கால் நரம்பு சுற்றிக் கொள்ளும் பிரச்னை என்பது, கால்களில் உள்ள நரம்புகள் புடைத்துக் கொள்வது தான். ஆரோக்கியமான கால்களில் உள்ள நரம்புகள் இருதயத்தி லிருந்து செலுத்தப்படும் இரத்தத்தை ஒரே சீராகச் செல்ல அனுமதிக்கும்.
அதே போல கால்களி லிருந்து இதயத்திற்கு இரத்த ஓட்டம் சீராக நடைபெற வழி வகுக்கும். இதற்கு கால் நரம்புகளில் உள்ள வால்வுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
இவை பழுதடைந்தால், நரம்பு களில் அடைப்பு ஏற்பட்டு, அவை கால் களிலேயே தங்கிவிடும். இதனால் கால்கள் பாதிக்கப்படும்.
அல்லது கடுமையான வலி ஏற்படுத்தும். கால் நரம்பு களில் இருந்து இரத்தம் மீண்டும் இருதயத் திற்கு செல்லாத நிலையில் கால்கள் வீக்கமடை யும்.
அல்லது கடுமையான வலி ஏற்படுத்தும். கால் நரம்பு களில் இருந்து இரத்தம் மீண்டும் இருதயத் திற்கு செல்லாத நிலையில் கால்கள் வீக்கமடை யும்.
இவ்விதம் கால் நரம்புகளில் ரத்தம் தேங்குவதால் நரம்புகள் சுருண்டு கொள்ளும். இதைத்தான் வெரிகோஸ் வெயின் என்று ஆங்கிலத்தில் அழைப்பார்கள்.
இவர்களது கால்கள் வீக்க மடைவதுடன், நரம்புகள் சுருண்டு கொண்டிருப்பதை யும் காண முடியும். இரத்தம் தேங்கி விடுவதால் நரம்புகள் கருநீல நிறத்தில் காட்சி அளிக்கும்.
ஆரம்ப நிலை என்றால், சிறிய அளவில் மாறுபட்ட நிறத் திலான கோடுகள் சிலந்தி வலை போன்று காட்சியளிக்கும். பெரும்பாலோர் இது வெறும் தோல் சம்பந் தப்பட்ட பிரச்னை என்று நினைக்கிறார்கள்.
ஆனால் இது மருத்துவ ரீதியில் தீர்க்கப்பட வேண்டிய ஒரு நோய். நரம்புகள் சுற்றிக் கொள்ளும் பிரச்சினை ஏற்பட்டால் கடுமையான வலி தோன்றும். சில சமயங்களில் உடலில் மிகுந்த களைப்பு ஏற்படும்.
இந்நோய் மிகவும் முற்றிய நிலையில் தோலின் நிறமே மாறும். தோலின் மீது கொப்புளங்கள் தோன்றும். கால் களிலும், கணுக் கால்களிலும் கொப்புளங்கள் தோன்றும்.
கொப்புளங்களி லிருந்து சில சமயம் இரத்தம் வெளியேறும். சில சமயங்களில் இரத்தக் கட்டிகள் நரம்புகளில் ஏற்படக்கூட வாய்ப்புண்டு.

எத்தகைய பெண்களுக்கு கால் நரம்பு சுற்றிக் கொள்ளும் பிரச்சினை ஏற்படும்?
உடல் பருமனான பெண்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள், அதிலும் குறிப்பாக அதிக குழந்தைகள் பெறும் தாய்மார்களுக்கு இப்பிரச்சினை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
சில பெண்களுக்கு கருவுற்ற காலத்திலேயே கால்களில் நரம்புகள் சுற்றிக் கொள்ளும் பிரச்னை ஏற்படும். குழந்தை பிறந்தவுடன் இந்த நரம்புகள் மறைந்துவிடும். ஆனால் குழந்தை பெற்ற பின்னரும் தொடரும்.
பெற்றோர்களில் யாரேனும் ஒருவருக்கு இப்பிரச்னை இருந்தால் குழந்தை களுக்கு இந்நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு மிக மிக அதிகம். கால் நரம்பு சுற்றிக் கொள்ளும் பிரச்னை ஏற்படாமல் தடுப்பது எப்படி?
இதைத் தடுப்பது மிகவும் கடினமானது. காரணம், மனிதர்கள் கால்களில் தானே நடக்கிறோம்? இருப்பினும் இந்நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ள சிலர் முன் கூட்டியே நடவடிக்கை எடுப்பதன் மூலம் அதைத் தடுக்க முடியும்.
உடல் எடையைக் கட்டுப்பாட்டில் வைத் திருத்தல்.நீண்ட நேரம் நின்றபடியே பணிபுரிவதைத் தவிர்ப்பது. நார்ச் சத்து நிறைந்த உணவு வகைகளை அதிகம் உண்பது.
உடல் எடையைக் கட்டுப்பாட்டில் வைத் திருத்தல்.நீண்ட நேரம் நின்றபடியே பணிபுரிவதைத் தவிர்ப்பது. நார்ச் சத்து நிறைந்த உணவு வகைகளை அதிகம் உண்பது.
கால்களில் எப்போதும் காலுறை அணிவது என இப்பிரச்னை வராமல் தடுக்க முடியும்! கால் நரம்பு சுற்றிக் கொள்ளும் பிரச்னை ஏற்பட்டால் அதற்கு அறுவை சிகிச்சை ஒன்றுதான் தீர்வா? வேறு மாற்று வழிகள் ஏதேனும் உண்டா?
இந்தப் பிரச்னைக்கு அறுவை சிகிச்சை மட்டுமே தீர்வு இல்லை. நோயின் தீவிரத் தன்மையைப் பொறுத்து பல்வேறு சிகிச்சை முறைகள் உள்ளன.
நரம்பு முடிச்சு நோய் வர காரணம் !