இணைய விபச்சாரம் என்றால் என்ன? கல்லூரி மாணவிக்கு ஏற்ப பேரமதிப்பு ஏறும் !

0
எந்த ஒரு அறிவியல் கண்டுபிடிப்பும் நல்ல விஷயத்திற்காகவும் கெட்ட விஷயத்திற்காகவும் பயன்படுத்த முடியும். அதனை மனிதர்கள் பயன்படுத்தும் விதத்தைப் பொறுத்தது அது. 
விபச்சாரம் என்றால் என்ன?
இதற்குத் தொலைகாட்சி முதல் ராடார் வரை அநேக உதாரணங்களைக் கூறலாம். அந்தப் பட்டியலில் இணையமும் அடங்கும். இணையம் ஒரு கட்டில்லா களஞ்சியமாகும். 

சிறு குழந்தை முதல் இறக்கும் தருவாயில் உள்ள மனிதர் வரை அனைவரு க்கும் பல விதங்களில் அவர்களுக்குத் தேவையான பல விஷயங்களைக் கடல் போல் அடக்கி வைத்துள்ளது என்றால் மிகையில்லை. 
இன்று இணையம் மூலம் வியாபாரம் என்பது இந்த நூற்றாண்டின் இணையற்ற புரட்சிகளில் ஒன்றாகும். வியாபாரம் என்றால்…. என்ன வியாபாரம் வேண்டு மானாலுமா? என்றொரு கேள்வி எழுவது இயல்பு! 

அதற்கு விடையளிக்கும் விதத்தில் முன்னு தாரணமாக, இந்தியா விலேயே கல்வியறிவில் முன்னணியில் நிற்கும் மாநிலம் என மெச்சிக் கொள்ளும் கேரள மாநிலம் நிற்கிறது. 

ஆம், இணையம் மூலமாக பெண்/ஆண் வியாபாரம் கேரளாவில் கொடிகட்டிப் பறக்கிறது. இதனை ஆதாரப் பூர்வமாக மனோரமா நியூஸ் என்ற கேரள ஊடகமே வெளிக் கொணர்ந்துள்ளது. 

மனோரமா நியூஸின் புலனாய்வு நிருபர்கள் குழு ஒன்று, தங்கள் உயிருக்கே ஆபத்தாக முடியக் கூடிய சாத்தியம் உள்ள இந்த அபாரச் செயலைச் செய்துள்ளனர்.

கொச்சியை மையமாக வைத்து இயங்கும் ஒரு மிகப் பெரிய “இணைய விபச்சார குழுவினைக்”  குறித்த செய்தியினை வீடியோ மற்றும் ஆடியோ ஆதாரங்களுடன் வெளிக் கொணர்ந் துள்ளனர்.
பல்வேறு “girlsfinder” போன்ற ஆபாச தளங்களில் தொடர்பு கொள்க என்ற பெயரில் தங்களின் மார்க்கட்டிங் தொலைபேசி எண்களைப் போட்டு வைத்துள்ளனர். 

அதில், தொடர்பு கொள்ளும் நபர்களை வசதிக்கு ஏற்பவும் செல்லும் நேரத்திற்கு ஏற்பவும் 

1 மணி நேரத்திற்குக் குறைந்தது 10,000 ரூபாயிலிருந்து 50,000 ரூபாய் வரை பேரம் பேசி பெண்களை அனுப்பு கின்றனர். இதில் மிகவும் அதிர்ச்சிகர மான விஷயம் என்ன வெனில், இவ்வாறு அனுப்பப்படும் பெண்களில் கல்லூரி மாணவிகளும் உள்ளது தான். 
இணைய விபச்சாரம் என்றால் என்ன?
கல்லூரி மாணவி வேண்டும் என கேட்டால் அதற்கு ஏற்ப பேரமதிப்பு ஏறும் அவ்வளவே! கல்லூரிக்குப் படிக்க அனுப்பும் தங்கள் பெண் பிள்ளைகள், 

கல்லூரில் நன்றாகப் படித்துக் கொண்டிருக் கின்றனர் என நம்பியிருக்கும் பெற்றோர்களின் வயிற்றில் புளியைக் கரைக்கும் அதிர்ச்சிகர மான செய்தி இது!

தற்போது வெளியாகி இருக்கும் இத்தகவல் கேரளா முழுவதும் மிகுந்த அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி யுள்ளது. பெற்றோரே, உங்கள் பிள்ளைகள் கல்லூரிக்குச் செல்பவரா? இணையம் உபயோகிப்பவரா? கவனமாக இருங்கள்! 

அதனை நல்லதுக்கும் பயன்படுத்தலாம். கெட்ட விஷயத்திற்கும் பயன்படுத்த லாம். விபச்சாரம் என்பது பணம் பெற்றுக் கொண்டு பாலியல் சேவை புரியும் தொழில். பெரும்பாலும் இது பெண்கள் ஈடுபடும் தொழிலாக இருக்கிறது. 

இவர்கள் ‘வேசி’, ‘விபச்சாரி’, ‘விலைமாது’ என்று வெளிப்படையாகவும், ‘பாலியல் தொழிலாளி’ என நாசூக்கா கவும் அழைக்கப் படுகிறார்கள். 
தெருக்களில் கைதட்டி அழைப்பவர்கள், விபச்சார விடுதிகளில் காத்திருப்ப வர்கள், கூப்பிட்டால் சொன்ன இடம் வரும் உயர்ரக விலை மாதுகள் என இவர்கள் பலதரப்படுவர்.
உலகின் மிகப் புராதனமான தொழில் என இது குறிப்பிடப் பட்டாலும், வேட்டை யாடுதல், விவசாயம் ஆகிய வற்றுக்குப் பிறகே விபச்சாரம் வருகிறது. 

பெண்கள் ஈடுபட்ட தொழில்களுள் கூட, செவிலிப் பணி தான் முதலில் தோன்றியது. கி.மு 2400ல் தெற்கு மெஸபடோமியா வில் (இன்றைய ஈராக்) வசித்த சுமேரியர்கள் தாம், முதலில் விபச்சாரம் செய்ததாகத் தெரிகிறது. 

பணத்துக்காக அல்லாமல் மதச் சடங்காக, கோயில் சேவையாக இதைப் பின்பற்றி யிருக்கிறார்கள். கி.மு 1780ல் பாபிலோனிய ஹமுராபி என்ற சட்ட நூல் விபச்சாரிகளின் சொத்துரிமை பற்றிப் பேசுகிறது. 

கி.மு 1075ல் வடக்கு மெஸபடோமியா வின் அஸ்ஸிரிய சட்டப்படி விபச்சாரி களுக்கு தனி உடை இருந்தது. தெருவில் நடமாடும் போது குடும்பப் பெண்கள் முகத்தை மறைக்க வேண்டும்; 

விபச்சாரிகள் மறைக்கத் தேவை யில்லை.  ரஹாப் என்ற பாலஸ்தீனிய விலைமாது, தன் வீட்டை அடை யாளப்படுத்த சிவப்பு நிற கயிறு தொங்க விட்டிருந்தாள். 
கல்லூரி மாணவிக்கு ஏற்ப பேரமதிப்பு
அதிலிருந்தே சிவப்பு விளக்குப் பகுதி என்று பெயர் வந்ததாகச் சொல்கிறார்கள். பிற்காலத்தில் விபச்சார விடுதி சென்ற ரயில்வே ஊழியர்கள், தமது சிவப்பு விளக்கை வெளியே வைத்து உள்ளே போனார்கள். 

அதிலிருந்தும் வந்திருக்கலாம். முதன் முதலில் விபச்சார விடுதிகள் பண்டைய எகிப்தில் உருவாயின. கிரேக்க மெஸபடோமியப் பயணிகள் எகிப்து வந்து போய் இருந்ததால் இவை முளைத்தன. 

ரோபோபிஸ் என்ற எகிப்திய விபச்சாரி தன் சம்பாத்திய த்தின் மூலம் ஒரு பிரமிட் கட்டியதாகக் குறிப்பிடுகிறார் வரலாற்றறிஞர் ஹெரோடாட்டஸ். பண்டைய கிரேக்கத்தில் மூன்று விதமான விபச்சாரிகள் இருந்தனர். 

Pornai என்ற அடிமை விபச்சாரிகள், தெருவில் விபச்சாரம் செய்பவர்கள், Hetaera என்ற படித்த விபச்சாரிகள் (சமூக செல்வாக்கும் சொகுசும் வாய்த்தவர்கள்). 

கி.மு 594ல் ஏதென்ஸ் கவிஞரும் சட்ட மேதையுமான ஸோலன், ஜனநெருக்கடி மிகுந்த நகரப் பகுதிகளில் அரசாங்க ஆதரவோடு விபச்சார மையங்களைத் திறக்கச் செய்தார். 

அவர்கள் அரசுக்கு அதிகம் வரி செலுத்தினர். விபச்சாரிகள் தனித்துத் தெரியும்படி ஆடை அணிந்தனர். செல்வந்தர்கள் தம் வீடுகளை விபச்சார விடுதிக்கு வாடகைக்கு விடுவது சகஜமாக இருந்தது. 

கி.மு 180ல் ரோமானிய சக்ரவர்த்தி கலிகுலா விபச்சாரத்து க்கு வரிவிதித்தார். அதற்கு முறைப்படி லைசென்ஸ் தரப்பட்டது. லைசென்ஸ் இல்லாது தொழில் செய்தவர்கள் தண்டிக்கப் பட்டனர். 
தலையின்றி நடந்து வந்த சிறுமி அதிர வைத்த நிமிடங்கள் !
செவிலிகள் விபச்சாரத்திற் குள் நுழையாமல் காவலர்கள் தடுத்தனர். பிரபலமான விபச்சாரிகளின் சிகை, உடை, நகை ஆகியவை ரோமானிய பெண்களின் ஃபேஷனில் வலுவான பாதிப்பை ஏற்படுத்தின.

பண்டைய இந்தியாவில் ‘நகர் வது’ (நகரத்தின் மணமகள்) என்ற பெயரில் பெண்களை ஊர்ப் பொதுச் சொத்தாக்கும் பழக்கம் இருந்தது. 

ஆச்சார்ய சதுர்சென் எழுதிய, ‘வைஷாலி கி நகர் வது’ என்ற நூலில் வரும் அம்ரபாலியும், கி.மு 200ல் சுத்ரகர் எழுதிய மிரிச்சகதிகா நூலில் வரும் வசந்த சேனாவும் இவ்வகையினரே.
கல்லூரி மாணவிக்கு இணைய விபச்சாரம்
கி.பி 590ல் ரிகாரட் என்ற ஸ்பெயின் மன்னர், கிறிஸ்துவத் துக்கு எதிரானது என்று விபச்சாரத்தை தடை செய்தார். விபச்சாரி களுக்கு 300 கசையடி தந்து, நாடு கடத்தினார். 

ஆண்களுக்கு தண்டனை இல்லை. கி.பி 525ல் ரோமானிய மன்னர் ஜஸ்டினியன், முன்னாள் விபச்சாரியான தியோடரா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். 

இருவரும் இணைந்து கொண்டுவந்த சட்டத்தில், விபச்சாரம் முறைப் படுத்தப்பட்டது. பல விபச்சார விடுதிகள் ஒழிக்கப்பட்டன. கட்டாயமாக இந்தத் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட பலர் விடுவிக்கப் பட்டனர்.
பனானா சாக்லேட் ஐஸ்கிரீம் செய்வது !
1161ல் இங்கிலாந்து மன்னர் இரண்டாம் ஹென்றி லண்டனில் விபச்சாரிகள் மணம் செய்யாது இருக்க வேண்டும் என்றும், விபச்சார விடுதிகள் ஒவ்வொரு வாரமும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் உத்தர விட்டார். 

1358ல் வெனிஸ் நகர கவுன்சில், விபச்சாரம் உலகின் அத்தியாவசியத் தேவை என அறிவித்தது. இதைத் தொடர்ந்து 14 மற்றும் 15ம் நூற்றாண்டுகளில் அரசாங்கமே விபச்சார விடுதிகளை இத்தாலிய நகரங்களில் திறந்தது. 

விபச்சார விடுதிகள் தனி வீதிகளில் இருந்தன. சாமியார்களும், மணமான வர்களும் அங்கு செல்ல தடை இருந்தது. நகர எல்லைச் சுவர்களுக்கு வெளியே மட்டுமே விபச்சாரம் செய்ய அனுமதிக்கப் பட்டது. 

16ம் நூற்றாண்டில் சிஃபிலிஸ் என்ற பால்வினை நோய் ஐரோப்பாவில் பரவிய போது, இந்த விடுதிகள் அவசரமாக மூடப்பட்டன. விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்களுக்கு மரண தண்டனை அறிவித்தார் போப் ஐந்தாம் சிக்ஸ்டஸ். 

16ம் நூற்றாண்டில் எலிஸபெத் மகாராணியின் காலத்தில் விபச்சாரம் வளர்ந்தது. லண்டனின் சௌத்வார்க் சிவப்பு விளக்குப் பகுதியாக பிரபல மடைந்தது. விடுதிகள் வெண்சுதை கொண்டு பூசப்பட்டன. 

17 -ம் நூற்றாண்டின் இறுதியில் பாரிஸில் விபச்சாரி களுக்கு பேட்ஜும் தனி உடையும் கட்டாய மாக்கப்பட்டன. மருத்துவப் பரிசோதனைகள் செய்யப் பட்டன. 
சிவப்பு விளக்குப் பகுதி
ரஷ்ய ஜார் மன்னரின் மனைவி எலீஸாவீடா பெட்ரோவ்னா, ரஷ்யாவில் இருந்த அத்தனை விபச்சாரி களையும் தேடிக் கண்டுபிடிக்க உத்தர விட்டார். இப்படி பிடிபட்டவர்களை சைபீரியாவுக்கு நாடு கடத்தினர். 1875ல் அமெரிக்க அரசு பேஜ் ஆக்ட்டை அமல்படுத்தியது. 

இச்சட்டம் பெண்களை விபச்சாரத்துக் காக நாட்டுக்குள் கொண்டு வருவதைத் தடை செய்தது. 1910ல் மேன் ஆக்ட் கொண்டு வரப்பட்டது. 

கட்டாய விபச்சாரம் செய்வதும், விபச்சாரத்துக்காக பெண்களைக் கடத்துவதும், பதுக்கி வைப்பதும் குற்றங்களாக அறிவிக்கப் பட்டன. கிறிஸ்துவ யூனியனின் அழுத்தத்தினால் 1910 முதல் 1911 வரை அமெரிக்கா வில் விபச்சாரம் தடை செய்யப்பட்டது. 

ஆனால் தற்காலிக விபச்சார விடுதிகள் ஆங்காங்கே முளைத்தபடி இருந்தன.  நியூயார்க்கில் விலை மாதுகள் வெளிப் பார்வைக்கு கோரஸ் பாடும் தொழில் செய்வது போல் காட்டிக் கொண்டனர். 
1920களில் ஜெர்மனி, ஆஸ்திரியா, ஹங்கேரி, இத்தாலி நாடுகளில் விபச்சார விடுதிகள் தடை செய்யப் பட்டன. 1949ல் பாரிஸில் தடை வந்தது. 

1932ல் இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பான் கைப்பற்றிய பகுதிகளி லிருந்து 3 லட்சம் பெண்களை தம் படை வீரர்களுக்கு விபச்சாரம் செய்ய பணியமர்த்தியது. 
இது ஜப்பானை இன்றளவும் மன்னிப்பு கேட்க வைத்துக் கொண்டிருக்கிறது. 1955ல் Moonlight Bunny Ranch என்ற புகழ்பெற்ற விபச்சார விடுதி அமெரிக்காவின் நெவாடாவில் திறக்கப் பட்டது. 

20 வருடங்கள் கழித்து நெவாடாவில் விபச்சாரம் சட்ட பூர்வமாக்கப் பட்ட பின் இவ்விடுதி லைசன்ஸ் பெற்று இயங்கத் தொடங்கியது. 1999ல் ஸ்வீடன் உலகில் முதன் முறையாக விபச்சாரத்தை பெண்களுக்கு எதிரான வன்முறையாக அறிவித்தது. 

விபச்சாரத்தில் ஈடுபட்டிருந்த பெண்களை வேறு பணிகளுக்கு மாற்ற முயற்சி செய்யப்பட்டது. அங்கே செக்ஸை விற்பது குற்றம் அல்ல… 

ஆனால் செக்ஸை வாங்குவது குற்றம்! 2000ல் நெதர்லாந்தில் விபச்சாரிகள் குறிப்பிட்ட வயதிற்குள் இருந்து லைசென்ஸ் பெற்றிருந்தால் மட்டும் விபச்சாரம் செய்ய அனுமதிக்கப் பட்டது. 

2002ல் ஜெர்மனி, கஸ்டமருக்கும் விபச்சாரிக்கும் எழுத்து பூர்வ ஒப்பந்தம் இருந்தால் அனுமதித்தது. மதுரையில் விலை மகளிர் இருந்ததாக சிலப்பதிகாரம் சொல்கிறது. 

அரசவை களில் ‘கணிகைகள்‘ என்ற பெயருடன் செல்வாக்கு செலுத்தினர் இந்த வகைப் பெண்கள் சிலர். பல மன்னர்கள் இவர்களுக்கு உயரிய இடத்தை வழங்கி யிருந்தனர்.
செக்ஸை வாங்குவது குற்றம்
இந்தியாவில் 16 மற்றும் 17ம் நூற்றாண்டு களில் கோவாவில் ஜப்பானிய அடிமைப் பெண்களை வைத்து போர்த்து கீசியர்கள் விபச்சார விடுதிகளை நடத்தினர்.  

18 மற்றும் 19ம் நூற்றாண்டுகளில் கிழக்கிந்தியக் கம்பெனி ஐரோப்பா மற்றும் ஜப்பானி லிருந்து பெண்களை இந்தியாவில் இறக்குமதி செய்து விபச்சார விடுதிகளை ஏற்படுத்தியது. 

1956ல் முறைகேடான விபச்சாரத் தடுப்புச் சட்டம் இந்தியாவில் செக்ஸ் தொழிலைத் தடை செய்திருந் தாலும், பல பகுதிகளில் விபச்சாரம் நடை முறையில் இருந்து வருகிறது. 

பிரிட்டிஷ் ஆட்சியில் நிறுவப்பட்ட மும்பையின் காமாத்திபுரா இன்று இந்தியாவின் மிகப் பெரிய சிவப்பு விளக்குப் பகுதியாக விளங்கி வருகிறது. 
கொல்கத்தா வின் சோனாகாஜி விபச்சாரப் பகுதி பற்றிய Born into Brothels என்ற டாகுமெண்டரி 2004ல் ஆஸ்கர் விருது பெற்றது. நளினி ஜமீலா என்ற பாலியல் தொழிலாளி, தன் சுயசரிதையை நூலாக வெளி யிட்டுள்ளார். இது தமிழிலும் வெளியானது. 

இதே போல கலைவாணி என்பவரது ‘ஒரு பாலியல் தொழிலாளி யின் கதை’ என்ற சுய சரிதையும் கவனிக்கத்தக்க பதிவு. வருமானம் மட்டுமல்ல; அவமானமும் சேர்த்தே சம்பாதிக்கின்றனர் விபச்சாரிகள்!
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings