஆயுத ஏவுகணை உள்ளது என்பது தெரிந்தால் இந்தியாவால் NSG யில் சேர முடியாது. அது பெரும் தடையாக இந்தியாவிற்கு மாறி விடும்.
அதனால் தான் இந்தியா சில இராணுவத் தளவாட தகவல்களை பொது மக்களிடம் பகிர்ந்து கொள்வ தில்லை.
அக்னி 5 ஏவுகணை சீனா சொல்வது போல் 8000 கிலோ மீட்டர்களு க்கும் மேல் செல்லக் கூடியதா என்று பார்ப்போம் வாருங்கள்.
ஒரு உதாரணத்திற்கு இந்தியாவின் அக்னி 5 ஏவுகணையை அமெரிக்கா வின் Trident ஏவுகணை யுடன் ஒப்பிடுவோம்.
Trident ஏவுகணை யின் அதிகாரப் பூர்வ தாக்கும் தொலைவு 12000 கிலோ மீட்டர் மற்றும் அக்னி 5 ஏவுகணையின் அதிகாரப்பூர்வ தாக்கும் தொலைவு 5000 கிலோ மீட்டர் ஆகும்.
Trident ஏவுகணை திட எரிபொருளில் இயங்கக் கூடிய உலகிலேயே அதிபயங்கர மான ஏவுகணைகளில் இதுவும் ஒன்று.
ஏவுகணைகளின் தாக்கும் தொலைவு என்பது அந்த ஏவுகணைகள் சுமந்து செல்லும் எரிபொருள் (fuel) மற்றும் அதன் அணு ஆயுத வெடிபொருளின் எடையை (Warhead weight) பொறுத்தே தீர்மானிக்கப் படுகிறது.
அப்படி பார்த்தால் ஏவுகணையின் எரிபொருள் கொள்ளளவு என்பது ஏவுகணை யின் நீளம், அதன் உட்பக்க கொள்ளளவு மற்றும் சுற்றளவைப் பொருத்தது.
இப்படி ஒப்பிட்டு பார்த்தால் அக்னி 5 மற்றும் Trident ஏவுகணைகள் இரண்டுமே ஒரே அளவு மூன்றடுக்கு திட எரிபொருளை கொண்டு இயங்குகின்றன.
Trident ஏவுகணை 59 டன் எடை கொண்டது. 13.5 மீட்டர் நீளம் கொண்டது மற்றும் 2.1 மீட்டர் விட்டம் கொண்டது. அக்னி 5 ஏவுகணை 50 டன் எடை கொண்டது 17.5 மீட்டர் நீளம் கொண்டது மற்றும் 2 மீட்டர் விட்டம் கொண்டது.
ஆக அக்னி 5 ஏவுகணை Trident ஏவுகணையை விட நீளத்தில் அதிகம். விட்டதில் கிட்டத்தட்ட சமம் மற்றும் எடையில் நம் அக்னி 5 ஏவுகணை குறைவு.
இந்த எடை குறைவிற்கு காரணம் அக்னி 5 ஏவுகணை யின் உடலமைப்பு மற்றும் கட்டமைப்பு முற்றிலும் இலகுவான composite material லால் முற்றிலும் வடிவமைக்கப் பட்டுள்ளது.
ஆகவே தான் அக்னி 5 ஏவுகணையின் எடை Trident ஏவுகணையை விட குறைவு. ஏவுகணையின் எடை குறைவாக இருந்தால் ஏவுகணை அதிக தொலைவு செல்லும்.
ஆக இரண்டு ஏவுகணை களையும் ஒப்பிட்டு பார்க்கையில் இரண்டு ஏவுகணை களும் ஒரே அளவு எடை கொண்ட எரி பொருளையே எடுத்துச் செல்கின்றன.
இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் அக்னி 5 ஏவுகணை யால் 5000 கிலோ மீட்டர் தொலை விற்கு அப்பால் உள்ள இலக்கை கூட தாக்கி அழிக்க முடியும் என்று தெளிவாக புரிகிறது.
இந்தியா வேண்டு மென்றே அக்னி 5 இன் தாக்கும் தொலைவை குறைத்து அறிவித்து வருகிறது.
அதற்கு காரணம் NSG யில் இணைய மற்றும் உள் நாட்டு உளவாளிகள் அதனால் தான் இந்தியாவில் இருக்கும் சில நாடுகளின் ரகசிய உளவாளிகள்
அவர்கள் அந்த தொழில் துறையை சார்ந்த நெருக்கமான வர்களிடம் கேள்வி பட்டதை வைத்து கொண்டு அதற்கேற்ற செய்திகளை பகிர்ந்து கொண்டு இருக்கின்றனர்.
இந்த அக்னி 5 ஏவுகணை யின் சக்தி முழு வீச்சு போரின் போது மட்டுமே நம் எதிரிகளுக்கு தெரியும். - இந்திய இராணுவச் செய்திகள்.Facebook
Thanks for Your Comments