நீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கு செய்ய வேண்டியவை
தகுந்த ஒழுங்கான மருத்துவச் சிகிச்சை பெறல்.
தகுந்த உணவுப் பழக்கத்தை கடைப்பிடித்தல்.
ஒழுங்கான உடற்பயிற்சி செய்தல்.
மனவருத்தத்தை குறைப்பதற்கான பயிற்சிகள் மேற்கொள்ளல்.
தகுந்த ஒழுங்கான மருத்துவச் சிகிச்சை பெறல்:
நீரிழிவு உடையோர் வைத்தியரின் ஆலோசபடி ஒழுங்கான மருத்துவச் சிகிச்சை பெறுதல் வேண்டும். நீரிழிவை கட்டுப்பாட்டில் வைத்தி ருப்பதில் மாத்திரைகள் முக்கிய இடத்தை வகிக்கின்றது.
வைத்திய ஆலோசனைப்படி மாத்திரைகள் பாவிக்காவிடின் நீரிழிவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியாது. மாத்திரை எவ்வாறு எமது உடலில் செயற்படு கின்றது?
மூன்று வகைகளாக செயற்படுகின்றன.
ஒவ்வொரு வகையான மாத்திரைகளும் வெவ்வேறு விதமாக செயற்படுவதன் மூலம் நீரிழிவு கட்டுப் படுத்தப் படுகின்றது. இது நீரிழிவு வகைக்கு ஏற்பவும் நீரிழிவு நோயாளிக்கு ஏற்பவும் வேறுபடும். இதனை வைத்தியர் தீர்மானிப்பார்.
கலங்கள் இன்சுலின் பயன்படுத்துவதை தூண்டும்.
இது எமது உடற்கலங்கள் இன்சுலினை பயன்படுத்துவதை தூண்டும். இதன் மூலம் இரத்தத்தில் உள்ள குளுக்கோஸை உடற்கலங்கள் பயன்படுத்து கின்றது.
இதனால் நீரிழிவு கட்டுப்பாட்டில் வைத்திருக்கப் படுகின்றது. இவ்வகை யான மாத்திரைகள் பொதுவாக உடற்பருமன் கூடியவர் களுக்கு வழங்கப் படுகின்றது.
இன்சுலின் சுரப்பைத் தூண்டும்.
இது எமது உடலில் இன்சுலின் ஓமோன் சுரப்பதை அதிகரிக்கும். இவ்வகையான மாத்திரைகள் பொதுவாக உடற்பருமன் குறைந்தவர் களுக்கு வழங்கப் படுகின்றது.
மாப்பொருள் சமிபாடைவதற்கு குறைக்கும்.
இது எமது சமிபாட்டுத் தொகுதியில் சில வகை மாப்பொருள் சமிபாடு அடைவதை குறைக்கின்றது. இவ்வகையான மாத்திரைகள் பொதுவாக உடற்பருமன் கூடியவர் களுக்கு வழங்கப் படுகின்றது.
நீரிழிவு என்றால் என்ன?
நீரிழிவு நோயின் அறிகுறிகள் !
நீரழிவு நோயினால் ஏற்படும் சிக்கல்கள் (Complications) !
நீரிழிவு நோயினை ஆரம்பத்திலேயே இனம் காண்பது எவ்வாறு?
இரத்தத்தில் குளுக்கோஸின் அளவு குறைவதற்கு காரணம் !
நீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் வைக்க !
இன்சுலின் மருந்து போடுவது எப்படி?
இன்சுலின் போடும் முன் கவனிக்க வேண்டியவை !
பார்வையைப் பறிக்கும் நீரிழிவு !
நீரிழிவு நோயினை ஆரம்பத்திலேயே இனம் காண்பது எவ்வாறு?
இரத்தத்தில் குளுக்கோஸின் அளவு குறைவதற்கு காரணம் !
நீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் வைக்க !
இன்சுலின் மருந்து போடுவது எப்படி?
இன்சுலின் போடும் முன் கவனிக்க வேண்டியவை !
பார்வையைப் பறிக்கும் நீரிழிவு !
Thanks for Your Comments